SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Friday, October 04, 2013

ரேங்க்’ போயி ‘கிரேடு’ வந்தது ஜம்ஜம்ஜம்..! முழு, தொடர் மதிப்பீட்டு முறை வகுப்பறையில் நடக்கிறதா!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபள்ளிகள் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்போம். ஆண்டு முழு வதும் படித்த பாடத்தை குழந்தைகள் இறுதித் தேர்வில் எழுதுவர். அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் அவர்கள் பாஸ் அல்லது பெயில் ஆயினர். பத்து ஆண்டுகள் படித்து பள்ளியை விட்டு வெளியேறும் குழந்தையின் கைகளில் திணிக்கப்பட்ட மதிப்பெண் பட்டியல் அடிப்படையில் ஜீனியசாவும், ஜீரோக்களாகவும் தீர்மானிக்கப்பட்டனர். இந்த தேர்வு முறையில் மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தவோ, மேம்படுத்திக் கொள்ளவோ வாய்ப்பில்லை. இது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவும் இல்லை. புத்தகத்தில் உள்ள விஷயங்களை அப்படியே மனப்பாடம் செய்து எழுதத் தெரிந்தவர்கள் மட்டுமே ஜீனியஸ்களாக பார்க்கப்பட்டனர்.

முழு மற்றும் தொடர் மதிப்பீட்டு முறையில் மாணவர்களின் பாடத்திறன், பழகும் திறன், விளையாட்டு, யோகா மற்றும் கற்பனைத் திறன், புதுமையான சிந்தனைகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மாணவர்களின் புரிதல் திறன், அவர்களது நடத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு நான்கு முறை மதிப்பிடப்படுகிறது. இதில் இரண்டு முறை பெறும் மதிப்பெண் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.  இதனால் மதிப் பீட்டின் போது ஒரு மாணவர் விடுமுறை எடுத்திருந் தாலும் அத னால் பெரிய பாதிப்பு ஏற்படுவதில்லை.

இந்த மதிப்பீட்டு முறை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் உள்ளது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்முறையில் மாணவரின் பாடம் சார்ந்த புரிதல் மற்றும் தனது கூடுதல் திறன்களை வெளிப்படுத்தவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மாணவர்கள் எந்த வேலைக்குப் போனாலும் எப்படியான வாழ்க்கையை தேர்வு செய்வதாக இருந்தாலும் ஸ்மார்ட்டாக சிந்திக்கவும், முடிவெடுக்கவும் தெரிந்திருப்பது அவசியம்.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிராப்ளம் சால்விங் என்ற பெயரில் 70 கேள்விகள் கொடுக்கப்பட்டு அதற்கான தீர்வுகளை மாணவர்கள் கண்டறிகின்றனர். இதில் மாணவர்களின் முடிவெடுக்கும் திறன் எப்படி உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். தேர்வுகள் மூலம் திறன் அறிவதுடன் குறிப்பிட்ட திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறதா? என்பது கவனிக்க வேண்டும்.

தற்போதைய மதிப்பீட்டு முறையில் பாடச்சுமை குறைக்கப்பட்டிருப்பதுடன் மாணவர்கள் உற்று கவனித்து படிக்கவும், அவ்வாறு மாணவர்கள் கவனம் செலுத்தும் திறனுக்கு தகுந்தாற்போல் மதிப்பெண் வழங்கும் முறையும் நடப்பில் உள்ளது. விளையாட்டுப் போல கற்பதுடன், மாணவர்களுக்கு தெரியாமலேயே அவர்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றனர். மாணவரின் ஒட்டுமொத்த திறனும் மதிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வித சிறப்புத் திறன்களைப் பெற்றுள்ளது.

 அந்த தனித்திறன் அடிப்படையில் கடந்த காலங்களில் வகுப்பில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் அவர்களை தரவரிசைப்படுத்த ‘ரேங்க்’ முறை பயன்படுத்தப்பட்டது. இதனால் மாணவர்கள் மத்தியில் போட்டி மற்றும் தாழ்வு மனப்பான்மை உருவானது. மாணவர்களின் சிறு வயதுக்கான மன இயல்புகளைப் பொருட்படுத்தாமல் அவர்களை முதல் மதிப்பெண் எடுக்க வைக்க துரத்தும் வேலையில் மட்டுமே பெற்றோர் கவனம் செலுத்தினர். மார்க் எடுப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கும் பள்ளிகளை மட்டுமே தேடினர். இப்படியான சூழலில் குழந்தைகள் தங்களது குழந்தைத் தன்மையை இழந்து மதிப்பெண் வாங்குவதற்காக, செக்கில் சுற்றும் மாடுகளாக மாற்றப்பட்டனர். இதனால் குழந்தைகள் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகி தங்களது திறன்களை வெளிப்படுத்த முடியாத நிலை உருவானது.

இது போன்ற மோசமான சூழலை மாற்றியமைக்கும் விதமாக புதிய மதிப்பீட்டு முறை பின்பற்றப்படுகிறது. இதில் ரேங்க் முறைக்கு பதிலாக கிரேடு முறை பின்பற்றப்படுகிறது. 90 சதவீதம் வரை மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்கள் ‘ஏ’கிரேடு வழங்கப்படுகிறது. அடுத்தடுத்த நிலைகளுக்கு ‘பி’, ‘சி’ கிரேடுகளும் வழங்கப்படுகிறது. ஏ கிரேடு எனும் பிரிவுக்குள் ஒரு வகுப்பில் 20 குழந்தைகள் கூட வரலாம். இதனால் குழந்தைகளுக்கு இடையில் நட்பு நிலை ஒரே மாதிரி பராமரிக்கப்படுவதுடன் ஒப்பிடல் தவிர்க்கப்படுகிறது. பள்ளிகளில் நடத்தப்படும் பிரேயர் கூட மாணவர்களுக்கு சமூகபார்வையை உண்டாக்கும் விதமாக மாற்றப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வியை முடிக்கும் வரை அனைத்து வகுப்பிலும் இதே மாதிரியான மதிப்பீட்டு முறை பின்பற்றப்பட்டால் நம்பிக்கை மிகுந்த தலைமுறையை உருவாக்க முடியும். இதற்கான திட்டமிடல் மற்றும் மதிப்பீட்டு முறைகளையும், திறன் மேம்பாட்டுக்கான வழிவகைகளையும் பள்ளிக் கல்வித்துறை செய்ய வேண்டும். முழு மற்றும் தொடர் மதிப்பீட்டு முறையை பின்பற்றுவதில் பெரும்பாலான ஆசிரியர்கள் வகுப்பறையில் ஆர்வம் காட்டுவதில்லை.

 இந்த மதிப்பீட்டு முறையில் ஆசிரியர்கள் இன்னும் போதிய விழிப்புணர்வு இன்றியே உள்ளனர். இதனால் ஏற்படும் இடைவெளியானது மாணவர்களையே பாதிக்கும். முழு மற்றும் தொடர் மதிப்பீட்டு முறையை வகுப்பறையில் செயல்படுத்துவதை ஒரு வேலையாகக் கருதாமல் பொறுப்பு மிக்க எதிர்கால சமூகத்தை உருவாக்குவதற்கான கடமையாக உணர்ந்து ஆசிரியர்கள் வகுப்பறையில் செயல்பட வேண்டும்.

இந்த இடைவெளி குறைக்கப்படாமல் முழு மற்றும் தொடர்மதிப்பீட்டு முறையை பின்பற்றுவதாக சொல்லிக் கொள்வதால் எந்தப் பலனும் மாணவர்களுக்கு கிடைக்கப்போவதில்லை.

‘ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஒளிந்திருக்கும் ஜீனியசை கண்டு பிடிப்பது தான் இந்த மதிப்பீட்டு முறையின் நோக்கம்’

எப்.ஏ.ஏ, எப்.ஏ.பி. அப்படின்னா என்ன!

பாடம் நடத்தும் போது மதிப்பிடும் முறை ‘எப்.ஏ.ஏ’, நடத்தி முடிக்கப்பட்ட பின் மதிப்பிடப்படுவது ‘எப்.ஏ.பி’. தொடர் மதிப்பீட்டு முறையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் பாடம் தொடர்பான செயல்பாடுகளுக்கும் மதிப்பெண் வழங்கப்படுகிறது. இன்டர்னலில் மற்ற திறன்கள் அடிப்படையில் 40 மதிப்பெண்களும், பருவத்தின் இறுதியில் பாடம் தொடர்பாக எழுத வேண்டிய தேர்வு சம்மேட்டிவ் அசஸ்மெண்ட் 60 மதிப்பெண்களுக்கும் நடக்கிறது.

No comments: