அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற அரசு, நடப்பு கல்வியாண்டு முதல் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விளைவு கடலூர் மாவட்ட அரசு தொடக்கப் பள்ளிக ளில் இந்த ஆண்டு, முதல் வகுப்பில் ஒரு மாணவர் கூட தமிழ் வகுப்பில் சேரவில்லை.
தனது பிள்ளையும் ஆங்கிலம் படித்து பட்டணத்துக்குச் சென்று கை நிறைய சம்பாதிக்கும் என்று நம்புகிற பெற்றோர்களும், கல்வி கடைகளைத் திறந்து கல்லா கட்ட நினைக்கும் கல்வி தந்தைகளின் மனப்போக்கும்தான் இந்த இழிநிலைக்குக் காரணம்.
தொடக்கப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டு முதல் ஆங்கில வழிக் கல்வியை அரசு அறிமுகம் செய்துள்ளதன் விளைவாக - கடலூர் மாவட்டத்தில் உள்ள 161 அரசு தொடக்கப் பள்ளிகளிலும், 12 நடுநிலைப் பள்ளிகளிலும் முதல் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகம் செய்துள்ளது. இதில் நடப்புக் கல்வியாண்டில் 3 ஆயிரத்து 109 மாணவ, மாணவியர்கள் ஆங்கில வழி முதல் வகுப்பில் சேர்ந்துள்ளனர். மேற்கண்ட 161 தொடக்கப் பள்ளிகளில் தமிழ் வழியில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் - ஆங்கில வழிக் கல்விக்கென கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை எனபதும், மேலும் தமிழ் வழிப் பள்ளிகளில் படிப்பவருக்கு வழங்கப்படும் அனைத்து சலுகையும் ஆங்கில வழி மாணவர்களுக்கும் என்பதும்தான்.
"தமிழ் மொழிக்கான அபாய அறிகுறி இது. தொடக்கப் பள்ளிக ளால் ஆங்கில வழிக் கல்வி வழியை புகுத்தியிருப்பது பண்பாட்டுச் சீரழி வாகும்" என்கிறார் கல்வியாளரும் பேராசிரியருமான பிரபா கல்விமணி.
பத்திரக்கோட்டை அரசு தொடக் கப் பள்ளித் தலைமையாசிரியர் நாகராஜ், "எங்கள் பள்ளியில் இந்த ஆண்டு முதல் வகுப்பில் தமிழ் வழி யில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. ஆங்கில வழி முதல் வகுப்புக்கு 23 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதி களை மேம்படுத்தி, தனியார் பள்ளி களுக்கு இணையாக விதிமுறைக ளைப் பின்பற்றினால் மாற்றம் பெற வாய்ப்புள்ளது’’ என்றார்.
தொடக்கப் பள்ளிகளில் தமிழ் வழி சேர்க்கை குறைந்தது பற்றி கடலூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் குணசேகரன் பேசும்போது, "ஆங்கில வழி சேர்க் கைக்கு இணையாக தமிழ் வழியிலும் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். ஆனால், வருகிற பெற்றோர்கள் ஆங்கில் வழியில்தான் சேர்க்க விரும்புகின்றனர்’’ என்றார்.
தாய் மொழியைத் தவிர்த்து பிற மொழியில் கல்வி கற்கும்போது அந்தக் குழந்தைக்கு புரிதல் தன்மையில் குறைபாடு ஏற்படும் என்பது பெற்றோர்கள் உணரும்போதுதான் தமிழ் வழிக் கல்விக்கு எதிர்காலம்
No comments:
Post a Comment