பறக்கிறது ஆணை! ஆங்கில வழிக்கல்விக்கு தயாராகும் அரசுப் பள்ளிகள்!
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் இந்த ஆண்டு முதல் அரசுப் பள்ளிகள் மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் உயர் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியைத் தொடங்குவதற்கு நெல்லை மாவட்டத்திலுள்ள அரசு சார்பு பள்ளிகள் தயாராகி வருகின்றன. குறிப்பாக நெல்லை மாநகராட்சிக்குப் பள்ளிகளில ஆங்கில வழிக்கல்வி பற்றிய குறிப்பு போர்டினை வைத்துள்ளனர்.
பள்ளி திறக்கும் நாள் தொடங்கி, புதிய மாணவ மாணவியார்களைச் சேர்க்கவும் அவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்கள் எழுது பொருட்கள் உள்ளிட்டவைகளை இலவசமாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு மாணவர்கள் அதிக அளவில் சேராத பள்ளிகளின் ஏரியாப்பகுதிகளில் விழிப்புணாவு பிரச்சாரம் மேற் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒரு வகுப்பிற்கு 20 மாணவர்கள் என குறியீடு வைத்து திட்டமிட்டு செயல்படுகிறோம் தேவையான பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன. நாங்கள் எதிர் பாரத்ததை விட அதிக அளவில் மாணவர்கள் சேருவார்கள் என்கிறார்கள் நெல்லை மாவட்டத்தின் தொடக்கக் கல்வி வட்டாரத்தினர்.

No comments:
Post a Comment