அரபி பாடசாலையில் தங்கிப் படித்து வரும் 6 வயது சிறுவனுக்கு இஸ்திரிப் பெட்டியால் சூடு வைத்து சித்திரவதை செய்ததாக, அப் பாடசாலையின் நிர்வாகி முகமது ஷேக் பரீத் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் நகரிலுள்ள கே.என்.பி. காலனி 3-வது வீதியை சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம் (வயது-36). பனியன் தொழிலாளியான இவருடைய மனைவி பெயர் ஜாஸ்மின் (வயது-24). இவர்களுக்கு இப்ராஹீம் (வயது-6), முகமது பாரூக் (வயது-5), பர்ஷானா (வயது-3) என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர்.
தங்களது முதல் மகன் இப்ராஹீமை, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக மங்கலம் அருகே உள்ள அக்ஹாரபுதூரில் செயல்பட்டுவரும் ஒரு அரபி பாடசாலையில் தங்கிப் படிப்பதற்காக அங்குள்ள விடுதியில் சேர்க்கப்பட்டார். ஏற்க்கவவே, ஜாஸ்மின் அவர்களின் சகோதரியின் இரு குழந்தைகளும் அங்கு தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜாஸ்மின் சகோதரியின் கணவர் ஜாகீர் உசேன் என்பவர் திங்கள்கிழமை அரபி பாடசாலைக்கு குழந்தைகளை காண சென்றுள்ளார். அப்போது, இப்ராஹீமை பார்க்க அவருக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. அவர் தொடர்ந்து வற்புறுத்தியதன் பேரில், பாடசாலை நிர்வாகிகள் இப்ராஹீமை அழைத்து வந்து காண்பித்தனர்.
அப்போது இப்ராஹீமின் தலை, கண், முதுகு, கால் தொடை உள்பட உடலின் பல பகுதிகளிலும் இஸ்திரிப் பெட்டியால் சூடு வைக்கப்பட்ட காயமும், தளும்பும் காணப்பட்டன.
உடனே, பாடசாலையிலிருந்து இப்ராஹிமை அழைத்துக்கொண்டு வந்த ஜாகீர் உசேன், திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவன் இப்ராஹிமை கொண்டுபோய் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து, மங்கலம் போலீஸில் ஜாகீர் உசேன் புகார் கொடுத்துள்ளார், இதை தொடர்ந்து பாடசாலை நிர்வாகி முகமது ஷேக் பரீத்திடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரனையில், இப்ராஹீம் அதிகாலை 5 மணிக்கு எழாமல் தூங்கிக்கொண்டு இருப்பதாகவும், பள்ளியில் குறும்பு செய்வதாலும் இஸ்திரிப் பெட்டியால் சூடு வைக்கப்பட்டதாக தெரியவந்தது. இதையடுத்து பள்ளி நிர்வாகி முகமது ஷேக் பரீத் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்துள்ளனர்.

No comments:
Post a Comment