மாநகராட்சிப் பள்ளிகளில் நுண்கலை கூடம்
By dn
First Published : 08 February 2014 10:34 AM IST
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் நுண்கலை கற்பிக்கும் கலைக் கூடங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.
இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்தி:
2013-14-ஆம் ஆண்டு மாநகராட்சி பட்ஜெட்டில் மாநகராட்சி பள்ளிகளில் நுண்கலைகள் கற்பிக்கும் கலைக்கூடங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இதன்படி, முதல்கட்டமாக ட்ரஸ்ட்புரம் சென்னை நடுநிலைப்பள்ளி, ஜி.பி.டபள்யூ காலனி சென்னை நடுநிலைப்பள்ளி, நொச்சிக்குப்பம் சென்னை தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் கலைக்கூடங்கள் அமைக்கப்பட்டன. ட்ரஸ்ட்புரம் சென்னை நடுநிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் மேயர் சைதை துரைசாமி இந்த கலைக் கூடங்களைத் திறந்து வைத்தார். மேலும் 5 பள்ளிகளில் நடனம், நாடகம், இசை, சிற்பம் போன்ற கலைகளை வளர்க்கும் கலைக்கூடங்களும், 2 பள்ளிகளில் செராமிக்ஸ், பாட்டரி ஆகியவற்றை கற்பிக்கும் கலைக்கூடங்களும் விரைவில் தொடங்கப்படவுள்ளன.
இந்தத் தொடக்க நிகழ்ச்சியில், துணை ஆணையர் (கல்வி) ரா.லலிதா, மண்டலக்குழு தலைவர்கள் எஸ். சக்தி, எல்.ஐ.சி. மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment