SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Saturday, December 01, 2012

மாநகராட்சிப் பள்ளியின் கல்வித்தரம் மாறியாச்சு...-01-12-2012



மாநகராட்சிப் பள்ளியின் கல்வித்தரம் மாறியாச்சு...-01-12-2012


கோவைநவீன தகவல் தொழில்நுட்ப பயிற்சி பெற்று வரும்மாநகராட்சிப் பள்ளி மாணவியர்தாங்கள் தயாரித்த புராஜெக்ட்ஒன்றைபள்ளியில் இருந்த படியே மாநகராட்சி கமிஷனருக்கு"வீடியோ கான்பிரன்ஸ்&' முறையில் விளக்கி தங்கள் திறமையைநிரூபித்தனர்.
கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 83 பள்ளிகள் உள்ளனஒரு காலத்தில் மாநகராட்சிப் பள்ளிகள்என்றாலே தரமில்லாத பள்ளிகள் என்றிருந்த நிலை மாறிஇப்பள்ளிகளில் இடம் கிடைக்க அமைச்சர்சிபாரிசு தேடும் அளவுக்கு இப்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இப்பள்ளிகளின் தரமான கட்டமைப்பு வசதிகளும்அனுபவமிக்க ஆசிரியர்களின் உழைப்புமே இதற்குக்காரணம்இந்த வரிசையில்புதிதாக தகவல் தொழில்நுட்ப வசதிகளும் இணைந்திருப்பதால்மாநகராட்சிபள்ளி மாணவமாணவியரின் கல்வித்தரம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
பெரும்பாலான மாநகராட்சிப் பள்ளிகளில் குறைந்தது 20 கம்ப்யூட்டர்கள் கொண்ட "லேப்&' இருப்பதுவேறுஎந்த மாநகராட்சிக்கும் இல்லாத சிறப்பாகக் கருதப்படுகிறது.அழகுக்காக கம்ப்யூட்டர்களை அடுக்கிவைக்காமல்அவற்றை முறைப்படி பயன்படுத்திமாணவமாணவியரை மேம்படுத்தவும் முயற்சிஎடுக்கப்படுகிறது.
இந்த கம்ப்யூட்டர்களை முறையாக பயன்படுத்தி, மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தி வருகிறது அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் என்ற அமைப்பு. பவுண்டேஷனின் வெளிநாடு வாழ் இந்தியர் நிதியுதவியுடன், இந்தியாவில் ஆறு மாநிலங்களில் "டிஜிட்டல் ஈக்குவலைசர்&' எனும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் கம்ப்யூட்டரை பயன்படுத்தி பாடம் தொடர்பான "புராஜெக்ட்&' தயாரிப்பது, பாடத்துக்குத் தேவையான படங்கள், தகவல்களை இன்டர்நெட்டில் பதிவிறக்கம் செய்வது உள்ளிட்ட பயிற்சிகளை, பவுண்டேஷனின் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுத் தருகின்றனர்.
தொடர் மதிப்பீட்டு முறைஇன்டர்நெட்டை கையாள்வது குறித்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி தருகின்றனர்.கடந்த ஐந்து மாத பயிற்சி குறித்த கலந்தாய்வுக் கூட்டம்மாநகராட்சி கமிஷனர் பொன்னுசாமியின்தலைமையில் நேற்று நடந்தது.
கம்ப்யூட்டரை பயன்படுத்தி கணித பாடத்தில் தயாரித்த புரொஜெக்ட் குறித்துகே.கே.புதூர் பள்ளியின்எட்டாம் வகுப்பு மாணவியர் அம்ரின் தாஜ்கோகிலவாணி ஆகிய மாணவியர், "பவர் பாயின்ட்&' உதவியுடன்அற்புதமாக விளக்கினர்அதைப் பார்த்துதலைமை ஆசிரியர்கள்துணை கமிஷனர் சிவராசுகல்விஅலுவலர் வசந்தா ஆகியோர் ஆச்சரியமடைந்தனர்.
ஒப்பணக்கார வீதி மாநகராட்சிப் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவியர் திவ்யாரோஷ்மாகாவ்யஸ்ரீஆகியோர்தாங்கள் தயாரித்த அறிவியல் புராஜெக்ட் குறித்துபள்ளியில் இருந்த படியே "வீடியோகான்பிரன்ஸ்&' வசதியுடன் கமிஷனருக்கு விளக்கினர்பாடம் குறித்து கமிஷனருடன் கலந்துரையாடி,அவரிடம் பாராட்டும் பெற்றனர்.
பவுண்டேஷனின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அலெக்சாண்டர் பேசுகையில், "ஐந்து மாதங்களில் 5,383மாணவர்களுக்கும், 189 ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளோம்சிறப்பு பயிற்சி பெற்ற 295 மாணவர்கள்"மாஸ்டர் பயிற்சியாளர்களாக&' அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் மொத்தம் 1956 பாட புராஜெக்ட்களை தயாரித்துள்ளனர்மின்வெட்டால் பயிற்சி தடைபடுவதால்,ஜெனரேட்டர் வசதி செய்து தர வேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்தார்.
கமிஷனர் பொன்னுசாமி கூறுகையில், "மாணவியரின் திறமைஆச்சரியப்பட வைத்ததுமூன்றாண்டுக்குப்பின் அனைத்து வகுப்பிலும் கம்ப்யூட்டர் உதவியுடன்தான் பாடம் நடத்த வேண்டும்கூடுதல் கம்ப்யூட்டர்கள்,ஜெனரேட்டர்யு.பி.எஸ்., வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்,&'&' என்றார்

No comments: