SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Friday, April 05, 2013

திறந்தவெளி சமையல்: கேள்விக்குறியாகும் மாணவர்களின் பாதுகாப்பு


திறந்தவெளி சமையல்: கேள்விக்குறியாகும் மாணவர்களின் பாதுகாப்பு

First Published : 05 April 2013 02:33 AM IST
திறந்தவெளியில் சுகாதாரமற்ற இடத்தில் வகுப்பறைக்குச் செல்லும் வழியில் சமையல் செய்து குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. இதனால் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எஸ்.ஏரிப்பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. போதிய இடவசதி இன்றி குறுகிய இடத்தில் இயங்கும் இப்பள்ளியில் 160 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
சமையல் கூடம் இல்லாததால் வகுப்பறைக்குச் செல்லும் வழியில் திறந்த நிலையில் சமையல் செய்யப்படுகிறது. சுற்றுப்புற சுகாதாரமற்ற இடத்தில் திறந்த வெளியில் சமையல் செய்வதால் ஈ மற்றும் வண்டுகளும், பஸ், லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் போதும் காற்றில் பறந்து வரும் குப்பை மற்றும் தூசுகள் சத்துணவில் விழுவதாக கூறுகின்றனர்.
வழியில் சமையல் செய்யப்படுவதால் விளையாடிக் கொண்டு வரும் மாணவர்கள் தவறி அடுப்பின் மீதோ, சூடாக இறக்கி வைக்கப்பட்ட சமையல் பாத்திரங்கள் மீது விழும் அபாய சூழல் உள்ளது.
இது குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் விசாரித்ததில், "160 மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில் போதிய இடவசதி இல்லை. இடம் இல்லாததால் சமையல் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் பயனில்லாமல் திரும்ப அனுப்பப்படுகிறது. சமையல் கூடம் அமைக்க இடம் தேர்வு செய்து கட்டடம் கட்டி கொடுக்க யாரும் முன்வரவில்லை' என கூறினர்.
விபத்துக்குப் பின்னர் தீர்வு காண முனைவதைவிட, முன்னதாகவே இடத்தைத் தேர்வு செய்து சமையல் அறை அமைத்து மாணவர்கள் பாதுகாப்புடன் கல்வி பயில மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments: