SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Monday, May 13, 2013

ANNOUNCING ENGLISH MEDIUM INSTRUCTION WILL NOT HELP ENROLMENT IN GOVERNMENT SCHOOLS-MK


அரசு பள்ளிகளில் மாணவரை சேர்க்க ஆங்கிலத்தை பயிற்று மொழியாக அறிவிப்பது ஏற்கத்தக்கதல்ல திமுக தலைவர் கருணாநிதி கடிதம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
சென்னை:ஆங்கிலத்தை பயிற்று மொழியாக அறிவிப்பது ஏற்கத்தக்கதல்ல என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களுக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த கல்வி ஆண்டில், 320 அரசு பள்ளிகளில், முதல் மற்றும் 6ம் வகுப்புகளில் தலா 2 ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டன. 640 பிரிவுகள் தொடங்கப்பட்டு அதில் 22,400 மாணவர்கள் படித்து வருகின்றனர். வரும் கல்வி ஆண்டு முதல் தேவைப்படும் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளி கல்வி அமைச்சர் கடந்த 10ம் தேதி நடந்த பள்ளி கல்வி மானிய கோரிக்கையின் போது சட்டசபையில் அறிவித்திருக்கிறார்.

இந்த துறையின் சார்பில் சொல்லப்பட வேண்டிய முக்கிய அறிவிப்புகளை எல்லாம் 110வது விதியின் கீழ் அறிக்கைகளாக முதல்வரே படித்து விட்டு, முரண்பாடான, சர்ச்சைக்குரிய இந்த அறிவிப்பை மட்டும் அமைச்சரை விட்டு அவையிலே அறிவிக்கும்படி செய்யப்பட்டுள்ளது. அமைச்சரும் தான் என்ன அறிவிக்கிறோம் என்பதை தெரிந்தோ தெரியாமலோ, தமிழ் பயிற்று மொழி பற்றிய நீண்ட நெடிய திராவிட இயக்க வரலாற்றை தெரிந்து கொள்ளாமல் இந்த அறிவிப்பை செய்துள்ளார்.
ஆங்கிலத்தை பயிற்று மொழியாக கொண்டு கல்வி பயின்றால்தான் அறிவு மேம்படும் என்பது ஒருவித மனநிலையே தவிர, அதில் எள்ளளவும் உண்மை இல்லை. தாய் மொழியில் கல்வி பயில்வதுதான் சுய சிந்தனை செழுமை அடைவதற்கு வாய்ப்பாகும். பிறமொழியில் கல்வி கற்பது என்பது சுய சிந்தனைக்கு பெரும் தடையாக அமைந்து விடும்.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் மாணவர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக, ஆங்கிலத்தை பயிற்று மொழியாக அறிவிப்பது ஏற்கத்தக்க நடைமுறை ஆகாது. சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்ததற்கு பிறகு, பாட திட்டத்தை பொறுத்த வரை தனியார் பள்ளிகளும், அரசு பள்ளிகளும் சம நிலையிலேயே உள்ளன. எனவே, தனியார் பள்ளிகளை போல, அரசு பள்ளிகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி, தரமான கல்வி வழங்குவது ஒன்றே நல்ல ஏற்பாடாக இருந்திட முடியும்.

திடீரென்று அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி என்பது து£ங்குகிற புலியை வீண் வம்புக்கு இழுக்க இடறி விடுவதை போன்றது. தமிழகத்தின் முக்கியமான இந்த பிரச்னை குறித்து வாயை திறந்தால், எங்கே முதல்வரின் கோபத்துக்கு ஆளாகிட நேரிடுமோ என்று, தமிழகத்திலே தமிழுக்காக தாங்கள் தான் பிறவி எடுத்திருக்கிறோம் என்பதை போல எண்ணி கொண்டு செயல்படும் சில அரசியல்வாதிகள் தங்கள் வாயை திறக்காமல் இருப்பதை பார்க்கும் போது ‘புலிக்கு பயந்தவர்கள் என் மேல் படுத்துக் கொள்ளுங்கள்’ என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments: