அனைத்து அரசுப் பள்ளிகளும் ஆங்கில வழிக் கல்வி - சரியா?
|
Posted Date : 13:05 (14/05/2013)Last updated : 13:05 (14/05/2013)
தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் தேவைப்படும் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
எதிர்ப்புகள் ஏன்?
இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ''ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்டு கல்வி பயின்றால்தான் அறிவு மேம்படும் என்பது ஒருவித மனநிலையே தவிர, அதில் எள்ளளவும் உண்மை இல்லை. தாய் மொழியில் கல்வி பயில்வதுதான் சுயசிந்தனை செழுமை அடைவதற்கு வாய்ப்பாகும். பிறமொழியில் கல்வி கற்பது என்பது சுயசிந்தனைக்கு பெரும் தடையாக அமைந்துவிடும்.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் மாணவர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக, ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாக அறிவிப்பது ஏற்கத்தக்க நடைமுறை ஆகாது.
சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்ததற்குப் பிறகு, பாடத் திட்டத்தைப் பொறுத்தவரை தனியார் பள்ளிகளும், அரசுப் பள்ளிகளும் சமநிலையிலேயே உள்ளன. எனவே அரசுப் பள்ளிகளை மேம்பாடுடைய கல்வி மையங்களாக மாற்றிட, சிறந்த தனியார் பள்ளிகளைப் போல, அரசுப் பள்ளிகளிலும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி, வளர்த்து, தரமான கல்வி வழங்குவது ஒன்றே நல்ல ஏற்பாடாக இருந்திட முடியும்" என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன் இருவரும் வெளியிட்ட அறிக்கை:
"ஆங்கிலத்தை ஒரு பாடமாகப் பயில்வதற்கு உரிய வசதிகள் செய்துகொடுப்பதை எதிர்ப்பதற்கில்லை. ஆனால், அனைத்துப் பாடங்களையும் புரிந்துகொள்வதற்கான பயிற்றுமொழியே ஆங்கிலமாகத்தான் இருக்கும் என்பது அறிவியல்பூர்வமற்றது. பாடங்களைப் புரிந்து பயில்வதற்கு வழிசெய்யாமல், வெறும் மனப்பாட முறையை வளர்க்கிற இந்த நடவடிக்கையால் உண்மையில் மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்குப் பெரும் கேடுதான் விளையும்.
ஏற்கெனவே தமிழகத்தில் தனியார் பள்ளிகள் ஆங்கில வழி கல்வியின் பெயரால் பெரும் எண்ணிக்கையிலான மாணவர்களின் இயற்கையான புரிதல் திறனை அழித்துள்ளன. தனியார் பள்ளிகளை நாடும் பெற்றோர்களை அரசுப்பள்ளிகளை நோக்கி ஈர்ப்பதற்காக என்ற பெயரில் எடுக்கப்படும் இந்த நடவடிக்கை, பயிற்றுமொழி தொடர்பான தனியார் நிர்வாகங்களின் மூர்க்கத்தனத்தை நியாயப்படுத்துவதாகவே இருக்கிறது.
உலகெங்கும் உள்ள கல்வியாளர்கள், மொழியில் வல்லுநர்கள், மக்கள் நல கல்வி இயக்கங்கள் தாய்மொழிவழி பயிற்சியே சுயமான சிந்தனை வளர்ச்சிக்கும் சரியான புரிதலோடு கூடிய கல்வி மேம்பாட்டிற்கும் ஏற்றது அறிவியல்பூர்வமான ஆய்வுகளின் அடிப்படையில் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். தாய்மொழி அல்லாத வேறு மொழி வழியாகப் பயில்வது, திறமையான அடிமைகளை உருவாக்குமேயன்றி சுயமான அறிவியல் ஆராய்ச்சியாளர்களையோ, கண்டுபிடிப்பாளர்களையோ உருவாக்காது.
உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல் என்ற மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஏற்ப, நவீன அடிமைகளை உருவாக்குவதற்கு ஏற்பவே அதன் கல்வி மற்றும் மொழிக் கொள்கைகள் வார்க்கப்படுகின்றன. அந்தக் கொள்கைகளை எதிர்ப்பதற்கு மாறாக, இவ்வாறு அரசுப் பள்ளிகளிலேயே ஆங்கிலப் பயிற்றுமொழியைத் திணிப்பது என்பது அவற்றின் முன் சரணடைகிற செயலாகவே இருக்கிறது. எதிர்காலத் தமிழ்த் தலைமுறைகளை சுயசிந்தனையற்ற கூட்டமாக மாற்றுகிற இந்த முடிவை எதிர்த்துப்போராட வேண்டும்" என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தமிழக அரசின் அறிவிப்புதான் என்ன?
முன்னதாக, ஆங்கில வழிக் கல்வி தொடர்பாக, சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை மானிய கோரிக்கையின்போது அமைச்சர் வைகைச்செல்வன் வெளியிட்ட அறிவிப்பு இதுதான்:
'தனியார் பள்ளி மாணவர்களைப் போன்று அரசுப் பள்ளி மாணவர்களும் ஆங்கிலத்தில் பயிலும் வகையில் ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர் நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் 1,6-ஆம் வகுப்புகளில் இரண்டு ஆங்கில வழிப் பிரிவுகள் வீதம் மொத்தம் 640 பிரிவுகள் தொடங்க அரசு அனுமதியளித்தது.
மொத்தம் 320 பள்ளிகளில் இந்தப் பிரிவுகள் தொடங்கப்பட்டு 22 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
வரும் கல்வியாண்டு முதல் தேவைப்படும் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர் நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்படும். இதனால் ஆண்டுக்கு 1.5 லட்சம் மாணவர்கள் பயனடைவர்' என்பதே அந்த அறிவிப்பு.
தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளும் ஆங்கில வழிக் கல்வி - சரியா?
சரி அல்லது தவறு எனில், அதற்காக நீங்கள் முன்வைக்கும் காரணங்கள் என்னென்ன?
விவாதிப்போம்... வாருங்கள்.
|
Todays Educational News
கல்வி செய்தி
முக்கிய செய்திகள் – Google செய்திகள்
BBCTamil.com | இந்தியா
FLASH NEWS
விகடன்-தினத்தந்தி கல்வி செய்திகள்
முக்கிய செய்திகள்
மேலும் கல்வி செய்திகள்
Tamilnadu Teachers friendly blog
தினகரன் கல்வி செய்திகள்
தமிழ் முரசு செய்திகள்
தினகரன் முக்கிய செய்திகள் --
TEACHER TamilNadu
தமிழ் முரசு முக்கிய செய்திகள்
Dinamani
Daily Thanthi
கல்வி அஞ்சல்
புதிய தலைமுறை தொலைக்காட்சி
Monday, May 27, 2013
ENGLISH MEDIUM SECTIONS IN ALL GOVERNMENT SCHOOLS - A VIEW
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment