பணி மாறுதல் கவுன்சிலிங் குளறுபடி ஆசிரியை புகார்:
சிவகங்கை மருதுபாண்டியர் மேல்நிலைப்பள்ளியில் மே 30ல் ஒன்றிய அளவில் இடைநிலை ஆசிரியர் மாறுதல் கவுன்சிலிங் நடந்தது. காளையார்கோவில் ஒன்றியம் காஞ்சரம் பள்ளி காலியிடமாக அறிவிக்கப்பட்டிருந்தது. பணி மூப்பு ஆசிரியர்களை அழைத்தனர். அதே ஒன்றியம், அல்லிவயலில் பணிபுரியும் ஆசிரியை ஜெயமேரிக்கு தகுதி இருந்தும், அவரை விட ஒரு மாதம் பணி மூப்பு குறைந்த மற்றொருவருக்கு மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் புகார் கூறியுள்ளார். அவர் கூறுகையில், ""போதிய தகுதி இருந்தும், அவ்விடத்தை தேர்வு செய்யாத பட்சத்தில், சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் எழுத்து பூர்வ கடிதம் பெற்ற பின்னரே மற்றவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். என்னிடம் கருத்து கேட்காமல் பணி மூப்பற்ற ஆசிரியைக்கு காஞ்சரம் பள்ளிக்கு மாறுதல் வழங்கியுள்ளனர்.அதிகாரிகள் குளறுபடி ஏற்படுத்தி, எனக்கு கிடைக்க வேண்டிய காலியிடத்தை தட்டி பறித்தனர், என்றார்.ஏ.இ.ஓ.,கருப்பையா கூறுகையில்,""தகுதி அடிப்படையில் முதலில் வருவோர் இல்லாவிடில், அடுத்தவருக்கு வாய்ப்பளிக்கப்படும். ஜெயமேரி ஏதோ ஒரு காரணத்திற்காக இருந்து விட்டு பின்னர் தகுதி இருக்கிறது என,மே31ல் என்னிடம் புகார் செய்தார். கவுன்சிலிங் முடிந்த பின், எதுவும் செய்ய இயலாது, என்றார்.
No comments:
Post a Comment