25ம்தேதி மறியல் போராட்டத்தில் நாகை மாவட்டத்தில் இருந்து 500 ஆசிரியர்கள் பங்கேற்க முடிவு வட்டார செயலாளர் கூட்டத்தில் தீர்மானம்
பதிவு செய்த நேரம்:2013-09-16 10:42:20
நாகை, : கோரிக்கைகளை வலியுறுத்தி சென் னையில் வரும் 25ம்தேதி நடைபெறும் சிறை நிரப்பும் போராட்டத்தில் நாகையில் இருந்து 500 ஆசிரியர்கள் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயலாளர்கள் கூட்டம் நாகை மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட துணை தலைவர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் முத்துக்கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் லட்சுமிநாராயணன் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பிரபா, தங்கமோகன், பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் சித்தார்த்தன், நீலா புவனேஸ் வரி, வட்டார செயலாளர் கள் சண்முகசுந்தரம், இளங்கோவன், பாலசண்முகம், தாமோதரன், முருகேசன், பாலசுப்பிரமணியன், சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
7 அம்ச கோரிக்கை வலியுறுத்தி சென்னையில் வருகிற 25ந்தேதி நடைபெற உள்ள சிறை நிரப்பும் மறியல் போராட்டத்தில் மாவட்டத்தின் சார்பில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொள்வது. வருகிற 26ந்தேதி ஆசிரியைகள் சார்பில் மறியல் போராட்டத்தில் மாவட்டத்தில் இருந்து 200க்கும் மேற்பட் டோர் கலந்து கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள சில உதவித்தொடக்க கல்வி அலுவலகங்களில் முழுமையாக அலுவலக பணியாளர்கள் இருந்தும், ஆண்டு முழுவதும் ஆசிரியர்களை கொண்டு அலுவ லக பணிகளை மேற்கொள் வதை தடுத்து நிறுத்த வேண் டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொருளா ளர் ஜோதி நன்றி கூறினார்

No comments:
Post a Comment