First Published : 26 December 2012 12:42 PM IST
·
அரசு மற்றும்
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இன்று முதல் இந்தப் புத்தகங்களை விநியோகம் செய்ய வேண்டும் என்று மாவட்டத்
தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒன்று முதல்
எட்டாம் வகுப்பு வரை முப்பருவ முறை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, மூன்றாவது பருவம் ஜனவரி 2-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. மூன்றாம் பருவத்துக்காக ஒவ்வொரு
வகுப்புக்கும் 2 புத்தகங்கள் என மொத்தம் 2.17 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக
விநியோகிப்பதற்காக 1 கோடியே 40 லட்சம்
புத்தகங்களும், தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் சில்லறை
விற்பனைக்காக 77 லட்சம் புத்தகங்களும் அச்சிடப்பட்டுள்ளன.
இந்தப் புத்தகங்கள் அனைத்தும் மாவட்ட விநியோக மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மாவட்ட விநியோக
மையங்களில் இருந்து புத்தகங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு புதன்கிழமைமுதல்
விநியோகம் செய்ய வேண்டும் என்று மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது. மூன்றாம் பருவம் தொடங்கும் நாளான ஜனவரி 2-ம் தேதியன்றே அனைத்து மாணவர்களிடமும் புத்தகங்கள்
கிடைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல் பருவம், இரண்டாம் பருவங்களின் தொடக்க நாளன்றே மாணவர்களுக்குப்
புத்தகங்கள் கிடைக்கும் வகையில் முன்கூட்டியே அச்சடிக்கப்பட்டு, பள்ளிகளில் விநியோகம் செய்யப்பட்டன. அதேபோல், இந்தப்
பருவத்துக்கான புத்தகங்களும் முன்கூட்டியே அச்சடித்து மாவட்ட விநியோக மையங்களுக்கு
அனுப்பப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டுப் பாடநூல்
கழகத்தின் 22 வட்டார
அலுவலகங்களிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு
வரையுள்ள பாடநூல்களின் விற்பனை இன்று தொடங்க உள்ளது. மாவட்டத் தொடக்கக் கல்வி
அலுவலர்கள் தங்களது மாவட்டத்துக்குள்பட்ட தொடக்க மற்றும் மழலையர் பள்ளிகளை
குழுக்களாகப் பிரித்து, அவர்களுக்கான நாள்களை ஒதுக்கி
பாடநூல் விற்பனையை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
No comments:
Post a Comment