SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Tuesday, August 13, 2013

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஸ்ரீவில்லிபுத்தூர்


  • விருதுநகர் மறியல் ஆயத்த கூட்டத்திற்கு வரயியலாத ஆசிரிய பெருமக்கள் கூறிய காரணங்களை https://www.facebook.com/testf.srivi/posts/1402561143300307?ref=notif&notif_t=like பதிவிட்ட போது முகநூல் நண்பர் திரு Thangavelu Elanambi அவர்கள் பின்வ்ருமாறு தன் கருத்தை கூறியிருந்தார்.

    Thangavelu Elanambi சங்கங்கள் அனைவரையும் அரவணைத்து செல்வது அவசியம். சங்கங்கள் இப்போது ஜாதிய சங்கங்களாக தான் செயல்படுகின்றன. இப்போ இல்ல எல்லா காலத்திலேயும், மக்கள் இப்போது விழித்து கொண்டார்கள் அவ்ளோ தான். நீங்க மஜாவா இருக்கிரத்துக்கும், ரூம் போட்டு தண்ணி அடிக்கவும் நாங்க சந்தா கொடுக்கணும். கேள்வி மட்டும் கேட்க தெரியுதே, உங்க போதைக்கு நாங்க ஊருகாவா
    18 hours ago • Like

    Thangavelu Elanambi உன் ஜாதிக்காரன் வந்தான் இல்ல, அவனோட சேர்ந்து அடிசிக்கோடா, போடா

    இதனை திருவில்லிபுத்தூர் TNPTF வட்டார செயலாளர் நான் பார்க்கும் முன்பே இதனை பார்த்துவிட்டு, ” PF, SURRENDER போன்றன நான்கு நாட்கள் தள்ளிப்போனால் நம் ஆசிரியர்களிடம் வாங்கும் சடவு சொற்கள் பத்தாது என்று முக நூலிலுமா”, என்றார். அப்போதே இது குறித்தவிரிவான பதிவிட வேண்டும் என் நினைத்ததன் விளைவே இப்பதிவு

    திருவில்லிபுத்தூர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார பொறுப்பாளர்களின் டைரி

    01-08-2013

    10-08-2013 ல் நடைபெற உள்ள ஆயத்த கூட்டத்திற்கு ஆலோசனைக்காக விருதுநகர் பயணம். வீடு திரும்ப இரவு 9.40

    02-08-2013, 3-8-2013 & 4-8-2013

    வருமான வரி 10 ஏ 1 படிவம் தாக்கல் செய்ய வேண்டியது இல்லை என நினைத்த சூழலில் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறியதால் சுமார் 165 ஒன்றிய ஆசிரியர்களுக்கு படிவம் 16ஏ மற்றும் 10 ஏ 1 படிவம் தயாரித்தது உதவி தொ. கல்வி அலுவலரிடமும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடமும் கையொப்பம் பெறப்பட்டது.இப்பணியில் 5 பொறுப்பாளர்கள் ஈடு பட்டனர் இருப்பத்து ஒன்பது பேருக்கு ஆன்லைனில் ஏற்றப்பட்டது. அனைவரும் மூன்று நாடகளும் வீடு வந்து சேர்ந்தது இரவு 11.00 மணி

    05-08-2013

    தயாரிக்கப்பட்ட வருமான வரி படிவங்களை விருதுநகருக்கு ஏழு பேராக கொண்டு சென்று அங்கேயே செய்ய வேண்டிய சில திருத்தங்களை செய்து வருமான வரி அலுவலரிடம் கொண்டு சென்றால் கடையில் வாங்கிய இப்படிவம் செல்லாது. நெட்டில் டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுக்க வேண்டும். அல்லது ஒவ்வொருவராக இவ் அலுவலகம் வந்து பெற்று கொள்ள வேண்டும் என பெரிய குண்டை தூக்கி போட்டு டென்சனாக்கிவிட நாமும் சாம பேத என்ற முறையில் பேசியும் மசியாமல் மாவட்ட பொறுப்பாளர்களை வரவழைத்து பேசி ஒருவழியாக ஒப்பவைத்து படிவங்களை ஒப்படைத்து ஒப்புகைச்சீட்டுகளை பெற்றுக்கொண்டு திருவில்லிபுத்தூர் மண்னை மிதிக்கும்போது இரவு மணி 10-45
    இவ்வாறாக வீட்டில் திருப்பாவை (வசவுதான்) தினம் கேட்டு நமது ஆசிரியர்களுக்கு செய்யும் பணி என்ற இனிய மன நிலையோடு யாரிடமும் ஒரு பைசா பெறாமல் இப்பணி மகிழ்வோடு நிறைவேறியது.

    06-08-13, 07/08/13 & 08-09-13

    மறியல் ஆயத்த கூட்டத்திற்கு நோட்டீசோடு ஒன்றியம் முழுவதும் வெயிலில் அழைந்து அவசியத்தைக் கூறி அனைத்து ஆசிரியர்களுக்கும் அழைப்பு விடுத்தோம்.

    09-08-13

    திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தேரோட்டம் பார்த்த கையொடு மறுநாள் விருதுநகர் மறியல் ஆயத்த கூட்டத்திற்கு வாகன வசதி சாப்பாடு என ஏற்பாடுகள் செய்தோம்

    10-08-2013

    ஆயத்த கூட்டத்திற்கு புறப்படும் வாகனங்கள் முன்பு நின்று கொண்டு கூட்டத்திற்கு வருவார்கள் என நம்பப்பட்ட ஆசிரியர்களுக்கு போன் செய்து அவர்கள் கூறிய காரணங்கள் பலவற்றை சிரமப்பட்டு நம்பி அவர்கள் வராமையை உறுதி படுத்திக்கொண்டு சுமார் எண்பதிற்கும் மேற்பட்டோரோடு கூட்ட அரங்கிற்கு கெத்தோடு நுழைந்தோம்
    பின்பு ஈஸ்வரன் அவர்களின் எழுச்சி உறையை கேட்டதில் சென்னை மறியலுக்கு இதை விட அதிக கூட்டத்தினை திரட்ட வேண்டும் என்ற தெம்போடும் தொடர்ந்து கூட்டு போராட்டம் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய கட்டு இரண்டிற்கு மாற்றப்பட்ட கண்முன் விரிந்த கனவுகளோடு வீடு வந்து சேர்ந்தோம்.

    வீட்டில் மனவியிடம் பக்கத்து வீட்டார், ”மறியலாமுள்ள. டெஸ்மா எஸ்மா வந்துச்சுன்னா உன் வீட்டுக்காரருக்குத்தான் முதல் ஆப்பு” என கொளுத்திய திரியால் ஏற்கனவே எரிந்து கொண்டுள்ள நெருப்பில் கேஸ் லாரிகளையே கொட்டிய வெடிச் சத்தம்

    இது அனைத்து இயக்கப் பொறுப்பாளர்கள் செய்யும் செயல்கள்தான். இதற்காக சக ஆசிரிய நண்பர்களிடம் பெற்ற வாழ்த்து சொற்களை விட உரிமையோடு வாங்கிய சடவுச்சொற்கள்தான் அதிகம். இவ்வாறாகத்தான் முக நூல் நண்பர் Thangavelu Elanambi அவர்களின் வார்த்தைகளையும் பார்க்கிறேன்
    10-08-13 ல் விருதுநகரில் மறியல் போராட்ட ஆயத்த கூட்டம்
    வர இயலாத ஆசிரியர்கள் சொன்ன காரணம்
    பல் வலி
    மகள் லீவில் வந்துள்ளா
    பையனுக்கு கடுமையான காய்ச்சல்...See more
    Like ·  · 
    • Maruthu Pandian thangalin pathil arumai..
      11 hours ago · Like · 1
    • Annadurai Velusamy சண்டையில கிழியாத சட்டை உண்டா? அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா! விட்டுத் தள்ளுங்க தோழர்! பயன் கருதாமல் செய்த உதவி நயன் தூக்கின் நன்மை கடலினும் பெரிது. எல்லோருக்கும் மனப்பக்குவம் மற்றும் குணப்பக்குவம் இருக்குமென்று சொல்ல முடியாது அல்ல

No comments: