அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 20-ந்தேதி முதல் பொது மாறுதல் `கவுன்சிலிங்'
பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, மே 10, 10:53 AM IST
சென்னை, மே 10-
அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு 20-ந் தேதி முதல் நடக்கிறது. அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள்) மாறுதல் கலந்தாய்வு 20-ந் தேதி முற்பகலும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் பெற விரும்புவோருக்கு பிற்பகலும் நடக்கிறது.
அரசு நகராட்சி உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள்) மாறுதல் கலந்தாய்வு 21-ந் தேதி முற்பகலும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கவுன்சிலிங் பிற்பகலிலும் நடக்கிறது. அரசு நகராட்சி மேல் நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்திற்குள் மாறுதல்) 22-ந் தேதி முற்பகல் அந்தந்த முதன்மை கல்வி அலுவலகத்தில் நடை பெறுகிறது.
அரசு நகராட்சி மேல் நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) 23ந் தேதி முற்பகல் முதன்மை கல்வி அலுவலகத்தில் நடக்கிறது. பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள் மாறுதல்) 24-ந் தேதி முற்பகல் முதன்மை கல்வி அலுவலகத்தில் நடக்கிறது. பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம்) மாறுதல் கலந்தாய்வு 25-ந் தேதி முற்பகல் நடக்கிறது.
இந்த தகவலை பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார். இதே போல தொடக்க கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு பட்டியலை இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மாறுதல் ஆணை 24-ந் தேதி முற்பகல் வழங்குதல் 25-ந் தேதி முற்பகல், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து உதவி தொடக்க கல்வி அலுவலராக பணிமாறுதல் ஆணை வழங்குதல். 28-ந் தேதி முற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்குதல் பிற்பகல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் மாறுதல் ஆணை வழங்குதல் 29-ந் தேதி முற்பகல் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்குதல் பிற்பகல் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வுகளை வழங்குதல்.
30-ந் தேதி முற்பகல் இடைநிலை ஆசிரியர் ஒன்றியத்திற்குள் மாறுதல் வழங்குதல், பிற்பகல் இடைநிலை ஆசிரியர் மாவட்டத்திற்குள் (ஒன்றியம் விட்டு ஒன்றியம்) மாறுதல் வழங்குதல், 31-ந் தேதி முற்பகல் இடை நிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் வழங்குதல் நடை பெறுகிறது.
No comments:
Post a Comment