மாணவன் மனநிலை பாதித்த விவகாரம்: திண்டிவனம் பள்ளியில் விசாரணை நடத்தப்படும் தமிழக அரசு தகவல்
சென்னை
அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை சேர்ந்த 12–ம் வகுப்பு மாணவன் விநாயகத்தை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆசிரியர் ஒருவர் தலையில் அடித்ததால் படுகாயம் அடைந்து மனநிலை பாதிக்கப்பட்டதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில், அந்த மாணவனையும், சம்பந்தப்பட்டவர்களையும் விசாரிக்க கடந்த 10–ந்தேதி ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டது.
மாணவன், மாணவனின் தாய், தந்தை, மாணவனை பரிசோதனை செய்த டாக்டர், மருத்துவ தலைமை அதிகாரி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மனநல மருத்துவ நிலையத்தின் துணை இயக்குனர் மற்றும் இயக்குநரிடமும் விசாரித்து அறியப்பட்டது.
இந்த விசாரணையின்போது ஆணையத் தலைவர், இணை இயக்குனர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர். திண்டிவனத்தில் உள்ள சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று உரிய விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment