SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Wednesday, May 29, 2013

PRO-TAMIL ACTIVISTS AGAINST ENGLISH MEDIUM SECTIONS

அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகள் தொடங்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் தமிழ் அமைப்புகள் சார்பில் நடைபெற்றது

சென்னை
அரசு பள்ளிகளில், ஆங்கிலவழி வகுப்புகள் தொடங்குவதை கண்டித்து சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கண்டன ஆர்ப்பாட்டம்
2013–2014–ம் கல்வி ஆண்டில் இருந்து தமிழக அரசின் 3,200 தொடக்கப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் முதல் வகுப்பிலும், 6–ம் வகுப்பிலும் ஆங்கிலமொழியை பயிற்றுமொழியாகக் கொண்ட வகுப்புகள் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்தது. இந்த நிலையில், அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகள் தொடங்கும் திட்டத்தை கைவிடக்கோரி தமிழ்வழிக்கல்வி கூட்டு இயக்கம் அமைப்பு சார்பில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்கள் அமைந்துள்ள சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ் அமைப்புகள் பங்கேற்பு
இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள தமிழ்த்தேச பொதுவுடைமை கட்சி தலைவர் பெ.மணியரசன், திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் விடுதலை ராஜேந்திரன், தபசிகுமரன், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு, தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி சைதை சிவா, தமிழ்த்தேச மக்கள் கட்சி நிர்வாகி தமிழ்நேயன், ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, விடுதலை தமிழ்ப்புலிகள் அமைப்பின் நிர்வாகி குடந்தை அரசன், தமிழர் எழுச்சி இயக்க நிர்வாகி ப.வேலுமணி, தலைநகர் தமிழ்ச்சங்க நிர்வாகி த.சுந்தரராஜன், சேவ் தமிழ் இயக்கத்தின் செந்தில் உள்பட சுமார் 200 பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஒன்றாம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும், அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும், மருத்துவம், என்ஜினீயரிங், விவசாயம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில், தமிழ்வழியில் படித்தோருக்கு முன்னுரிமை தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகள் தொடங்குவதை கைவிடக்கோரியும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.
சாலை மறியல்
போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது, ஒருசிலர் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். தமிழ் அமைப்புகளின் ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு, டி.பி.ஐ. வளாகத்தில் திருவல்லிக்கேணி போலீஸ் துணை கமிஷனர் அனில் கிரி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. டி.பி.ஐ. வளாகத்தின் அனைத்து நுழைவுவாயில்களிலும் ஏராளமான போலீசார் குவிக்குப்பட்டு இருந்தனர். போலீஸ் வாகனங்களும் தயார்நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தன.

No comments: