SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Saturday, February 02, 2013

டில்லியில் நாடாளு மன்றம் முன்பு ஏப்ரல் 4ஆம் தேதி மறியலில் ஈடுபட அகில இந்திய ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது


இடஒதுக்கீடு கொள்கைக்கு முரணான ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யக்கோரி டில்லியில் போராட்டம்
ஈரோடு, பிப். 1-நாடு முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி டில்லியில் நாடாளு மன்றம் முன்பு ஏப்ரல் 4ஆம் தேதி மறியலில் ஈடுபட அகில இந்திய ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது. மறியலில் தமிழகத்தில் இருந்து 10 ஆயிரம் ஆசிரியர்கள் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பங்கேற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் முத்துராமசாமி கூறிய தாவது: பீகார், உத்தரபிரதேசம், சட்டிஸ்கர், ஜார்கண்ட் போன்ற பின்தங்கிய மாநிலங்களில் 9ஆம் வகுப்பு மற்றும் எஸ்எஸ்எல்சி., முடித்தவர்கள் ஒப்பந்த பாரா ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இதுபோன்ற ஆசிரியர்களுக்கு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கட்டாயம் தகுதி தேர்வு நடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு சரியானது தான். அதன் அடிப்படையில் தான் அந்தந்த மாநில அரசுகள் ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தி வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது தேவையில்லாதது. ஏனெனில், தமிழகத்தி லுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதிக்கான பட்டம் மற்றும் பட்டயப்படிப்பை முடித்தவர்களே ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது இட ஒதுக்கீடு கொள்கைகளுக்கு முரண்பாடானது.

தமிழகம் போன்ற மாநிலங்களில் ஆசிரியர் தகுதி தேர்வை கட்டாயம் ரத்து செய்ய வேண்டும். நாடு முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும், 6ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களையும் வலி யுறுத்தி ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி டில்லியில் நாடாளுமன்றம் முன் எங்களது தலைமை இயக்கமான அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் அகில இந்திய பொது செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் மறியல் போராட்டம் நடக் கிறது. மறியல் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 10 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு முத்துராமசாமி தெரிவித்தார்.
Samaruldhas Samuel ஆசிரியர் தகுதித்தேர்வு ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு தேவையே இல்லை.பயிற்சி பெறாதவர்களுக்கு அதை நடத்தட்டு
Ramesh Uma Pathi அகில இந்தியப் பொதுச்செயலாளர் திருமிகு ஈசுவரன் அவர்கள் மிகச்சிறந்த கல்வியாளர். உலகக் கல்விக் கழகத்தின் துணைத் தலைவராகவும் சார்க் ஆசிரியர் அமைப்பின் ஒருமித்த செயலாளராகவும் உயர்ந்த பதவிகளை வகிப்பவர். இவர் உலகிலுள்ள அனைத்து நாடுகளின் கல்வி முறையையும் நன்குஅறிந்தவர். இந்திய அரசின் கல்விக் குழுவில் உறுப்பினராக இருந்து பல விதிகளை வரையறுத்துக் கொடுத்தவர். வருடத்தில் 200 நாட்கள் வெளிநாடுகளுக்குக் கல்விப்பயணம் மேற்கொள்பவர். கல்விமுறை சார்ந்த அக்கறையிலும் ஆசிரியப் பேரினத்தின் நலம் விரும்புவதிலும் அனுபவத்திலும் அறிவிலும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இவரே இந்தப் போராட்டத்தை அறிவித்திருக்கிறார் என்றால் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆசிரியர்கள் பெருமளவில் டெல்லி செல்ல வேண்டும். போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் அதிகபட்ச ஆதரவினைத் தெரிவிக்க வேண்டும்

No comments: