திருநெல்வேலியில் மாணவருக்கு காயம் ஏற்படும் வகையில் அடித்ததாக ஆசிரியர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் உள்ள பாரதிநகரைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் மகாராஜன் (13). இவர், திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்தப் பள்ளியின் ஆசிரியர் தாக்கியதில், மகாராஜனின் வலது கண்ணில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது பெற்றோரும், தமிழ்ப்புலிகள் அமைப்பினரும் திருநெல்வேலி ஆட்சியர் சி.சமயமூர்த்தியை புதன்கிழமை இரவு சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அவரும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில், இதுகுறித்த புகாரின்பேரில் திருநெல்வேலி சாந்தி நகரில் வசித்து வரும் ஆசிரியர் முத்துராம் (43) மீது திருநெல்வேலி சந்திப்பு போலீஸார் இன்று வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment