இன்றைய தினத்தந்தியில் மறியல்
நடைபெறும் நாள் மே மாதம் என்று அச்சுப் பிழையின் காரணமாக வெளிவந்துள்ளது.
சரியான செய்தி
அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஏப்ரல் 4 ம் தேதியன்று 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றம் முன்பு மறியல் நடைபெறவுள்ளது. அனைவரும் பங்கேற்போம் !
மே 4–ந் தேதி டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் திரளான ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம்
நாகப்பட்டினம்,
மே மாதம் 4–ந் தேதி டெல்லியில் நடைபெற உள்ள போராட்டத்தில் நாகை மாவட்டத்தில் இருந்து திரளான ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வட்டார செயலாளர்கள் கூட்டம்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயலாளர்கள் கூட்டம் நாகையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முருகபாஸ்கரன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் லெட்சுமிநாராயணன் வரவேற்றார். கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் மணிமாறன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், வட்டார செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
வருகிற மே மாதம் 4–ந் தேதி டெல்லி பாராளுமன்றம் முன்பு நடைபெறும் போராட்டத்தில் நாகை மாவட்டத்தின் சார்பில் திரளான ஆசிரியர்கள் கலந்து கொள்வது. பங்களிப்பு ஓய்வூதியம் திட்டத்தின் கீழ் செலுத்திய தொகைக்கு கணக்குச்சீட்டு வழங்கிட கேட்டுக் கொள்வது. கீழ்வேளூரில் உள்ள அணக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப வேண்டும்.
திருமருகல், கீழையூர் ஒன்றியங்களில் உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில் உள்ள அமைச்சுப் பணி, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஆகிய காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும். 2 ஆண்டுகள் பணிமுடித்த அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு எவ்வித நிபந்தனையின்றி தகுதிக்கான பருவம் முடிந்தமைக்கான ஆணை வழங்கிட கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் சித்தார்த்தன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment