அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாநில இயக்குனரக உத்தரவை அடுத்து, மாநிலம் முழுவதும் ஆண்டுதோறும் 6 முதல் 14 வயது வரை உள்ள, பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி துவங்கிய இந்தக் கணக்கெடுப்பின்படி 6-10 வயது வரை, 18,216 பேரும், 11 முதல் 4 வரை 29,160 பேரும் பள்ளி செல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக, விழுப்புரம் மாவட்டத்தில் 4,587 குழந்தைகளும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 462 குழந்தைகளும் பள்ளி செல்லாமல் உள்ளனர். மொத்தமுள்ள 47,376 பள்ளி செல்லா குழந்தைகள் தற்போது பள்ளிகளிலும் சிறப்பு மையங்களிலும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment