சிலம்பம்: அரசு பள்ளி மாணவன் சாதனைமார்ச் 11,2013,10:52 IST
சிவகாசி: திருத்தங்கல் எஸ்.ஆர்., அரசு மேல்நிலைப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவர், சிலம்பத்தில் பதக்கங்களை குவித்துள்ளார்.
திருத்தங்கல் எஸ்.ஆர்., அரசு மேல்நிலைப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவர் கருக்குவேல்ராஜா,12. இவர், மகாராஷ்டிரா நவி மும்பையில் 2012-2013ம் ஆண்டிற்கான, தேசிய சிலம்பம் போட்டியில் பங்கேற்றார். 14-17 வயது பிரிவு சப் ஜூனியர் 30 கிலோ எடை பிரிவு, தனித்திறன் போட்டியான ஒற்றை கம்பு சுற்றுதலில் தங்கம் வென்றார். சுருள்வாள் வீச்சில் வெள்ளி, வாள்வீச்சில் வெண்கல பதக்கங்களை வென்றார்.
2012ல் கன்னியாகுமரியில் நடந்த நேஷனல் சிலம்பம் சாம்பியன்சிப் போட்டியில், கம்பு சண்டையில் தங்கம், வாள்வீச்சில் வெண்கலம், இரட்டை கம்பு சுற்றலில் வெள்ளி, ஒற்றை கம்பு சுற்றலில் வெண்கல பதக்கங்களை குவித்துள்ளார். இதை தொடர்ந்து, மே மாதம் மலேசியாவில் நடைபெற உள்ள சிலம்பம் போட்டியில் கலந்து கொள்கிறார்.
No comments:
Post a Comment