மாநில அமைப்பின் முடிவை ஏற்று அனைத்து ஆசிரியர்களும் கூட்டு நடவடிக்கை குழுவில் கலந்து கொள்ள வேண்டும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
நாகப்பட்டினம், –
மாநில அமைப்பின் முடிவை ஏற்று அனைத்து ஆசிரியர்களும் கூட்டு நடவடிக்கை குழுவில் கலந்துகொள்ள வேண்டும் என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
பொதுக்குழு கூட்டம்
நாகையில் உள்ள தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் முருகபாஸ்கரன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் முத்துக்கிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தங்க.மோகன், பிரபா, பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் லட்சுமிநாராயணன் வரவேற்றார்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:–
அசாம் மாநில மாநாட்டிற்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்து ரத்து செய்ததால் ஏற்பட்ட நஷ்டத்தை மாவட்ட நிதியில் ஈடு செய்யப்படும். வருகிற 5–ந் தேதிக்குள் உறுப்பினர் சேர்க்கையை முடிக்க வேண்டும்.
தணிக்கை அறிக்கை
வருகிற டிசம்பர் 31–ந் தேதிக்குள் அனைத்து வட்ட கிளைகளும் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். மாநில அமைப்பின் முடிவை ஏற்று அனைத்து ஆசிரியர்களும் கூட்டு நடவடிக்கை குழுவில் கலந்து கொள்ள வேண்டும். பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் அலுவலகத்தில் பணியாற்றுவதையும், பணி பதிவேடுகளை வீடுகளில் வைத்து பராமரிப்பதையும் சங்கம் சார்பில் வன்மையாக கண்டிப்பது. இ.எம்.ஐ.எஸ். படிவத்தில் மாணவர்களின் புகைப்படம் இணைக்கும் பணியை செய்ய தலைமையாசிரியர்களை வற்புறுத்தக்கூடாது. அனைத்து வட்டார கிளைகளும் வருகிற 10–ந் தேதிக்குள் தணிக்கை அறிக்கையினை மாவட்டக் கிளையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வட்ட செயலாளர்கள் தாமோரன், பாலசண்முகம், சண்முகசுந்தரம், சரவணன், ராஜேந்திரன், பாலசுப்பிரமணியன் உள்பட சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment