SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Sunday, December 30, 2012

MAKE CPS REQUEST STATEWIDE .INFORM OTHERS

CPS  திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து ஆசிரிய நண்பர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கடித மாதிரியைப் போன்று உங்கள் பெயரில் ஒரு கடிதம் தயாரித்து மாதாந்திர குறை தீர்ப்பு நாளன்று உதவி தொடக்கக்கல்வி அலுவலரிடம்  வரும் ஜனவரி 5 அன்று  ளித்து ஒப்புகை பெறவும்.
 ஒரு மாதத்திற்குள் கணக்கீட்டுத்தாள் வழங்காவிட்டால் அடுத்த மாதம் மாதாந்திர குறை தீர்ப்பு நாளன்று மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரிடம் அளிக்குமாறு வேண்டுகிறோம்.
     CPS  திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து ஆசிரிய நண்பர்களுக்கும் இதை தெரிவிக்கவும்.

இக்கடித த்தில் சேர்க்க வேண்டியது
பார்வை : பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 
..எண் 43561/ஆர் 1/ 1,2009 நாள் 19.11.2012

19.01.2013 crc proceedings



Saturday, December 29, 2012

பள்ளி வளர்ச்சி திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் தாமதம்


திருப்புத்தூர்அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ்,ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளிநடுநிலைப் பள்ளிகளில்,ஆண்டுதோறும் வளர்ச்சிப் பணிகளாககூடுதல் வகுப்பறைகட்டடம்கழிப்பறை வசதிசுற்றுச்சுவர் கட்டப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன்ஜூலை மாதங்களில்,இத்திட்டத்திற்கு அனுமதி கிடைத்துஅந்த கல்வியாண்டிற்குள் திட்டம் நிறைவேற்றப்படும்.கிராமக் கல்விக்குழுதலைமையாசிரியர் இணைந்து இத்திட்டத்தை நிறைவேற்றுவர்.
இந்த கல்வியாண்டில் திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுபல மாதங்களாகியும்நிதி அனுமதிகிடைக்கவில்லைஇனிமேல்அனுமதி கிடைத்தாலும்இந்த கல்வியாண்டிற்குள் இத்திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை.
கால தாமதத்தால்திட்ட மதிப்பீட்டு தொகை அதிகரிப்பதாலும்திட்டப்பணிகளைநிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படும்இதனால்மாநிலம் முழுவதும் இத்திட்டம் கிடப்பில்உள்ளதாகக் கூறப்படுகிறது.

ESWARANJI'S MAIL TO OUR DISTRICT SECRETARIES

All India Primary Teachers' Federation (AIPTF)
Shikshak Bhawan
41-Institutional Area, D-Block, Janakpuri, 
New Delhi-110058, India
Tel.: +91-11-28522039, 28522606, 28520671
Fax: +91-11-28525271
E-mail: aiptfindia@yahoo.com
Dear brother,
Thank you for your kind cooperation in the union activities.

On 5th January TESTF have decided to conduct Dharna on our decided demands.

As per our decision I am participating in the districts as below:

I am confident you will conduct the Dharna with a large number of our members with press release to stress our demands and to draw the attention of our Tamilnadu Govt. I believe you will also keep up the time, because I have to cover 4 districts on the same day.

My time of arrival and departure in the following districts are as below. Please keep up the time so as to enable me to cover all the districts.

Date
Time
Particular
4th January
8 PM
Night halt at Thiruvarur
Selvi Lodge  - arranged by Dist. Secretary – Tanjavoor Dt.
5th January
10 to 11 am
Nagappattinam

12 to 01 pm
Thiruvaroor

2 to 3 pm
Thanjavoor

4 to 5.30 pm
Pudukkuttai


Night halt at Pudukkottai –
Arrangement by Gen Secy. TESTF

All the district secretaries are requested to make the Dharna a grand success with dedicated planning and work.
Waiting to see you soon,
With best wishes,

(S. Eswaran)
Secretary General, AIPTF
Vice-President, EI 

JANUARY 5 & 19 CRC PROCEEDINGS





sports day & annual day proceedings


Friday, December 28, 2012


திமுக ஆட்சியில் முறைகேடு இல்லாமல் 55 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்

கருத்துகள்

சென்னை : திமுக ஆட்சியில் 55 ஆயிரம் ஆசிரியர்கள் முறைகேடு, குளறுபடி இல்லாமல் நியமனம் செய்யப்பட்டார்கள். ஆனால், அதிமுக ஆட்சியில் அப்படி இல்லை என்று கருணாநிதி கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2001,2006ல் அதிமுக ஆட்சியில் 45 ஆயிரத்து 987 ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில், அதாவது அவர்கள் பெறவேண்டிய ஊதியத்தில் ஏறத்தாழ 3ல் ஒரு பங்கு ஊதியம் மட்டுமே பெறும் நிலையில் நியமிக்கப்பட்டிருந்தவர்களுக்கு எல்லாம், 2006ல் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் காலமுறை ஊதியம், அதாவது அவர்கள் பெற்று வந்த ஊதியத்தைவிட 3 மடங்கு அதிக ஊதியம் கொடுத்து ஆசிரியர்களை மகிழச் செய்தது.

அத்துடன் 2006க்குப் பின், தொடக்கக் கல்வித் துறையில் 12 ஆயிரத்து 426 இடைநிலை ஆசிரியர்கள், 14 ஆயிரத்து 115 பட்டதாரி ஆசிரியர்கள் என 26 ஆயிரத்து 541 ஆசிரியர்களும், பள்ளிக் கல்வித் துறையில் 70 இடைநிலை ஆசிரியர்கள், 17 ஆயிரத்து 45 பட்டதாரி ஆசிரியர்கள், 4 ஆயிரத்து 665 ஆசிரியர் பயிற்றுநர்கள், 3002 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், 525 தமிழாசிரியர்கள், 1131 சிறப்பா சிரியர்கள், 140 தொழில் ஆசிரியர்கள், 1686 கணினி ஆசிரியர்கள் என 27 ஆயிரத்து 739 ஆசிரியர்களும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் 216 விரிவுரையாளர்களும், 32 முதுநிலை விரிவுரையாளர்களும் என மொத்தம் 55 ஆயிரத்து 53 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டார்கள் திமுக ஆட்சியில்.

இவர்கள் தவிர, ஆசிரியர் அல்லாத 1140 பணியாளர்களும், கருணை அடிப்படையில் 449 பணியாளர்களும், அரசு மேல் நிலைப் பள்ளிகளில் விவசாயம் கற்பிக்க 176 விவசாயப் பயிற்றுநர்களும் நியமிக்கப்பட்டார்கள். 2006 முதல் 2010 வரை நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் ஆசிரியர் கல்வித் தகுதி பெற்ற 1114 மாற்றுத் திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர்களாக அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டார்கள். 

திமுக ஆட்சிக் காலத்தில் இத்தனை பேர் நியமிக்கப்பட்டார்களே, அப்போது ஏதாவது புகார்கள் வந்ததுண்டா? ஏதாவது முறைகேடு சொன்னதுண்டா? ஏதாவது குளறுபடிகள் நடந்ததுண்டா? ஆனால் இப்போது அதிமுக ஆட்சியில் என்ன நிலைமை? இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தேர்வில் நடந்த, குளறுபடிகளைத் தொடர்ந்து, முதுகலை ஆசிரியர் தேர்விலும் பெரும் குளறுபடி நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உடல் தகுதி நன்றாக இருப்பவர்கள் பலர், ஊனமுற்றோர் பிரிவில் தேர்வாகி உள்ளனர். சரியான கல்வித் தகுதி இல்லாதவர்களும் இறுதிப் பட்டியலில் தேர்வாகி உள்ளனர் என்று செய்தி வருகிறது.

இறுதி நேரத்தில் சற்று அவசரமாக இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டதால் மீண்டும் பட்டியல் சரிபார்க்கப்பட்டது;  மற்றுமொரு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட வேண்டியுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக இன்னொரு  செய்தி வந்துள்ளது.  நாம் கேட்பதெல்லாம் சான்றிதழ்களை சரிபார்க்காமல் கூட எதற்காக அவசர அவசரமாக பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன? அதனால் எந்த அளவிற்கு குழப்பங்கள், குளறுபடிகள்?

விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் 36 ஆசிரியர்களுக்கு மட்டுமே நேரடியாகப் பணி நியமன ஆணையினை வழங்க, ஏனையோர்க்கு மற்றவர்கள் பணி நியமன ஆணையினை வழங்கினாராம். 13ம் தேதி பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்ட போதிலும், வழக்கமாக பணி நியமன ஆணைகள் வழங்குவதற்கு முன்பு, பலமுறை அவர்களுடைய சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பிறகே, ஆணைகள் வழங்கப்படும். ஆனால் இந்த முறை நேரம் இல்லாத காரணத்தால், சான்றிதழ்கள் சரி பா£க்கப்படும் பணிகளை நிறைவேற்றாமல் பணி நியமன ஆணைகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுவிட்டன.

பணி நியமன ஆணைகள் வழங்கி விட்டு சான்றிதழ்களைச் சரிபார்ப்பதால், அதில் தகுதி இல்லாத வர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுடைய தேர்வு ஆணையை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற் படும். அடுத்து ஒரு செய்தி. அதாவது 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் தொடர்பான விவரங்களையெல்லாம் ஆன் லைன் வழியாக ஜனவரி 4ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று ஓர் உத்தரவு. இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளன. 10ம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்கள் சுமார் 11 லட்சம் மாணவர்கள் உள்ளனர். 

18 மணி நேரம் மின்வெட்டு. சில பள்ளிகளில் கம்ப்யூட்டர் வசதிகள் மற்றும் இண்டர்நெட் வசதிகள் இல்லை. இதில் எவ்வாறு ஜனவரி 4ம் தேதிக்குள் மாணவர்கள் தங்களைப் பற்றிய முழு விவரங்களை ஆன் லைன் மூலமாகத் தெரிவிக்க இயலும். இந்தத் தேதியை நீடிக்க வேண்டுமென்று நான் எழுதியிருந்தேன். அதன் பிறகு கூட அரசுத் தரப்பில் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை.

பள்ளிக் கல்வித் துறை பாழ்பட்டால், பாதிப்புக்குள்ளாவது மாணவர்களின் எதிர்காலம் தான். இன்று வற்றிப் போகும் குளமாகவல்லவா குளறுபடிகளும், குறைபாடுகளும் நிறைந்த பள்ளிக் கல்வித் துறை காட்சியளிக்கிறது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்

முப்பருவ முறை புத்தகங்கள் விநியோகம் By dn



First Published : 26 December 2012 12:42 PM IST
·         http://dinamani.com/incoming/article1395188.ece/ALTERNATES/w460/books.jpg
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இன்று முதல்  இந்தப் புத்தகங்களை விநியோகம் செய்ய வேண்டும் என்று மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை முப்பருவ முறை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மூன்றாவது பருவம் ஜனவரி 2-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. மூன்றாம் பருவத்துக்காக ஒவ்வொரு வகுப்புக்கும் 2 புத்தகங்கள் என மொத்தம் 2.17 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிப்பதற்காக 1 கோடியே 40 லட்சம் புத்தகங்களும், தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் சில்லறை விற்பனைக்காக 77 லட்சம் புத்தகங்களும் அச்சிடப்பட்டுள்ளன. இந்தப் புத்தகங்கள் அனைத்தும் மாவட்ட விநியோக மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மாவட்ட விநியோக மையங்களில் இருந்து புத்தகங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு புதன்கிழமைமுதல் விநியோகம் செய்ய வேண்டும் என்று மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மூன்றாம் பருவம் தொடங்கும் நாளான ஜனவரி 2-ம் தேதியன்றே அனைத்து மாணவர்களிடமும் புத்தகங்கள் கிடைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல் பருவம், இரண்டாம் பருவங்களின் தொடக்க நாளன்றே மாணவர்களுக்குப் புத்தகங்கள் கிடைக்கும் வகையில் முன்கூட்டியே அச்சடிக்கப்பட்டு, பள்ளிகளில் விநியோகம் செய்யப்பட்டன. அதேபோல், இந்தப் பருவத்துக்கான புத்தகங்களும் முன்கூட்டியே அச்சடித்து மாவட்ட விநியோக மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் 22 வட்டார அலுவலகங்களிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையுள்ள பாடநூல்களின் விற்பனை இன்று தொடங்க உள்ளது. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் தங்களது மாவட்டத்துக்குள்பட்ட தொடக்க மற்றும் மழலையர் பள்ளிகளை குழுக்களாகப் பிரித்து, அவர்களுக்கான நாள்களை ஒதுக்கி பாடநூல் விற்பனையை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

சென்னை:சென்னை உட்பட மாநிலத்தின் மற்ற நகரங்களில், பள்ளி, கல்லூரி நேரங்களை மாற்றி அமைப்பது குறித்து, கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வித்துறையிடம்,நேற்று முதற்கட்ட ஆ‌‌லோசனையை,போக்குவரத்துதுறை நடத்தியது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் உள்ளிட்ட, மாநிலத்தின் மற்ற நகரங்களிலும், நாள் தோறும் வாகன விபத்துகளில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பலியாகி வருகின் றனர். விபத்துகளை தவிர்க்கும் வகையில், அப்பகுதிகளில், பள்ளி, கல்லூரி நேரங்களை மாற்றி அமைப்பது குறித்து ஆலோசித்து, விரைவில் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என, கல்வித் துறை மற்றும் கல்லூரி கல்வித்துறையிடம், கடந்தாண்டு போக்குவரத்து துறை வலியுறுத்தியது.

சமீபத்தில், சென்னை பெருங்குடியில் நடந்த விபத்தில், பள்ளி, கல்லூரியை சேர்ந்த, நான்கு மாணவர்கள் பலியாயினர். இந்த சம்பவம் தொடர்பாக, சென்னை ஐகோர்ட், தானாக முன் வந்து விசாரணை மேற்கொண்டது. "பள்ளி, கல்லூரி துவங்கும் நேரம் மற்றும் முடியும் நேரத் தில், போதிய அளவிற்கு, பஸ்கள் இயக்கப்படாததால், மாணவர்கள், படிக்கட்டுகளில் தொங்கி, பயணம் செய்கின்றனர்' என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன், நேற்று முதல் கட்ட ஆலோசனையை, போக்குவரத்து துறை நடத்தி உள்ளது.இதில்,"விபத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பதை தடுக்க, பள்ளி, கல்லூரி துவங்கும் நேரம் மற்றும் முடி யும் நேரத்தை மாற்றியாக வேண்டும்' என, போக்குவரத்து துறை அதிகாரிகள் வலி யுறுத்தியுள்ளனர்.

டில்லி உள்ளிட்ட, பல்வேறு நகரங்களில், காலை, 7:00 மணிக்கே, கல்வி நிறுவனங்கள் இயங்க ஆரம்பித்து விடுகின்றன. இதனால், பஸ்களில் நெருக்கடி இல்லாமல், மாணவர்கள் பயணிக்க முடிகிறது.இந்த முறையால், விபத்துகளும் நடப்பதில்லை. இதேபோன்று, சென்னை உள்ளிட்ட மாநகராட்சி, நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில், பள்ளி, கல்லூரி துவங்கும் மற்றும் முடியும் நேரத்தை, விரைவில் மாற்றுவது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

இது குறித்து, பள்ளி கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன், போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள், ஜனவரி முதல் வாரத்தில், மீண்டும், விரிவாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

தகுதியானவர்கள் மட்டுமே முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம்



By dn, சென்னை
First Published : 27 December 2012 11:25 AM IST
·         http://dinamani.com/incoming/article1396538.ece/ALTERNATES/w460/cer_verifi.jpg
பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக தகுதியானவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 21 ஆயிரம் பேரில்  வெறும் 6 பேர் மட்டுமே உரிய தகுதிகள் பெறாதது கண்டறியப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2,300 பேரின் தேர்வுப் பட்டியல் பள்ளிக் கல்வித் துறைக்கு இன்று அனுப்பி வைக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு ஓரிரு நாள்களில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சுமார் 21 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் நியமனத்தில் வெறும் 6 பேர் மட்டுமே உரிய தகுதிகள் பெறவில்லை என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சரிபார்ப்பில் தெரியவந்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆசிரியர் தகுதித் தேர்வு, போட்டித் தேர்வு ஆகியவற்றின் மூலம் 18 ஆயிரம் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களும், 2,300 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னையில் கடந்த 13-ம் தேதி நடைபெற் பிரமாண்ட விழாவில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் ஆன்-லைன் கலந்தாய்வில் தங்களுக்கான பணியிடங்களைத் தேர்வு செய்தனர். முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்ட பிறகு பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
விழாவுக்குப் பிறகு தேர்வுசெய்யப்பட்டவர்களின் தகுதிகள் மீண்டும் ஒருமுறை சரிபார்க்கப்பட்டன. பலர் உரிய தகுதிகளைப் பெறவில்லை என்று செய்திகள் வந்தன. ஆனால், சரிபார்ப்பின் முடிவில் பட்டதாரி ஆசிரியர்களில் மூன்று பேரும், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களில் மூன்று பேரும் உரிய தகுதிகளைப் பெறாதது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஏற்கெனவே பணி நியமனம் பெற்ற பெரும்பாலானோர் பணியில் சேருவதில் எந்தவிதத் தடையும் இல்லை என்று தெரியவந்துள்ளது.
பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஆன்-லைன் மூலமாக பணி நியமன ஆணைகள் வழங்குவதற்கு முன்னதாக அனைவரின் சான்றிதழ்கள், தகுதிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டன. இதில் ஓரிருவர் உரிய தகுதிகளுடன் இல்லை. அவர்கள் உடனடியாக ஆசிரியர் தேர்வு வாரியத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டனர். பல்வேறு காரணங்களால் சுமார் 70 பேர் பணியில் சேரவில்லை.8,556 பேரும் தகுதியானவர்கள்: பணி நியமனம் பெற்ற 8,556 பேரும் உரிய தகுதிகளுடனே பணியில் சேர்ந்துள்ளனர். அதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சரிபார்த்துவிட்டனர். இவர்கள் அனைவரும் இந்த மாதத்துக்குரிய சம்பளத்தைப் பெறலாம். அதில் எந்தவிதப் பிரச்னையும் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மிகப்பெரிய எண்ணிக்கையில் தகுதியில்லாதவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறுவது தவறானது என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Wednesday, December 26, 2012

முதுகலை ஆசிரியர் தேர்விலும், பெரும் குளறுபடி


இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தேர்வில் நடந்த, குளறுபடிகளை தொடர்ந்து, முதுகலை ஆசிரியர் தேர்விலும், பெரும் குளறுபடி நடந்திருப்பது, வெளிச்சத்திற்கு வந்துள்ளது.உடல்தகுதி நன்றாக இருப்பவர்கள் பலர், ஊனமுற்றோர் பிரிவில் தேர்வாகி உள்ளனர். மேலும், சரியான கல்வித்தகுதி இல்லாதவர்களும், இறுதி பட்டியலில் தேர்வாகி உள்ளனர். இவர்களை, தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கும் பணிகள் நடந்து வருவதால், ஓரிரு நாளில், புதிய தேர்வுப் பட்டியல் வெளியாக உள்ளது.

நெருக்கடி:
அதிகார வட்டாரத்தில் இருந்து வந்த, நெருக்கடி காரணமாக, டி.இ.டி., ஆசிரியர் தேர்வுப் பணி, இடியாப்ப சிக்கலாக மாறி, டி.ஆர்.பி., தவியாய் தவித்து வருகிறது. பணி நியமனத்திற்கு முன், சான்றிதழ்களை சரியாக சரிபார்க்காமல் கோட்டை விட்டுவிட்டு, 18 ஆயிரம் பேருக்கு, பணி நியமனம் வழங்கியாகி விட்டது. உத்தரவுகளை பெற்றோர், பணியிலும் சேர்ந்துவிட்டனர்.ஆனால், இப்போது, மீண்டும் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி, சத்தமில்லாமல், டி.ஆர்.பி.,யில் நடந்து வருகிறது. பணியில் சேர்ந்து, சம்பளமும் வாங்கிய பின், அவர்களை பணி நீக்கம் செய்ய முடியுமா என்பது தெரியவில்லை.அப்படி பணி நீக்கம் செய்தால், அரசுத் தரப்பின் மெத்தனப்போக்கு, வெட்ட வெளிச்சத்திற்கு வருவதுடன், பாதிக்கப்படுபவர்கள், கோர்ட் படியேறும் நிலை உருவாகலாம்.


அம்பலம்:
இதுபோன்ற நிலையில், முதுகலை ஆசிரியர் தேர்விலும், குளறுபடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு வழங்கும் விழா, 13ம் தேதி, சென்னையில் நடந்தது.அதிகமான ஆசிரியர்களுக்கு, உத்தரவு வழங்குவதை காட்டுவதற்காக, கடைசி நேரத்தில், திடீரென, 2,308 முதுகலை ஆசிரியர்கள் தேர்வு பட்டியலும் வெளியிடப்பட்டது.மொத்தம், 2,895 பேரை தேர்வு செய்ய, தேர்வு நடத்தியபோதும், வழக்கு காரணங்களால், 587 பணியிடங்களை, "ரிசர்வ்' செய்துவிட்டு, மீதமுள்ள பணியிடங்களுக்கு மட்டும், தகுதியானவர்கள் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டது.முதல்வர் விழாவில், 2,308 பேருக்கும், தேர்வுக்கான உத்தரவு மட்டுமே வழங்கப்பட்டது. இன்னும், அவர்களுக்கு, பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கவில்லை. டி.ஆர்.பி.,யில் இருந்து, 2,308 பேர் சம்பந்தமான கோப்புகளை, பள்ளி கல்வித்துறையிடம் ஒப்படைத்து, டி.ஆர்.பி., தலைவர், "தேர்வுக் கடிதம்' வழங்கிய பின், அவர்களை பணி நியமனம் செய்வதற்கான பணியை, கல்வித்துறை செய்யும்.


சரிபார்ப்பு:
இதுவரை, டி.ஆர்.பி.,யில் இருந்து, கல்வித்துறையிடம், கோப்புகள் ஒப்படைக்கவில்லை. தேர்வு பெற்றவர்கள் அனைவரும், தகுதியானவர்கள் தானா என்பதை, மீண்டும் ஒரு முறை சரிபார்க்கும் பணியில், டி.ஆர்.பி., மும்முரமாக ஈடுபட்டுள்ளது.இதற்கிடையே, தகுதியில்லாதவர்கள் பலர் தேர்வு பெற்றுள்ள தகவலை, டி.ஆர்.பி.,யின் கவனத்திற்கு, பல தேர்வர்கள் கொண்டுசென்றனர். புகார்களை அலட்சியப்படுத்தாமல், கவனமுடன் ஆய்வு செய்த, டி.ஆர்.பி., தகுதியற்றவர்கள் பலர், தேர்வாகி இருப்பதை கண்டுபிடித்துள்ளது.
* உடல்திறன் நன்றாக இருப்பவர்கள் பலர், ஊனமுற்றோர் பிரிவில் தேர்வு பெற்றுள்ளனர். ஊனமுற்றோர் பிரிவில், "கட்-ஆப்' மதிப்பெண்கள் குறைவு என்பதால், இந்தப் பிரிவில், பலர் தேர்வாகி உள்ளனர்.இவர்களுடைய தேர்வு, உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் மட்டும், 20க்கும் மேற்பட்டோர், நீக்கப்பட்டிருக்கலாம் என, கூறப்படுகிறது.
* சரியான கல்வித்தகுதி இல்லாதவர்களும், இறுதி தேர்வுப் பட்டியலில், தேர்வாகி உள்ளனர். எம்.எஸ்சி., ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, எம்.எஸ்சி., கெமிஸ்ட்ரி படிப்பிற்கு நிகரானது கிடையாது. ஆனால், ஆர்கானிக் கெமிஸ்ட்ரி படித்தவர்களும், தேர்வாகி உள்ளனர்.
* ஆர்கானிக் கெமிஸ்ட்ரி படித்த ஒருவர், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியில் தேர்வாகியும், சரியான கல்வித்தகுதி இல்லை என கூறி, அவரது தேர்வை, டி.ஆர்.பி., நிராகரித்துள்ளது. ஆனால், அதே தேர்வர், முதுகலை ஆசிரியர் தேர்வில், தேர்வாகி உள்ளார். இது எப்படி சாத்தியம் என, தேர்வர்கள் கொதிக்கின்றனர்.
* "கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்' படித்தவர்கள், ரெகுலர், "ஆங்கிலம்' பாடத்திற்கு நிகரானவர்கள் கிடையாது. ஆனால், "கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்' படித்தவர்கள் பலர், தேர்வு பெற்றுள்ளனர்.
இதுபோன்ற தகுதியற்றவர்களை கண்டுபிடித்து, அவர்களை, தேர்வுப் பட்டியலில் இருந்து, நீக்கும் பணியில், டி.ஆர்.பி., ஈடுபட்டுள்ளது. 50க்கும் மேற்பட்டோர் நீக்கப்படலாம் என, கூறப்படுகிறது. தகுதியற்றவர்கள் நீக்கத்தால், அடுத்த, "ரேங்க்'கில் உள்ளவர்களை தேர்வு செய்து, அவர்களின் சான்றிதழ்களையும் சரிபார்க்க வேண்டிய கட்டாயத்தில், டி.ஆர்.பி.,உள்ளது. எனவே, ஓரிரு நாளில், புதிய தேர்வுப் பட்டியலை எதிர்பார்க்கலாம்.
"கட்-ஆப்' மதிப்பெண் வெளியிட தயக்கம் ஏன்? டி.இ.டி., மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வில், இன சுழற்சி வாரியாக, "கட்-ஆப்' மதிப்பெண்கள் விவரங்களை, இதுவரை, டி.ஆர்.பி., வெளியிடவில்லை.அதேபோல், இணையதளத்தில், தனிப்பட்ட தேர்வர், தங்களுடைய தேர்வை தெரிந்துகொள்வதற்கு ஏற்ப மட்டுமே, தகவல் தரப்படுகிறது. பாட வாரியாக தேர்வு பெற்ற அனைவரின் தகவல்களையும், ஒரே பட்டியலில் வெளியிடுவது இல்லை.இதுபோன்று பட்டியல் வெளியிட்டால், தகுதியானவர்கள் மட்டும் தான் தேர்வாகி இருக்கிறார்களா என்பதை, அனைவருமே தெரிந்து கொள்ள முடியும். தற்போது, அதற்கு வழியில்லாமல் உள்ளது. டி.இ.டி., தேர்வில், தேர்வு பெற்றவர்களின் பெயர் விவரங்களையும், அவர்கள், பிரிவு வாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரங்களையும், அனைத்து தேர்வர்கள் பார்வைக்கு, டி.ஆர்.பி., வெளியிட வேண்டும்.இப்படி எதையுமே செய்யாமல், "வெளிப்படையாக தேர்வுப் பணிகள் நடக்கிறது' என, டி.ஆர்.பி., திரும்ப திரும்ப கூறி வருவது, தேர்வர்களை எரிச்சல் அடைய செய்துள்ளது.