மாணவிக்கு பாலியல் தொந்தரவு ஆசிரியரை கண்டித்து பொது மக்கள் முற்றுகை
கருத்துகள்
மாற்றம் செய்த நேரம்:4/14/2013 5:34:28 AM
சங்கரன்கோவில்: நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே கீழகலங்கலில் அரிஜன நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் தாளாளராக உலகம்மாள், அவரது மகள் ரேச்சல் கிறிஸ்டி தலைமையாசிரியராகவும், மகன் சாமுவேல் எடிசன்(40) ஆசிரியராகவும் உள்ளனர். இவர்களது வீடு பள்ளி வளாகத்திலேயே உள்ளது.இங்கு படிக்கும் மாணவர்களை பள்ளி நிர்வாகிகள் வீட்டு வேலைக்காகவும் பயன்படுத்தி தொந்தரவு செய்து வந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இப்பள்ளியில் இதே ஊரை சேர்ந்த இனியா(13) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 7ம் வகுப்பு படித்து வருகிறாள். இவளை ஆசிரியர் சாமுவேல் எடிசன் பள்ளி நேரங்களில் வீட்டுக்கு வரச்சொல்லி பாலியல் தொந் தரவு செய்துள்ளார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்த பின்பு இனியாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.இதுகுறித்து அவள் தனது பெற்றோருக்கு தெரிவித்துள்ளாள். இனியாவின் பெற்றோர் ஊத்துமலை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். பாலியல் தொந்தரவு குறித்த தகவல் அறிந்து 300க்கும் மேற்பட்டோர் பள்ளி முன்பு திரண்டனர். தகவல் அறிந்ததும் போலீசார், கிராம மக்களி டம் பேச்சு நடத்தினர். அப் போது கிராம மக்கள் பாலி யல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுவரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாது என்று கோஷம் எழுப்பினர். ஆசிரியர் சாமுவேல் மீது போலீ சார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்
No comments:
Post a Comment