பிசி, எம்பிசி மாணவர்களின் கல்வி உதவி தொகைக்கான வருமான வரம்பு 2 லட்சமாக உயர்வு
கருத்துகள்
GET
The Global CSK Fans Video

சென்னை: பிசி, எம்பிசி மாணவர்கள் பெறும் கல்வி உதவித் தொகைக்கான வருமான வரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். பேரவையில் 110ன் விதியின் கீழ், முதல்வர் ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து கூறியதாவது: விடுதிகளில் தங்கிப் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு நடப்பு ஆண்டில் 68 விடுதிகளுக்கு ரூ.86.97 கோடியில் சொந்த கட்டிடங்கள் கட்டப்படும். இந்த கட்டிடங்களில் சூரிய ஒளி மூலம் தண்ணீரை சூடுபடுத்தும் கருவிகள் நிறுவப்படும்.
இது மட்டுமல்லாமல், 1,000 ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில், ரூ.2.50 கோடி செலவில் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கான 3 விடுதிகள், சீர் மரபினருக்கான ஒரு விடுதி மற்றும் சிறுபான்மையினருக்கான ஒரு விடுதி என மொத்தம் 10 பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் புதிதாக துவங்கப்படும். விடுதிகளின் பராமரிப்பு பணிகளுக்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்கான ஆண்டு வருமான வரம்பு தற்போது ஒரு லட்சம் ரூபாயாக உள்ளது. இது 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

No comments:
Post a Comment