வெள்ளிக்கிழமை தோறும் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு தனித்திறன் தேர்வு நடத்தப்படுகிறது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பேச்சு
சீர்காழி, –
வெள்ளிக்கிழமை தோறும் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு தனித்திறன் தேர்வு நடத்தப்படுகிறது என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பேசினார்.
சைக்கிள் போட்டி
சீர்காழி அருகே திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தஞ்சை மண்டல பள்ளிகளுக்கிடையேயான சைக்கிள் போட்டி தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு நாகை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினர். திருமுல்லைவாசல் ஊராட்சி மன்ற தலைவர் ரவீந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன், உடற்கல்வி இயக்குநர் செல்வகணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் நடராஜன் வரவேற்று பேசினார். விழாவில் மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கலைச்செல்வன், சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்கபூர், சப்– இன்ஸ்பெக்டர் புயல்பாலச்சந்திரன், ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குநர் ராஜதுரை, ரூபா தொண்டு நிறுவன நிறுவனர் கனகசபை ஆகியோர் பேசினர். விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
முதல்–அமைச்சர் கல்வித்துறைக்காக அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மாணவர்கள் கல்வியோடு விளையாட்டு துறையிலும் ஆர்வம் செலுத்த வேண்டும்.
சாதிக்க வேண்டும்
முதல்–அமைச்சர் விளையாட்டு துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பள்ளி அளவில், வட்டார அளவில், மண்டல அளவில், மாநில அளவில், உலக அளவில் சென்னையில் சதுரங்க போட்டியை சிறப்பாக நடத்தினார். மாணவர்கள் ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும். வெள்ளிக்கிழமை தோறும் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு தனித்திறன் தேர்வு நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து தஞ்சை மண்டல பள்ளிகளுக்கிடையேயான சைக்கிள் போட்டியினை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன், மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கலைச்செல்வன் ஆகியோர் கொடியசைத்து போட்டியினை தொடங்கி வைத்தனர். விழாவில் உடற்கல்வி இயக்குநர்கள் பிரபாகரன், செல்லதுரை, முரளிதரன், இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் மீனா, ஊராட்சி செயலர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் தஞ்சை, நாகை, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவ– மாணவிகள் 100–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் இளையராஜா ஆத்மநாபன் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment