SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Monday, May 27, 2013

IS RESERVATION NECESSARY FOR TET

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு முறையை பின்பற்றுதல் அவசியமா?
Posted Date : 10:05 (13/05/2013)Last updated : 10:05 (13/05/2013)
மிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் அனைத்து பிரிவினருக்கும் குறைந்தபட்சம் தேர்ச்சி மதிப்பெண் 60% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
மதிப்பெண் சலுகை  SC / ST/ OBC மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அரசுகள் வழங்கலாம் என (தேசிய ஆசிரியர் தேர்வு வாரியம்) NCTE கூறியிருந்தும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களுக்கு தமிழ்நாடு அரசு மதிப்பெண் சலுகை வழங்காதது இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிரானது என்று தமிழகத்தில் குரல் எழும்பத் தொடங்கியுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு என்பது அரசு வேலைக்கான தேர்வு மட்டும் அல்ல. இதில் தேர்ச்சி பெற்றால் தனியார் பள்ளிகளிலும் வேலை செய்யலாம். அப்படி இருக்க மதிப்பெண் சலுகை வழங்காதது ஒடுக்கப்பட்ட மக்களின் வேலைவாய்ப்பை தட்டிப் பறிப்பதோடு இப்பிரிவு மக்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கி உள்ள அடிப்படை உரிமையை மறுக்கும் செயலாகும். எனவே இவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண் சலுகை வழங்கப்படவேண்டும் என்பது அவர்களது வலியுறுத்தல்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு அவசியம் என்று வலியுறுத்துவோர் கூறும் காரணங்கள்:  

உயர்கல்வி பெற்றுவிட்ட ஒருவரை வேலைக்கு சேர்க்கும்போது அவரின் பள்ளிக்கல்வியை கூட இதுவரை யாரும் தகுதியை நிர்ணயிக்க கணக்கில் எடுத்துக்கொண்ட்தில்லை. அதிலும் பள்ளிக்கல்வியில் ப்ளஸ் டூ-வில் பெற்ற மதிப்பெண் தகுதியாக உயர்கல்வி படித்தவருக்கு எங்கும் நிர்ணயித்த்தில்லை. ப்ளஸ் டூ-விற்குப் பிறகு பட்டயப்படிப்பு (D.T.Ed) முடித்தவருக்கும், ப்ளஸ் டூ-விற்கு பிறகு இளங்கலை பட்டம், கல்வியில் இளங்கலை முடித்தவருக்கும் +2வில் எடுத்த மதிப்பெண் தகுதியாக எடுத்திருப்பதும், அதிலும் ப்ளஸ் டூ-வில் 50%-த்திற்குக் குறைவான மதிப்பெண் எடுத்தவருக்கு '0' மதிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

இத்தகைய தகுதி நிர்ர்ணயிப்பு தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள் ஆகியோர் வேலையை பறிக்கும் சூழ்ச்சியே ஆகும்.  தகுதி தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றாலும் +2 வில் 50% இல்லை என்றால் 100ல் 10 மதிப்பெண் இந்த தேர்வர் இழந்து விடுகிறார்.  

அதேபோல் பட்டப்படிப்பில் 50%-த்திற்கும் கீழ் 10 மதிப்பெண் என்கிறபோது 5 மதிப்பெண் இழக்கிறார். கல்வியியல் பட்டப்படிப்பில் 70%-ற்கும் குறைவாக எடுத்தவர் 3 மதிப்பெண் இழக்கிறார். அரசாணை எண்.252ல் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தகுதி நிர்ணயிக்கப்படாததால், மொத்தத்தில் ஒரு பட்டதாரி ஆசிரியர் +2 மற்றும் பட்டபடிப்புகளில் 18 மதிப்பெண் இழக்கிறார். 

ஆதிதிராவிட நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சீர்மரபினர் பள்ளி, உள்ளாட்சி பள்ளி மற்றும் கிராமத்து பள்ளிகளில் படித்த மாணவர்கள் எந்த அடிப்படை வசதியும், இன்னும் சொல்லப்போனால் நூலகரும் நூலகமும் இல்லாத பள்ளிகளில் பயின்ற ஏழை எளிய குடும்பத்து மாணவர்களுக்கு ஆசிரியர் பணியிட்த்தை மறுக்கும் செயலாகும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தகுதி தீர்மானிக்காத அரசாணை எண்.252 இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் உச்சநீதிமன்றம் இந்திரா சகானி வழக்கு உட்பட பல வழக்குகளில் கொடுத்த தீர்ப்பக்கு எதிரானது எனவே இவ்வரசாணை திரும்பப் பெறப்படவேண்டும்.

வருங்காலங்களில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தகுதி தீர்மானிக்கப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் நடைமுறையை பின்பற்றி பணியிட நியமன அறிவிக்கையை வெளியிடும்போதே பணியிடங்களின் எண்ணிக்கையையும், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பல்வேறு பிரிவினருக்கான காலி பணியிடங்களின் எண்ணிக்கையும் அறிவிக்கவேண்டும். இத்தகைய நடைமுறையில் தான் இட ஒதுக்கீடு சரியான முறையில் பின்பற்றப்பட்ட்தை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என்று கோரிக்கை விடுக்கப்படுகிறது.

அரசின் நிலைப்பாடு என்ன? 

சமீபத்தில் சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்பொது, 'ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்துக்கான கட்- ஆஃப் மதிப்பெண்களைக் குறைத்து இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும்' என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தின. 

அப்போது பேசிய அமைச்சர் வைகைச்செல்வன், "பணித் தேர்வின் போது இடஒதுக்கீட்டு முறையை அரசு சரியாகக் கடைப்பிடித்து வருகிறது. அதே சமயம் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவாகும்.

மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காகவும், தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த முறையைப் பின்பற்றுகிறோம். எனவே ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணை 60 சதவீதத்தில் இருந்து குறைக்கும் எண்ணம் அரசிடம் இல்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். 

ஆசிரியர் தகுதித் தேர்வு விஷயத்தில் அரசின் இந்த நிலைப்பாடு சரியா? 

விவாதிப்போம் வாருங்கள்.

No comments: