கடலூரில் சுகாதாரம் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை: நகரசபை தலைவர் எச்சரிக்கை
பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, ஜூன் 03, 8:05 PM IST


கடலூர், ஜூன் 3-
கடலூர் நகரசபை தலைவர் சி.கே.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கடலூர் நகரில் 37 அரசு மற்றும் தனியார் பள்ளிகூடங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பள்ளிகூடங்களில் சுகாதார வசதியின்றி செய்படுவதாக புகார்கள் வந்துள்ளது.
ஆகவே பள்ளி கூடங்களில் சுகாதார முறையில் குடிநீர் வசதி செய்து தர வேண்டும். மேலும் 50 மாணவர்ளுக்கு ஒரு கழிப்பறை அமைக்க வேண்டும். மாணவர்கள் படிக்கும் வகையில் காற்றோட்டமான கட்டிடங்கள் இருக்க வேண்டும். பள்ளிகூடங்கள் அருகாமையில் சுகாதாரமற்ற தின்பண் டங்கள் விற்பனை செய்யப்படுவதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும்.
இதுமட்டுமின்றி ஈ மொய்த்த தின்பண்டங்கள் சாப்பிடுவதால் டெங்குகாய்ச்சல், மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்கள் தாக்க கூடிய நிலை ஏற்படுகின்றது. ஆகையால் பாதுகாப்பான முறையில் பள்ளிகூடங்கள் செயல்பட வேண்டும். சுகாதார வசதியின்றி செயல்படும் பள்ளிகூடங்கள் மீது நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும்.
இது பற்றி நகராட்சிக்குட்பட்ட தனியார் மற்றும் அரசு பள்ளி களுக்கு சுற்றிக்கை அனுப்பி வைக்கப்படும். சுகாதார மாக பள்ளிகூடங்கள் உள்ளதா? என்று ஆணையாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்து தக்க நட வடிக்கை எடுக்கப்படும். ஆகையால் பள்ளியின் முதல் வர்கள், தலைமை ஆசிரியர்கள் பள்ளியை முழுவதுமாக சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கவுன்சிலர் கந்தன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


இமெயில்
பிரதி
No comments:
Post a Comment