தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் செயல்பட்டுவரும் ஒரு தனியார் உருது பள்ளியில் கடந்த ஐந்து மாதங் களாக பெங்களூரு சிவாஜி நகரைச் சேர்ந்த பர்க்கத் மகன் இர்பான் (வயது-10) என்பவர் படித்து வந்தார்.
இந்த நிலையில், அந்தப் பள்ளியில் உருது ஆசிரியராக பணியாற்றி வந்த ஆந்திர மாநிலம், கொங்கட்டா னைச் சேர்ந்த அப்துல் சர்தார் மகன் இதயத்துல்லா (வயது-23), என்பவர், மாணவர் இர்பானை கடந்த 21-ஆம் தேதி அடித்துள்ளார்.
இதில், தலையில் காயமடைந்து மயங்கி விழுந்த மாணவர் இர்பானை அங்குள்ள மருத்துவமனைக்கு அந்தப் பள்ளித் தலைமையாசிரியர் அப்துல் ரஹீத் கொண்டு சென்றார். அங்கு, மாணவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து, மாணவரின் தந்தை பாலக்கோடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ஆசிரியர் இதயத்துல்லாவை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
No comments:
Post a Comment