8ம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவர்களிடையே குழப்பம்
அன்னுர்: கோவையில் 8ம் வகுப்பு பொதுத்தேர்வில் 6 கேள்விகள் இல்லாததை கண்டு மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.
கோவை மாவட்ட அளவில் 8ம் வகுப்பு தமிழ் தேர்வு இன்று காலை துவங்கியது. இதில் 60 கேள்விக்கான வினாத்தாளில் 54 கேள்விகள் மட்டுமே இருந்துள்ளது. மீதம் 6 கேள்விகள் இல்லை.
இதனால் தேர்வு எழுத வந்த மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
MORE VIDEOS
தொடரும் குளறுபடிகள் 8ம் வகுப்பு தமிழ் தேர்வில் 6 மதிப்பெண் கேள்வி மாயம்
கருத்துகள்
மாற்றம் செய்த நேரம்:4/10/2013 6:41:55 AM
Finance Tips For Women

அன்னூர்: சமீபத்தில் நடந்த பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்தன.இதேபோல் தற்போது 8ம் வகுப்பு தேர்விலும் குளறுபடிகள் நடந்துள்ளன. அரசு துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான இறுதியாண்டு தேர்வு நேற்று துவங்கியது. பொது பாடத்திட்டத்தின் கீழ், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலம் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. நேற்று 8ம் வகுப்பு தமிழ் தேர்வு நடந்தது.இதில் மொத்தம் 60 மதிப்பெண்களுக்கு பதிலாக 54 மதிப்பெண்களுக்கு மட்டுமே கேள்விகள் இடம்பெற்றிருந்தன. கட்டுரை பிரிவில் கேட்க வேண்டிய 6 மார்க் கேள்வி இடம்பெறவில்லை. இதனால் மாணவர்கள் குழப்பமடைந்தனர். இதுபற்றி ஆசிரியர்களின் கவனத்துக்கு வந்ததும், அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டனர்.உடனடியாக, அந்தந்த பகுதி உதவி துவக்க கல்வி அலுவலர்கள் மூலம் கட்டுரைக்கான தலைப்பு வழங்கப்பட்டது. அன்னூர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விண்ணப்பம் எழுதுமாறு அறிவுறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment