மலையும் மலைசார்ந்த தொழில்கள் நிறைந்த பகுதியான புதுக்கோட்டை மாவட்டம் அன்ன வாசல் அருகேயுள்ள மண்ணவேளாம் பட்டியில் 7.5 ஏக்கரில் 2007-ல் தரம் உயர்வு பெற்று புதிய இடத்தில் தேவையான கட்டி டங்கள், அடிப்படை வசதிகளுடன் அரசு உயர் நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது.
தரிசு நிலத்தில் வெட்ட வெளியாக இருந்த பள்ளி வளாகத்தை சோலை யாக மாற்றிட பள்ளி தொடங்கிய நாளில் இருந்தே மரம் வளர்ப்புப் பணியிலும் ஈடுபடத் தொடங்கினர் பள்ளி நிர்வாகத்தினர்.
மலைவேம்பு உள்பட 1250 மரங்கள்
அதன்படி, தற்போது 135 மாணவிகளுடன் 263 பேர் படிக்கும் இப்பள்ளியில் வேம்பு, புங்கன், சரக்கொன்றை, மயில்கொன்றை, வாகை, செம்மரம், அத்தி, இலுப்பை, மலை வேம்பு, உதியன், மாவிலிங்கம் உள்ளிட்ட சூழலைக் காக்கும் 1250 மரங்கள் புவிக்கு குடையாக உள்ளன. பள்ளியில் பயிலும் மாணவர்களைவிட 5 மடங்கு அதிகமாகவே மரங்கள் இங்கு உள்ளன.
மேலும், இப்பள்ளியில் மருத்துவக் குணம் கொண்ட தூதுவளை, கீழாநெல்லி, தும்பை, குப்பைமேனி, பிரண்டை, ஆடாதொடா, அருகம்புல், முடக்கத்தான், சிறியாநங்கை போன்ற கிராமங்களில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் மூலிகை செடிகளைக் கொண்டு வந்து விளக்கத்துடன் மூலிகைத்தோட்டமும், பள்ளி மதிய உணவுக்குத் தேவையான காய்கறி செடிகளும் தோட்டமாகப் பராமரிக்கப்படுகின்றன.
இவைகளைப் பாதுகாக்க மாணவ, மாணவிகளை வேளாண் மற்றும் சுகாதாரக் குழு என 2 குழுக்களாகப் பிரித்து, அவர்களை காவிரி, தாமிரபரணி, மகாநதி, கங்கை என வகைப்படுத்தி ஓய்வுநேரங்களில் மரங்கள், தோட்டப் பயிர்களுக்கு தண்ணீர் ஊற்றுவது, மரங்களைப் பாதுகாப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளச் செய்கின்றனர். இதன்மூலம் பள்ளி பசுமைப் பள்ளியாக மாறியதோடு மட்டுமில்லாமல் மாணவர்கள் கல்வி வளர்ச்சியுடன், இயற்கை வளம் குறித்த அறிவும் பெறுகின்றனர்.
பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராம கல்விக் குழுவினர், கிராம மக்களைக் கொண்டு நடத்தப்படும் மற்ற விழாக்களோடு சுற்றுச்சூழல் தினம், ஓசோன் தினம், இயற்கை பாதுகாப்பு தினம், மாசுக் கட்டுப் பாட்டுத் தினம், எரிசக்தி பாதுகாப்பு தினம், வனநாள் போன்ற இயற்கை சார்ந்த நிகழ்ச்சி களையும் பள்ளியில் நடத்துகின்றனர்.
இந்நிகழ்ச்சிகளில் மரங்களை பள்ளியில் வளர்ப்பதோடு ஒவ்வொருவரது வீடுகளி லும் வளர்க்க வேண்டுமென்ற அவசியத்தை யும் சூழலுக்காக அர்ப்பணிப்புப் பணி யில் ஈடுபட்டுள்ள மாணவ, மாணவிகளும் பாராட்டப்படுகின்றனர்.
“கிராம மக்கள் மரங்களின் மகத்துவத் தைப் புரிந்துகொண்டதால் விடுமுறை நாள்களில், கிராம மக்களே மரங்களைப் பாதுகாக்க ஒத்துழைக்கின்றனர். நாட்டின் எதிர்காலமே வகுப்பறையில்தான் தீர்மானிக் கப்படுவதால் மாணவர்களிடையே கல்வி யைக் கற்றுக்கொடுப்பதோடு மட்டுமில்லா மல் இயற்கை வளங்களையும் சூழலை யும் காப்பதும் நமது கடமை என்பதை மாணவர்கள் உணரவேண்டும் என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ். பாபு.
No comments:
Post a Comment