அரசுப் பள்ளியில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை சேர்ப்பதற்கான கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் அனைவருக்கும் கல்வி இயக்கம் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மற்றும் 6ஆம் வகுப்பில் அரசுப் பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான கூட்டம் புதுக்கோட்டை வட்டார வள மையத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் திரு. இரா.சுவாமிநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மாரிமுத்து, புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் இராமச்சந்திரன், அனைவருக்கும் கல்வி இயக்க உதவித்திட்ட அலுவலர் இராஜேந்திரன், புதுக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட 13 வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் 25 உதவிஃகூடுதல் உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் மற்றும் புதுக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட 154 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்த ஆண்டு புதுக்கோட்டை ஒன்றியத்தில் கண்டறியப்பட்டுள்ள 2274 பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.
இதில் கிராமக் கல்விக் குழு தலைவர், உறுப்பினர்கள், சுய உதவிக்குழுவினர், அரசு சாரா தொண்டு நிறுவ னங்கள் மற்றும் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களை பயன்படுத்தி அரசின் நலத்திட்டங்கள், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை, நன்னெறிக் கல்வி, யோகா, உடற்பயிற்சி போன்றவை பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதை பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
1 முதல் 4 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் முறையும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி முறையும் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு படைப்பாற்றல் கல்வி முறையிலும் பயிற்றுவிக்கப்படுகிறது. பள்ளியின் அருகே மாணவர்களின் செயல்பாட்டினை விளக்கும் பேனர் ஒன்று பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். முன்னதாக புதுக்கோட்டை வட்டார வள மைய மேற்பார்வையாளர் சோ. தங்கராசு அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுநர் ப.பச்சமுத்து நன்றி கூறினார்.

No comments:
Post a Comment