ஆசிரியர் இடமாறுதல் கவுன்சலிங் முக்கிய காலி இடங்களை மறைக்க ஆளுங்கட்சியினர் வசூல்வேட்டை
கருத்துகள்
சேலம்: கடந்த ஆண்டு நடந்த ஆசிரியர் இடமாறுதல் கவுன்சலிங்கின்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் 20க்கும் மேற்பட்ட காலியிடங்கள் மறைக்கப்பட்டன. கவுன்சலிங்கிற்கு சில நாட்களுக்கு முன்பே, நிர்வாக காரணம் என்ற பெயரில், ஆசிரியர் காலியிடங்கள் நிரப்பப்பட்டன.ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், அதிகாரிகளை கவனித்து ஆசிரியர்கள் தங்களுக்கு வேண்டிய காலியிடங் களை மறைத்துவிட்டதாக புகார்கள் கிளம்பின. இந்நிலையில், வரும் 20ம் தேதி இடமாறுதல் கவுன்சலிங் தொடங்க உள்ள நிலையில், இந்த முறையும் முக்கிய காலியிடங்களின் விவரங்களை மறைக்க திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து, அரசுப்பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியது: வெளிப்படையான நிர்வாகத்திற் காக இந்த கவுன்சலிங் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு நடந்த இடமாறுதல் கவுன்சலிங்கின்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய காலியிடங்கள் குறித்த விவரங்கள் வெளிப்படையாக தகவல் பலகையில் காட்டப்படவில்லை. பல ஆசிரியர் களுக்கு, கவுன்சலிங்கிற்கு ஓரிரு நாட்கள் முன்னதாகவே மாறுதல் ஆணை வழங்கப்பட்டது. இந்த ஆண்டும், ஆசிரியர்கள் பலர் ஆளுங்கட்சியினரை அணுகி குறுக்கு வழியில் இடமாறுதல் பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, வட மாவட்டங்களில் பணியாற்றும் தென்மாவட்ட முதுகலை ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்திற்கு மாறுதலில் செல்ல ஸீ3 லட்சம் வரை பேரம் பேசப்படுகிறது. இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஸீ1 லட்சமும், போட்டி ஏற்பட்டால் ஸீ2 லட்சம் வரையிலும் வசூலிக்கின்றனர். இதனால், இந்த ஆண்டும் வெளிப்படையாக கவுன்சலிங் நடத்தப்படுமா? என்பது சந்தேகமாக உள்ளது. இதற்கு பதிலாக, பணம் கொடுத்தால்தான் இடமாறுதல் ஆணை வழங்கப்படும் என, ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக கட்டணம் நிர்ணயித்து விடலாம். இவ்வாறு அரசுப்பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறினர்.இந்த புகார் குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,சில ஆசிரியர்களுக்கு புகார்களின் அடிப்படையிலோ, குடும்பச் சூழல், உடல்நலம் போன்ற பிரச்னைகளின் அடிப்படையிலோ நிர்வாக நலன் கருதி, கவுன்சலிங்கிற்கு முன்பே இடமாறுதல் உத்தரவு வழங்கப்படு கிறது. நிர்வாக காரணங்கள் அடிப்படையில் ஆசிரியர்களை மாறுதல் செய்ய கவுன்சலிங் தேவையில்லை. ஆசிரியர்களும், தங்களுக்கு வேண்டிய இடத்திற்கு செல்ல பல வழிகளையும் கையாளுகின்றனர். கவுன்சலிங் எப்படி நடத்த வேண்டும் என்று அரசு எங்களுக்கு வழிமுறைகள் வகுத்துள்ளதோ அதன்படி செய்கிறோம். இதில், நாங்கள் ஆட்டி வைக்கப்படும் பொம்மைகள் மட்டும்தான், என்றார்.
No comments:
Post a Comment