அக்டோபர் 27,2013,07:13 IST
கோவை: "ஆசிரியர் தினம்" முன்னிட்டு, "தினமலர்" நாளிதழ் சார்பில் நடத்தப்பட்ட, "நான் ஒரு லட்சிய ஆசிரியர்" கட்டுரைப் போட்டியில் தேர்வு பெற்ற, 25 ஆசிரியர்களுக்கு, "லட்சிய ஆசிரியர் -2013" விருது, கோவையில் நேற்று வழங்கப்பட்டது.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள், மிகுந்த ஆர்வமுடன் கட்டுரைகளை அனுப்பியிருந்தனர். அவற்றில், 25 சிறந்த கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு, பரிசளிப்பு விழா, கோவை, காந்திபுரம், ராம்நகரிலுள்ள ஓட்டலில் நேற்று நடந்தது.
கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி, சிறந்த கட்டுரையாளர்களுக்கு விருது, சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசியதாவது: அனைவரிடமும் திறமை உண்டு. அந்த திறமைக்கு அங்கீகாரம் கிடைத்தால் மட்டுமே, அதனை மேம்படுத்த முடியும். பாராட்டு, குழந்தைகள் முதல் அனைவரையும் மகிழ்விக்கிறது. ஆசிரியர்களின் திறமைகளை கண்டறிந்து பாராட்டும் "தினமலர்" நாளிதழுக்கு நன்றி.
துறைகள் எதுவாக இருந்தாலும், குறைகளை சுட்டிக்காட்டும் "தினமலர்" நாளிதழின் நோக்கம் வரவேற்கத்தக்கது. மாணவர்களின் உணர்வுகளை புரிந்து, அவர்களின் மனதைத் தொடும் விதத்தில், ஆசிரியர்களின் செயல்பாடு அமையவேண்டும். பிற பணிகளை போன்றதல்ல, ஆசிரியர் பணி. மனதளவில் ஒன்றுதலோடு பணியாற்றினால் மட்டுமே, சிறப்பாக செய்ய முடியும்.
அழகிய சிற்பங்களை உயிரோட்டத்துடன் எதிர்கால சமூகத்திற்கு கொடுக்கவேண்டியது, ஆசிரியர்களின் தலையாய கடமை. அதை உணர்ந்து சிறப்பாக பணிபுரிய வேண்டும். இவ்வாறு, ஞானகவுரி பேசினார். "லட்சிய ஆசிரியர் - 2013" விருது பெற்ற ஆசிரியர்கள் கூறுகையில், "இன்றைய தினம், எங்களது வாழ்நாளில் மறக்க முடியாத, இனிமையான நாள். முழு ஈடுபாட்டுடன் பணியாற்றிய எங்களைப்போன்ற ஆசிரியர்களை கவுரவித்ததன் மூலமாக, தினமலர் நாளிதழ், ஆசிரியர்களின் கல்விச்சேவைக்கு பக்க பலமாக நிற்கிறது" என்றனர்.
மதுரை: ""நல்ல சமுதாயத்தை உருவாக்கும் களமாக ஒவ்வொரு ஆசிரியர்களும் திகழ வேண்டும்,'' என, மதுரையில் தினமலர் நாளிதழ் நடத்திய "லட்சிய ஆசிரியர்' கட்டுரை போட்டியில், பரிசு பெற்றவர்களை வாழ்த்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி பேசினார்.
தினமலர் நாளிதழ் நடத்திய "லட்சிய ஆசிரியர்- 2013' கட்டுரைப் போட்டியில், வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி, அவர் பேசியதாவது: கட்டுரை போட்டி மூலம் லட்சிய ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களை வெளிக் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ள, "தினமலர்' நாளிதழுக்கு முதலில் பாராட்டும் நன்றியும் தெரிவிக்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் விரும்பி ஏற்கும் பணியாக, ஆசிரியர் பணியை ஒவ்வொருவரும் நேசிக்க வேண்டும். இப்போது, ஆசிரியர்களின் ஒவ்வொரு அசைவும் சமூகத்தில் பதிவாகின்றன. நல்ல விஷயங்களை கற்றுக் கொடுத்து, ஒழுக்கமுள்ள மாணவர்களை உருவாக்கும் உன்னத பொறுப்பு, ஆசிரியர்களுக்குள்ளது. பள்ளி சென்ற பின், ஆசிரியர்கள் சொல்வதுதான் ஒவ்வொரு மாணவர்களுக்கு வேத வாக்கு. புத்தகத்தில் உள்ளதை மட்டும் அவர்களுக்கு கற்றுக் கொடுக்காமல், சிந்திக்கும் திறனையும் வளர்க்க செய்ய வேண்டும். அனைத்து ஆற்றலும் நிறைந்த மாணவர்களாக உருவாக்க வேண்டும். ஒருவரின் சிந்தனை அடிப்படையில் தான் செயல்பாடு அமையும். எனவே, சமுதாயத்தில் பொறுப்புள்ள ஆசிரியர்களுக்கு, "பாசிட்டிவ்' சிந்தனை அவசியம். புதிய விஷயங்களை தாங்கள் கற்றுக்கொண்டு, மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மாணவர் சமுதாயம் இல்லை என்றால், ஆசிரியர் சமுதாயம் இல்லை. இன்றைக்கு ஆசிரியர்களுக்கு போதிய சம்பளம் வழங்கப்படுகிறது. அதற்கேற்ப அவர்களின் அர்ப்பணிப்பு பணியும் அதிகரிக்க வேண்டும். மாணவர்களின் செயல் வடிவம் தான் ஆசிரியர்கள். நல்ல சமூகத்தை உருவாக்கும் களமாக பள்ளி வளாகங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஒழுக்கமான மாணவர்களை உருவாக்க உறுதியேற்க வேண்டும். "லட்சிய ஆசிரியர்' விருது பெற்ற நீங்கள் எழுத்தில் (கட்டுரையில்) தெரிவித்துள்ளது போல், செயலிலும் ஈடுபட்டு, நல்ல மாணவர்களை உருவாக்க பாடுபட வேண்டும், என்றார். மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த 33 ஆசிரியர்களுக்கு "தினமலர்' கேடயம் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.
பரிசு பெற்ற ஆசிரியர்கள்:
ரா. திரேசா, ஆர்.சி., ஆரம்ப பள்ளி, ஞானஒளிவுபுரம், மதுரை, எல்.சாய்கீதா, பாலமந்திரம் மேல்நிலைப் பள்ளி, மதுரை, எஸ்.உமாமகேஸ், இதயம் ராஜேந்திரன் உறைவிட மேல்நிலைப் பள்ளி, மதுரை, த.சார்லஸ் வேளாங்கண்ணி, செவன்த்டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக் பள்ளி, மகபூப்பாளையம், மதுரை, பீ. பாத்திமா ரம்யா, டால்பின் பள்ளி, மதுரை, கே. அமுதா, அரசு மேல் நிலைப் பள்ளி, உசிலம்பட்டி, ஆர்.ராமகிருஷ்ணன், ஜெயராஜ் நாடார் மேல்நிலைப் பள்ளி, நாகமலை புதுக்கோட்டை, ச.ந.சந்திரசேகரன், அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளி, உத்தங்குடி, பொ.காசிராஜன், சத்தியநாடார்கள் உயர்நிலைப் பள்ளி, சாத்தங்குடி, தா.காட்வின் வேதநாயகம் ராஜ் குமார், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அலங்காநல்லூர், மு.ராமாத்தாள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தும்பலப்பட்டி, கா.மகமூதா, அரசு மேல்நிலைப் பள்ளி, வத்தலக்குண்டு, மு.பாலாஜி, அரசு மேல் நிலைப் பள்ளி, கோம்பைப்பட்டி, டி.ஜான்சன், ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி, விருப்பாச்சி, தீ.சித்ராதேவி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சித்தரேவு, கே.மணிமாலா, முத்தையா ஆரம்பப்பள்ளி, அல்லி நகரம், தேனி, ப. கார்மல் மேரி, தி ஹைரெஞ் பள்ளி, மாட்டுப்பட்டி, மூணாறு, எஸ்.அனிதா, தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தேனி, ஜி.வாசகர், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, கோணாம்பட்டி, மா.ஈஸ்வரன், அரசு மேல் நிலைப் பள்ளி, பூதிப்புரம், போ. பாண்டீஸ்வரி, ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கமுதி, பி.மகாதேவன், வ.உ.சி., மெட்ரிக் பள்ளி, பரமக்குடி, மா. விமலாதேவி, ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளி, பரமக்குடி, ஏ.ராபியாபேகம், சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப் பள்ளி, கீழக்கரை, ஆர்.வெங்கடேசன், அரசு மேல் நிலைப் பள்ளி, அழகன்குளம், வ.தெய்வானை, ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் மேல்நிலைப் பள்ளி, கீழச்சிவல்பட்டி, ச.சசிகலா, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, டி.நடுவி கோட்டை, லோ. மங்கையர்க்கரசி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, திருமலை, இ.பெஞ்சமின், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மரக்காத்தூர், சி.சாமிநாதன், மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், செட்டிநாடு, தி.சசிப்ரியா, கலை மகள் மேல்நிலைப் பள்ளி, திருத்தங்கல், எம்.சைனாராணி சாவித்ரி, எஸ்.எச்.என்., எட்வர்ட் நடுநிலைப் பள்ளி, சாத்தூர், பெ.மாரியப்பன், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பந்தல்குடி, அருப்புக்கோட்டை, ச.மரிய சின்னம்மாள் பிரவீனா, தெலுங்கு குலாலர் ஸ்ரீசூளை விநாயகர் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர், ஆ.டேவிட், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பாலையம்பட்டி
No comments:
Post a Comment