SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Wednesday, May 29, 2013

SCHOOL REOPENING POSTPONED

அனைத்து பள்ளிகளும் ஜூன் 10ல் திறப்பு

கருத்துகள்
மாற்றம் செய்த நேரம்:5/29/2013 6:35:52 AM


 கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை ஜூன் 10ம் தேதி திறக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் பள்ளிகளுக்கு கூடுதலாக ஒரு வாரம் கோடை விடுமுறை கிடைத்துள்ளது.ஏப்ரல் 30ம் தேதியுடன் பள்ளிகள் முடிந்து கடந்த 1ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. விடுமுறை முடிந்து  ஜூன் 3ம் தேதி அனைத்து பள்ளிகளையும் திறக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. மே மாதம் முழுவதும் அக்னி நட்சத்திரம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் கடுமையான வெப்பம் நிலவியது. குறிப்பாக மதுரை, திருச்சி, வேலூர், சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களில் வெயில் உச்சத்தை தொட்டது. அதிலும், திருச்சியில் 109.4 டிகிரி வெப்பம் நிலவியது. கடந்த 117 ஆண்டுகளில் தமிழகத்தில் இந்த அளவுக்கு வெப்பம் பதிவானதில்லை. 


பருவமழை பொய்த்துப்போனதால் வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.கடலில் இருந்து தரைப்பகுதி நோக்கி வீசும் குளிர் காற்று வீசாததால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெப்ப காற்று வீசி வருகிறது. இதனால் பள்ளிகளை திறக்கும் தேதியை ஒத்திவைப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வந்தது.புதுச்சேரி அரசு பள்ளிகள் திறக்கும் தேதியை ஜூன் 10ம் தேதி என்று நேற்று முன்தினம் அறிவித்து விட்டது. இந்நிலையில் தமிழக அரசு நேற்று தனது அறிவிப்பை வெளியிட்டது. அதில் கடுமையான வெயில் மற்றும் வெப்ப காற்று காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.இதையடுத்து மாணவர்களுக்கு 7 நாட்கள் கூடுதலாக விடுமுறை கிடைத்துள்ளது
.

ஜூன் 10-ல் பள்ளிகள் திறப்பு

First Published : 29 May 2013 01:36 AM IST
அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 3-ஆம் தேதிக்குப் பதிலாக, ஜூன் 10-ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
2013-14- ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் ஜூன் 3-ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவுவதால் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறக்கும் தேதியை ஒரு வாரம் தள்ளிவைக்க அரசு ஆணையிட்டது.
அதன்படி அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 3-ஆம் தேதிக்குப் பதிலாக ஜூன் 10-ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
இந்த விடுமுறையால் வெறும் 5 வேலை நாள்கள் மட்டுமே இழப்பு ஏற்படும் என்பதால் இது வரும் கல்வியாண்டை எந்த விதத்திலும் பாதிக்காது என பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் கடுமை நீடிப்பதால் பள்ளிகள் திறப்பது ஒரு வாரம் தள்ளிவைப்பு: ஜூன் 10–ந் தேதி திறக்கப்படும் என்று அறிவிப்பு

சென்னை
ஒவ்வொரு ஆண்டும், பள்ளி இறுதி தேர்வுகள் முடிவடைந்ததும் மாணவ–மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுவது வழக்கம்.
கோடை விடுமுறை
மேல்நிலைப்பள்ளிகளில் ஏப்ரல், மே இரு மாதங்களும், ஆரம்பப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மே மாதமும் விடுமுறை இருக்கும். அந்த வகையில், இந்த ஆண்டும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களும், தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மே மாதம் 1–ந் தேதி முதலும் கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிவடைந்து, அனைத்து பள்ளிகளும் ஜூன் மாதம் 3–ந் தேதி (திங்கட்கிழமை) திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
வெயில் கொடுமை
இந்த ஆண்டு கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்னதாகவே, கோடை வெயில் வறுத்தெடுக்க தொடங்கிவிட்டது. சென்னை, வேலூர், திருச்சி, மதுரை, சேலம், தூத்துக்குடி, திருநெல்வேலி என மாநிலம் முழுவதுமே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. கத்திரி வெயில் இந்த மாதம் 4–ந் தேதி தொடங்கியதுதான் தாமதம். வெயில் சுட்டெரிக்க தொடங்கியது.
வேலூர், திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் சர்வ சாதாரணமாக வெயில் 110 டிகிரியை தாண்டியது. சென்னையில் 108 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்த நிலையில், கத்திரி வெயில் நேற்று முடிவடைந்தது. எனினும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. வேலூரில் 105 டிகிரியும், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் தலா 104 டிகிரியும், கடலூரில் 103 டிகிரியும், கரூரில் 102 டிகிரியும், சென்னையில் 100 டிகிரியும் வெயில் பதிவானது.
மாணவ–மாணவிகள் மும்முரம்
இதற்கிடையே, கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் ஜூன் மாதம் 3–ந் தேதி திறக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததால் விடுமுறையை கழிப்பதற்காக வெளியூர்களில் உள்ள உறவினர் வீடுகளுக்கு சென்ற மாணவ–மாணவிகள் தங்கள் வீடுகளுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். பொதுவாக, கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளி திறக்கும் நாளன்று மாணவ–மாணவிகள் அனைவரும் புதிய வகுப்புகளுக்கு புத்தாடை அணிந்து செல்வது வழக்கம். அதன்படி, கடைகளுக்கு சென்று புதிய ஆடைகளை வாங்கி வருகின்றனர்.
பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றம்
இந்த சூழ்நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், பள்ளிகள் திறக்கும் தேதி சற்று தள்ளிவைக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. கடும் வெயிலை கருத்தில் கொண்டு, மாணவர்கள் நலன் கருதி முன்பு பல ஆண்டுகளில் பள்ளி திறக்கும் தேதி ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. அதனால், இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பது தாமதமாகலாம் என்று மாணவ–மாணவிகளும், ஆசிரியர்களும் எதிர்பார்த்தனர். அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும் வகையில், பள்ளிகள் திறக்கப்படும் தேதி ஒருவாரம் தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் கே.தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
ஜூன் 10–ந் தேதி திறப்பு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் 2013–2014–ம் கல்வி ஆண்டில் ஜூன் மாதம் 3–ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, தமிழகத்தில் கடுமையான வெப்பநிலை தொடர்வதால், மாணவ–மாணவிகளின் நலன் கருதி, அனைத்து பள்ளிகளும் ஜூன் 3–ந் தேதிக்கு பதிலாக, ஜூன் 10–ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கும் என தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இவ்வாறு தேவராஜன் கூறி உள்ளார்.
பள்ளிக்கல்வி இயக்குனரின் உத்தரவை தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆரம்பப்பள்ளிகளும், நடுநிலைப்பள்ளிகளும், உயர்நிலைப்பள்ளிகளும், மேல்நிலைப்பள்ளிகளும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 10–ந் தேதி திறக்கப்படும். அரசு பள்ளிகள் மட்டுமின்றி, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்திற்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

No comments: