வெளிநாடு செல்ல விரும்பும் ஆசிரியரை அலைக்கழிக்க கூடாது
கருத்துகள்
Prabhu deva to direct Salman again

சிவகங்கை: வெளிநாடு செல்ல விரும்பும் ஆசிரியர்களை தேவையில்லாமல் அலைக்கழிக்க கூடாது என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குனரின் உத்தரவு: அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள், சார்நிலை அலுவலங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் வெளிநாடு செல்ல, பாஸ்போர்ட் பெற மற்றும் புதுப்பிக்க துறைத்தலைவரின் அனுமதி கோரி சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் மீது காலதாமதம் ஏற்படுவதாக தெரிகிறது. இதனால் மருத்துவ சிகிச்சை, மகள் பிரசவம் போன்ற அத்தியாவசிய காரணங்களுக்காக வெளிநாடு செல்ல வேண்டியவர்கள் சிரமப்படுகின்றனர். இனி வருங்காலங்களில் இந்நிலை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர்களின் விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து அனுப்பினால் போதும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் துறையின் முன் அனுமதி பெறாமல் வெளிநாடு சென்றது, பாஸ்போர்ட் பெற்றது மற்றும் புதுப்பித்தது போன்ற வற்றில் தாளாள ரால் குறைந்தபட்சம் கண்டனம் போன்ற தண்டனை வழங்கப்பட்டு, பணிப்பதிவேட்டில் பதிவு செய்திருக்க வேண்டும். பின்னர் அந்த நகலில் தாளாளர் கையொப்பம் இட்டு, சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரால் மேற்கையொப்பம் இடப்பட வேண்டும். பிறகு பின்னேற்பு கோரி அனுப்பப்படும் கருத்துருவுடன் இணைக்கப்பட வேண்டும். இவ்விவரம் இல்லாமல் கருத்துரு அனுப்பப்பட்டால் சம்பந்தப்பட்ட பிரிவு உதவி யாளர், கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சுற்றுலா, மதம் சார்பாக, உறவினர், நண்பர்களை காண வெளிநாடு செல்பவர்களிடம் பிணை முறிவு படிவம் ஏதும் பெற வேண்டியதில்லை. வெளிநாடு செல்ல, பாஸ்போர்ட் பெற மற்றும் புதுப்பிக்க துறைத்தலைவரின் அனுமதி கோரும் கருத்துருக்கள் பயண தேதியிலிருந்து 60 தினங்களுக்கு முன்பாக இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

No comments:
Post a Comment