கருத்துகள்
சேலம்:சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பச்சப்பட்டி மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு மதிய உணவின் போது வழங்க வேண்டிய முட்டைகளை ஒப்பந்ததாரர்கள் நேற்று காலை தந்துள்ளனர். முட்டைகளை வழக்கம்போல் சத்துணவு பணியாளர்கள் வேக வைத்து உரித்தனர். 30 முட்டைகளை உரித்ததும், அனைத்து முட்டைகளும் கெட்டுப் போனது கண்டறியப்பட்டது. இதனால், நேற்று இப்பள்ளியில் மதிய உணவின் போது முட்டை வழங்கப்படவில்லை. இது குறித்து பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் கூறியதாவது: பள்ளியில் அன்றைய சத்துணவுக்கு தேவைப்படும் முட்டைகள், முதல் நாள் வழங்கப்படுகிறது. இதில் பல நாட்கள் 10 முட்டைகள் வரை கெட்டு விடுகிறது. முட்டை வழங்கும் ஒப்பந்ததாரர் முட்டையை மாற்றித் தரும் போது விடுபட்ட குழந்தைகளுக்கு இரண்டு முட்டைகள் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். பல அரசு பள்ளிகளிலும் ஒப்பந்ததாரர்கள் மூலம் வழங்கப்படும் முட்டைகள் கெட்டுப் போவதாக புகார் தொடர்ந்து வருகிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு முறைப்படுத்த வேண்டும் என பெற்றோர் தெரிவித்தனர்
.
No comments:
Post a Comment