ஊதிய குழு முரண்பாடுகளை களைதல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், மத்திய அரசுக்கு இணையாக அனைத்துப் படிகளையும் வழங்குதல், அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்தல், நிரந்தர ஊதிய விகிதம் பெறாத பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 25 அம்சக் கோரிக்கைகளை வ-யுறுத்தி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் கு.பாண்டியன் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தை தமிழ்நாடு ஏஐடியூசி பொதுச்செயலாளர் டி.எம்.மூர்த்தி முடித்து வைத்தார்.
No comments:
Post a Comment