தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை: பி.எட் படிப்புக்கு விண்ணப்பம் விநியோகம்
By dn
First Published : 06 April 2013 02:42 PM IST

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழத்தில் பி.எட். படிப்பில் சேர தகுதியான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
பி.எட்., படிப்பில் தமிழ் வழியில் 500 இடங்களும், ஆங்கில வழியில் 500 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்ப இன்று முதல் ஜூலை 26ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகம் நடைபெறுகிறது. விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பப் படிவங்களை பல்கலைக்கழக வளாகங்களிலும், பி.எட் கல்வி மையங்களிலும் ரூ.500 கட்டணம் செலுத்தி பெற்று கொள்ளலாம். நேரில் பெற இயலாதவர்கள் ரூ.550 வரைவோலை செலுத்தி தபால் மூலம் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம்.
சென்னை, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மையங்களில் காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.
மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை அணுகலாம்.
http://www.tnou.ac.in/
No comments:
Post a Comment