பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட 3,178 மாணவர்கள் கண்டுபிடிப்பு
பதிவு செய்த நேரம்:2013-05-17 12:25:51
மதுரை, : மதுரை மாவட்டத்தில் நடந்த கணக்கெடுப்பில் பள்ளி செல்லாது இடைநின்ற 3 ஆயிரத்து 178 மாணவ, மாணவியர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் 6 முதல் 18 வயதிற்குட்பட்ட பள்ளி செல்லாது இடைநின்ற மாணவ, மாணவியர் குறித்த கணக்கெடுப்பு பணி கடந்த ஏப்.10ல் துவங்கியது. மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பார்வதி தலைமையிலான குழுவினர் வீடு, வீடாகச் சென்று கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். மே 2ம் தேதிவரை முதல்கட்ட கணக்கெடுப்பு நடந்தது.
இதில் 6 முதல் 14 வயது வரையுள்ள பாதியில் படிப்பை நிறுத்திய 414 மாணவியர், 470 மாணவர்கள் என மொத்தம் 884 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இதேபோல் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட, படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் குறித்த கணக்கெடுப்பு முதல்முறையாக நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் ஆயிரத்து 361 பேர், மாணவியர் 933 பேர் என மொத்தம் 2 ஆயிரத்து 294 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். இவர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வயதிற்கேற்ப தொடர் கல்வி வழங்கப்படுகிறது.
கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் பார்வதி கூறுகையில், Ôகணக்கெடுப்பு பணியில் 450 பேர் ஈடுபட்டனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பள்ளி படிப்பை நிறுத்தியவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கணக்கெடுக்கப்பட்டவர்களின் பட்டியலை ஆன்&லைனில் பதிவு செய்து வருகிறோம். இவர்களுக்கு உரிய கல்வி கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்Õ என்றார்.
No comments:
Post a Comment