பாரம்பரிய பள்ளிகளுக்கு குடிநீர் துண்டிப்பு: உயர் மக்கள் பிரதிநிதிகள் அடாவடி
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் ஏராளமான பழம்பெரும் பள்ளிகள் உள்ளன. இங்குள்ள செயின்ட் சேவியர் பள்ளி 1880ம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 130 ஆண்டுகளாக இருந்து வரும் இப்பள்ளியில் சீட் கிடைப்பது கொஞ்சம் அரிது தான். இதனால் இங்குள்ள முக்கிய பிரமுகர்கள், அரசியல் புள்ளிகள் இந்த பள்ளிகளில் சீட் கேட்டு தொந்தரவு செய்வர். ஆனபோதும் இங்குள்ள உயர் மக்கள் பிரதிநிதிகளுக்கு என்று இரண்டு மூன்று சீட்டுகள் கொடுக்கப்படுகிறது. இருந்தபோதும் அவர்கள் கூடுதல் சீட் கேட்டு இந்த பள்ளிக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்துள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம் சீட் தர மறுத்துள்ளது. இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் இந்த பள்ளிக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பை துண்டித்துள்ளனர். இதேபோல் மற்றொரு பழமையான மகளிர் பள்ளியிலும் இதே பிரச்னைக்காக குடிநீர் இணைப்பை துண்டித்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்று உயர் மக்கள் பிரதிநிதிகள் பள்ளிகளில் அடாவடி தனத்தை தடுத்து நிறுத்த கல்வியாளர்களும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment