ஐகோர்ட் கிளை அதிரடிஆசிரியர் நியமனம் தாமதமாகும் தகுதித் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர முடியாதுகருத்துகள்
மதுரை: 'ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏற்படுவதால் ஆசிரியர் தகுதி தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்வதை ஏற்க முடியாது' என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 2012 பிப்ரவரி 18ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில், 4 கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்கக்கோரி ராஜேஸ்வரி உட்பட 10 பேர் ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை நீதிபதி எஸ்.நாகமுத்து விசாரித்தார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தேர்வு முடிந்ததும் தற்காலிக விடை பட்டியல் வெளியிடப்பட்டு ஆட்சேபணை கோரப்படுகிறது.
ஆட்சேபணைகள் பரிசீலிக்கப்பட்டு இறுதி விடைப்பட்டியல் வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் விடைத்தாள் திருத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது. பிப்ரவரி மாதம் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் நவ. 5ல் வெளியிடப்பட்டது. இத்தேர்வில் சில கேள்விகளுக்கான பதில்கள் தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனால், ஆசிரியர் நியமனம் தடைபட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு முறை பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதியான ஆசிரியர்கள் கிடைப்பதில்லை என்ற சூழல் உள்ளது. போதிய ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சில பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். தகுதி தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி மற்றும் பதில்களை ஆய்வு செய்து, அவற்றில் சரியில்லாத கேள்வி, பதில்களுக்கு உரிய மதிப்பெண் வழங்க கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தேர்வுத்தாளை மறுமதிப்பீடு செய்ய ஒரு மாதத்திற்கு மேலாகும். அதன் பிறகு நியமனப்பணிகள் துவக்கப்படும். எனவே, ஆசிரியர் நியமனத்தை மேலும் தாமதப்படுத்தும் இதுபோன்ற வழக்குகளை இனிமேல் ஊக்குவிக்க முடியாது. தேர்வு முடிவுகள் வெளியானதும் தேர்வு எழுதியவர்கள் நிவாரணம் பெறுவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. அந்த அவகாசம் முடிந்துவிட்டது.
இனிமேலும், தகுதி தேர்வு தொடர்பான வழக்குகளை அனுமதித்தால், இது முடிவில்லாத பிரச்னையாக தொடரும். மனுக்களை அனுமதித்தால் ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டு மாணவர்கள் பாதிக்கப்படுவது அதிகமாகும். எனவே இது தொடர்பான மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்
|
Todays Educational News
கல்வி செய்தி
முக்கிய செய்திகள் – Google செய்திகள்
BBCTamil.com | இந்தியா
FLASH NEWS
விகடன்-தினத்தந்தி கல்வி செய்திகள்
முக்கிய செய்திகள்
மேலும் கல்வி செய்திகள்
Tamilnadu Teachers friendly blog
தினகரன் கல்வி செய்திகள்
தமிழ் முரசு செய்திகள்
தினகரன் முக்கிய செய்திகள் --
TEACHER TamilNadu
தமிழ் முரசு முக்கிய செய்திகள்
Dinamani
Daily Thanthi
கல்வி அஞ்சல்
புதிய தலைமுறை தொலைக்காட்சி
Thursday, December 05, 2013
ஐகோர்ட் கிளை அதிரடி ஆசிரியர் நியமனம் தாமதமாகும் தகுதித் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர முடியாது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment