SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Friday, August 31, 2012

HAPPY BIRTHDAY TO R.MUTHUKRISHNAN

பிறந்தநாள் வாழ்த்து
 


செப்டம்பர் 1 அன்று பிறந்த நாள் காணும்  
தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்
 மாநிலத் துணைத் தலைவர் 
திரு. இரா.  முத்துக்கிருஷ்ணன் அவர்கள் குடும்பத்தாருடன் எல்லா வளமும் பெற்று மகிழ்வுடன் வாழ  நாகப்பட்டினம் மாவட்டக்கிளை மனதார வாழ்த்துகிறது 

2 STUDENTS INJURED DUE TO PILLAR COLLAPSE IN HOSUR


பள்ளி நுழைவு வாயிலில்


தூண்கள் சரிந்து விழுந்து 2 மாணவர்கள் 

படுகாயம்


ஓசூர் : ஓசூர் அருகே பள்ளி நுழைவு வாயில் தூண்கள் கீழே விழுந்ததில் 2 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள எஸ். முதுகானப்பள்ளியைச் சேர்ந்தவர் ஆஞ்சப்பா. இவரது மகன் மல்லேஷ் (8). இவன் அங்குள்ள தெலுங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறான். அதே பள்ளியில் மாணவன் வெங்கடேஷ் (10) என்பவன் 5ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று காலை பள்ளிக்கு சென்ற இருவரும் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து பள்ளி கேட்டை பிடித்து விளையாடினர். அப்போது, கேட்டின் இருபுறமும் உள்ள தூண்கள் சரிந்து மாணவர்கள் மீது விழுந்தது.

இதில் மல்லேசுக்கு தலையிலும், வெங்கடேசுக்கு காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் அலறி துடித்த அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் கல்வித் துறை அதிகாரிகள் எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சம்பவம் குறித்து கெலமங்கலம் போலீசாரும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Thursday, August 30, 2012

47 lakh students will get free colour pencils by september end


47 லட்சம் மாணவ, மாணவியருக்கு வண்ண பென்சில்கள்-30-08-2012



சென்னை: அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா வண்ணப் பென்சில், கணித உபகரணப் பெட்டி ஆகியவற்றை, செப்டம்பர் இறுதியில் வழங்க, பள்ளி மற்றும் தொடக்கக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, விலையில்லா காலணி, பாடப் புத்தகம், சைக்கிள், வண்ணப் பென்சில், கிரையான் பென்சில், புத்தகப் பை, ஊக்கத் தொகை உள்ளிட்ட, 14 திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதில், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு பயிலும், 12.50 லட்சம் மாணவர்களுக்கு, விலையில்லா கிரையான் பென்சில் வழங்குவதற்கான பணி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளில் பயிலும், 35 லட்சம் மாணவர்களுக்கு, வண்ணப் பென்சில் வழங்கும் திட்டமும், இறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை பயிலும், 46 லட்சம் மாணவர்களுக்கு, விலையில்லா கணித உபகரணப் பெட்டி வழங்குவதற்கான ஏற்பாடுகளும் முடிந்துள்ளன. கிரையான் பென்சில், வண்ணப் பென்சில் தலா, 16, தனித்தனி பாக்கெட்டுகளில் வழங்கப்படுகின்றன.
பாக்கெட்டின் முன்புறம், தமிழக அரசின் முத்திரையுடன், முதல்வர் படம் பொறிக்கப்பட்டுள்ளது; பின்புறம், மாணவரின் பெயர், வகுப்பு, பள்ளி, மாவட்டம் ஆகியவை அச்சிடப்பட்டுள்ளன. வகுப்புகளில், பென்சில் பாக்கெட்டுகள் மாறிவிடாமல் இருக்கவே, இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மூன்று திட்டங்களுக்கும், டெண்டர் விடப்பட்டு, தகுதி வாய்ந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தற்போது, பென்சில், கிரையான் பென்சில் மற்றும் கணித உபகரணப் பெட்டி தயாரிக்கும் வேலை, மும்முரமாக நடந்து வருகிறது. செப்டம்பர் இறுதி வாரத்தில் இருந்து, அனைத்து மாணவ, மாணவியருக்கும், கிரையான் பென்சில், வண்ணப் பென்சில் மற்றும் கணித உபகரணப் பெட்டி வழங்கப்படும் என, பள்ளி மற்றும் தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

AEEO SUSPENDED FROM DUTY FOR PERVERSITY IN AIDED SCHOOLS


அரசு நிதியுதவி பள்ளிகளில் முறைகேடு: உதவி தொடக்க கல்வி அலுவலர் இடைநீக்கம்

First Published : 30 Aug 2012 03:42:36 AM IST




வேலூர், ஆக. 29: ராணிப்பேட்டையில், அரசு நிதியுதவி பெறும் இரு பள்ளிகளில் நடந்த முறைகேடு தொடர்பாக வாலாஜா வட்டார கிழக்கு சரக உதவித் தொடக்க கல்வி அலுவலர் பூங்கோதை இடைநீக்கம் செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டையில் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக காண்பித்து, கூடுதல் ஆசிரியர்களை நியமித்து முறைகேடுகள் செய்துள்ளதாக புகார்கள் வந்தது.
இதையடுத்து அப் பள்ளிகளில் வேலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் திங்கள்கிழமை திடீர் சோதனை நடத்தி வாலாஜா வட்டார கிழக்கு சரக உதவித் தொடக்க கல்வி அலுவலர் பூங்கோதை, பள்ளித் தாளாளர் கருணாகர சஞ்சீவிதாஸ், தலைமை ஆசிரியை ஆலீஸ் தபித்தாள், மற்றொரு பள்ளியின் தாளாளர் கெஜலட்சுமி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து பூங்கோதையை இடைநீக்கம் செய்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அலுவலகம் புதன்கிழமை உத்தரவிட்டது.

NO ONE PASSED IN PONDICHERRY TET SECOND PAPER EXAM

புதுவையில் ஆசிரியர் தகுதித் தேர்வு 100% "பெயில்'

First Published : 30 Aug 2012 03:13:34 AM IST



புதுச்சேரி, ஆக. 29: தமிழக அரசு நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் புதுவை, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கான தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. இதில் 2-வது தாளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. முதல் தாளில் 20 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தால், கடந்த ஜூலை 12-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர் பயிற்சி பட்டயம் பெற்றவர்களும், பட்டம் பெற்றவர்களும் தேர்வெழுதினர்.
முதல் தாளை 4,769 பேரும், 2-வது தாளை 4,501 பேரும் எழுதினர். இதன் முடிவுகள் புதன்கிழமை அறிவிக்கப்பட்டன.
இதில் 60 விழுக்காடு அல்லது அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மீண்டும் தேர்வு: ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் அக்டோபர் 3-ம் தேதி மீண்டும் நடத்தப்படுகிறது. இதில், ஜூலை 12-ம் தேதி தேர்வெழுதி, 60 விழுக்காடு மதிப்பெண் பெறத் தவறியவர்கள் கலந்து கொள்ளலாம்.
இதற்காகத் தனியே விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது. மேலும், முதல் தாள் மற்றும் 2-ம் தாளுக்கு விடையளிப்பதற்கான கால அவகாசமும் ஒன்றரை மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்று புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குநர் இ.வல்லவன் தெரிவித்துள்ளார்.

NATIONAL HUMAN RIGHTS COMMISSION QUESTIONS TAMILNADU GOVERNMENT FOR NOT ADMITTING A SC STUDENT IN MIDDLE SCHOOL MADURAI

தலித் மாணவருக்குஅனுமதி மறுப்பு: அரசுக்கு "நோட்டீஸ்

புதுடில்லி: மதுரை மாவட்டம், குராயூர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தலித் மாணவரை சேர்க்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, பத்திரிகைகளில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து, புகாராக விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். அதன் பேரில், தலித் மாணவருக்கு அரசுப் பள்ளியில் சேர்ந்து படிக்க அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக, நான்கு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக தலைமை செயலருக்கு மனித உரிமைகள் ஆணையம் "நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

AMENDMENT MADE IN CHILD LABOUR ACT 1986-WILL IT WORK? -DINAMANI

தலையங்கம்: அனைவருக்கும் கல்வி...



இனி சிறார்களை எந்தத் தொழிலிலும் பயன்படுத்த முடியாது. ""சிறார் தொழில்முறை (தடை மற்றும் ஒழுங்காற்று) சட்டம்-1986''-ல் இதற்கான சட்டத் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை இரு தினங்களுக்கு முன் ஒப்புதல் அளித்துள்ளது.
அமலில் உள்ள குழந்தைத் தொழிலாளர் முறை தடைச் சட்ட விதிமுறைகளின்படி பாதுகாப்பற்ற, ஆபத்தான தொழில்களில் 14 வயதுக்குட்பட்ட சிறார்களைப் பணியமர்த்துவது குற்றமாகக் கருதப்படுகிறது. இந்தச் சட்டத்தை மீறுவோருக்கு அபராதமும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அளிக்க முடியும். தற்போதைய சட்டத் திருத்தத்தின்படி பாதுகாப்பானதும், ஆபத்து இல்லாததுமான தொழில்களிலும்கூட, அதாவது எத்தகைய தொழிலிலும் சிறார்களைப் பணியமர்த்துதல் குற்றமாகக் கருதப்படும்.
இந்தப் புதிய விதிமுறையைப் புகுத்த வேண்டியதன் காரணம், அனைத்து சிறார்களும் பள்ளிசென்று கல்வி பயில வேண்டும் என்பதுதான். "அனைவருக்கும் கல்வி' சட்டம் அமலுக்கு வந்துவிட்டதால், 6 வயது முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு இலவசக் கல்வி உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எந்தக் காரணத்தை முன்னிட்டும் சிறார்கள் பள்ளி செல்லாமல் தவிர்ப்பதைத் தடுக்கும் நடவடிக்கையாகத்தான் இந்தப் புதிய விதிமுறையை அரசு புகுத்துகிறது. இதற்காக மத்திய அரசுக்குப் பாராட்டுகள்.
ஆபத்தில்லாத, பாதுகாப்பான தொழில்களில் சிறார்களை ஈடுபடுத்தலாம் என்பதே தவறு. தொழிற்துறை வேண்டுமானால் ஆபத்தில்லாததாக, பாதுகாப்பானதாக இருக்கலாம். ஆனால், அதை நடத்துபவர்கள் நேர்மையற்றவர்களாக இருந்தால், அந்தத் தொழில் நிச்சயமாக சிறார்களுக்கு பாதுகாப்பற்றதுதான். குழந்தைப்பருவ மகிழ்ச்சிக் குலைவைத் தடுக்கும் இந்தச் சட்டத் திருத்தம் அவசியமானது.
தற்போது இந்தியாவில் பள்ளி செல்லாமல் சுமார் 46 லட்சம் சிறார்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால் பயன் அடைந்துவிடுவார்கள் என்று முழுமையாக நம்புவதற்கில்லை. எந்தத் தொழிலிலும் சிறார்களைப் பணியமர்த்தக்கூடாது என்பதால், அனைத்துச் சிறார்களும் பள்ளிக்குச் சென்றுவிடுவார்கள் என்று அரசு நம்புமேயானால், அதுவும் பேதைமை!
சிறார்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் தங்கள் கைக்குழந்தையைப் பார்த்துக்கொள்ளச் செய்யும் கட்டடத் தொழிலாளியை இந்தச் சட்டம் என்ன செய்துவிட முடியும்? பட்டுச்சேலையில் ஜரிகை கோத்து வாங்க தன்னுடன் மகன் அல்லது மகளை உதவிக்கு அமர்த்தும் நெசவாளித் தந்தையை இந்தச் சட்டம் என்ன செய்துவிட முடியும்? தாய்க்கு உதவியாக தீக்குச்சிகளை அடுக்கித் தரும் பிள்ளைகளை, "தொழிலாளி' என்று வகைப்படுத்த முடியுமா?
அந்தப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைச் சம்பளத்துக்காக வேலைக்கு அமர்த்தவில்லை; குழந்தைகள் உதவி செய்கிறார்கள் என்றே சொல்லக்கூடும். அனைவருக்கும் கல்வி சட்டத்தை மேலும் முழுமை செய்யும் வகையில், 14 வயதுவரை பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்குத் தண்டனை அளிக்கும்விதமாகச் சட்டமா இயற்றிவிட முடியும்? குழந்தைகள் அனைவரும் கல்வி பெறவேண்டும் என்கிற நோக்கம் உன்னதமானது. ஆனால், அதை உறுதிப்படுத்துவது எளிதல்ல. அத்தகைய நிலைமை ஏற்படாத வரையில், குழந்தைகள் அனைவரும் பள்ளிக் கல்வி பெறுவது நிறைவேறாது.
சென்னை போன்ற பெருநகரங்களில் அரசுப் பள்ளிகள் குடிசைப்பகுதிகளுக்கு அருகிலேயே இருந்தும், இலவசக் கல்வி அளிக்கப்பட்டாலும், சத்துணவு கிடைத்தவுடன் பெரும்பாலான வெளியேறும் நிலைமைதான் தொடர்கிறது. பெற்றோரும் தங்கள் குழந்தைகள் பள்ளி செல்வது மதிய உணவுக்காக என்றுதான் அனுப்புகிறார்களே தவிர, கல்வி கற்க என்ற எண்ணம் அவர்களிடம் இல்லை. ஆசிரியர்கள் உணவு கொடுத்தார்களா என்பதைக் கவனிக்கிறார்கள். கல்வி புகட்டினார்களா என்பதைக் கேட்பதே இல்லை. ஏழை மக்களிடம் தங்கள் குழந்தைகள் கல்வி கற்பது அடிப்படை உரிமை என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தாதவரை, இந்தச் சட்டத்தால் மட்டுமே அதிக பயன் ஏற்பட்டுவிடாது.
இத்துடன், இன்னொரு திருத்தத்தையும் செய்ய அரசு ஒப்புதல் தந்துள்ளது. அதாவது, 14 வயது முதல் 18 வயதுள்ளவர்களை வளர்இளம் பருவத்தினர் என்று அடையாளப்படுத்துவதோடு, அவர்களை ஆபத்தில்லாத, பாதுகாப்பான தொழில்களில் ஈடுபடுத்தலாம் என்று வரன்முறை செய்துள்ளனர்.
அனைவருக்கும் கல்வி சட்டத்தின்படி எட்டாவது வகுப்பு வரை மட்டுமே இலவசக் கல்வி சாத்தியம். "குழந்தை ஈட்டும் வருமானம் குடும்பத்துக்கே அவமானம்' என்று சொன்னாலும், வாழ்க்கை நெருக்கடியும் விலைவாசி உயர்வும் ஒவ்வொரு ஏழைக் குடும்பத்தையும் வாட்டி வதைக்கிறது. இத்தகைய நிலையையும் அரசு தவிர்க்க விரும்பினால், "தொழில்புரியும் வளர்இளம் பருவத்தினருக்கான பள்ளி'களை உருவாக்க வேண்டியது அவசியம். 14 முதல் 18 வயதுள்ள இந்த மாணவர்கள், இப்பள்ளிகளில் படித்துக்கொண்டே, ஆபத்தில்லா தொழில்களில் பணிபுரிய முடியும்.
இந்தியாவிலுள்ள எல்லா குழந்தைகளும், ஏன் எல்லா பிரஜைகளும், எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்கிற நிலைமையை சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளாகியும் நாம் எட்டவில்லை என்பதே தலைகுனிவு. இனிவரும் தலைமுறையினராவது எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாகவும், கல்வி அறிவுபெற்றவர்களாகவும் வளர வேண்டும் என்கிற நல்லெண்ணத்தின் காரணமாக எழுந்ததுதான் எல்லோருக்கும் கல்வித் திட்டம். இது முழுமையான வெற்றியைப்பெற வேண்டுமானால், அடிப்படை வறுமை அகற்றப்பட்டால் மட்டுமே சாத்தியம்!
அரசின் நோக்கம் பாராட்டுக்குரியது என்பதில் ஐயமே இல்லை. சற்று தொலைநோக்குப் பார்வையுடன், சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கும் வகையிலான பொருளாதாரத் திட்டங்களை ஊக்குவிக்காமல், அடிமட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும், அவர்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் உண்மையான அக்கறை காட்டினால் மட்டுமே, அரசின் நோக்கம் ஈடேறும் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது!

Wednesday, August 29, 2012

GOVERNMENT SHOULD DROP TET: RAMADASS

ஆசிரியர் தகுதித்தேர்வு முறை வேண்டாம்: ராமதாஸ் வலியுறுத்தல்
Posted Date : 13:04 (29/08/2012)Last updated : 13:04 (29/08/2012)
சென்னை: ஆசிரியர் தகுதித்தேர்வு முறையை கைவிட வேண்டும் என்று  பா.ம.க.  நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழ்நாட்டில் கல்விபெறும்  உரிமைச்சட்ட விதிகளின்படி அண்மையில் நடத்தபட்ட ஆசிரியர் தகுதித் தேர்வின்  முடிவுகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன.

தேர்வு எழுதிய 6.67 லட்சம் பேரில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாக 2448 பேர்  மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு தேர்வில் 99.6 விழுக்காட்டினர் தோல்வி  அடைந்திருப்பதை வைத்து பார்க்கும் போது  தேர்வு எழுதியவர்களிடம் குறை  இல்லை.தேர்வுமுறையில் தான் குறை உள்ளது என்பதை உணர முடிகிறது.

இந்தத் தேர்வில் நகர்ப்புற மற்றும் பணக்கார மாணவர்கள் அனைத்து கலைகளையும்  பயன்படுத்தித் தேர்ச்சிப் பெற்றுவிடும் நிலையில், கிராமப்புற மாணவர்களும், முதல்  தலைமுறைப் பட்டதாரிகளும் வெற்றி பெற முடியவில்லை. இன்றைய சூழலுக்கு சற்றும்  ஒவ்வாத ஒரு தேர்வை பெரும் குழப்பங்களுடன் நடத்தி, அதில் 99 விழுக்காட்டிற்கும்  அதிகமானோர் தோல்வி அடைந்துவிட்டதாக ஆசிரியர் தேர்வு வாரியம் கூறுவது,  ஆண்டுக்கணக்காக படித்து பட்டய மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை அவமானப்படுத்தும்  வகையில் உள்ளது.

இந்திய ஆட்சிப் பணி மற்றும் காவல் பணி அதிகாரிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள்  போன்றவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பிறகே பணியை தொடங்குகின்றனர்.


ஆனால், ஆசிரியர்களுக்கு எந்தப் பயிற்சியும் தரப்படுவதில்லை. ஆசிரியர்களுக்கு  இத்தகைய பயிற்சிகளை அளிப்பதை விட்டுவிட்டு, ஒன்றுக்கும் உதவாத தகுதித் தேர்வை  நடத்துவது திறமையை வளர்க்கவோ,அளவிடவோ உதவாது.

எனவே, ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை ரத்து செய்துவிட்டு, ஏற்கனவே இருந்த  முறைப்படி, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பின் அடிப்படையில் ஆசிரியர்களை  தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு ஓராண்டு   கட்டாயப்பயிற்சி அளித்து ஆசிரியர் பணியில் அமர்த்தவேண்டும்.அப்போது தான் தரமான  கல்வியை வழங்க முடியும்”என்று கூறியுள்ளார்.

STUDENTS BOYCOTT SCHOOL IN THIRUVALUUR DISTRICT FOR NOT APPOINTING TAMIL TEACHER


2012
27
Aug
தமிழ் ஆசிரியர் இல்லை : மாணவ,மாணவிகள் பள்ளி புறக்கணிப்பு


பள்ளிப்பட்டு: தமிழ் ஆசிரியர் நியமிக்க வலியுறுத்தி பள்ளிக்கு செல்லாமல் மாணவர்கள் புறக்கணித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கீழ்கால்பட்டு பகுதியில் அரசு நிதி உதவி பெறும் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1ம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 18 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு தமிழ் ஆசிரியர் கிடையாது. தமிழ் ஆசிரியர் நியமிக்கவேண்டும் என பெற்றோர், மாணவர்கள் கல்வித்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பூங்கோதை உள்ளார். 3 வயது குழந்தைகளையும் சேர்க்கவேண்டும் என்று பூங்கோதைக்கு பள்ளி நிர்வாகம் கடும் நெருக்கடி கொடுக்கிறதாம். இந்த நிலையில், இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்தனர். பெற்றோர்களும் பள்ளி முன் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ் ஆசிரியர் நியமிக்கவேண்டும் என்று கோஷங்கள் போட்டனர். போலீசார் வந்து அவர்களிடம்  பேசினர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

PARENTS NOT HAPPY ABOUT RESTRICTING MORNING SCHOOL PRAYER ONLY ON MONDAYS -DINAMALAR


திங்கள் மட்டும் பொது இறை வணக்கம்: பெற்றோர் அதிருப்தி-29-08-2012


தமிழகம் முழுவதும் பள்ளிகளில், தினமும் காலை, பள்ளியில் இறைவணக்கம் நடைபெறும். பள்ளி துவங்கும் நேரத்திற்கு, மாணவ, மாணவியர் அனைவரும், பள்ளி வளாகத்தில் உள்ள கொடிக்கம்பம் முன் கூடுவர். தலைமை ஆசிரியர் தலைமையில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்பர். அனைவரும் வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவர். அடுத்து தலைமை ஆசிரியர் தேசியக் கொடியேற்றுவார்.காஞ்சிபுரம்: பள்ளிகளில் திங்கட்கிழமை மட்டும், பொது இறைவணக்கம் நடத்தினால் போதும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொடியேற்றப்பட்டதும் அனைவரும் கொடிக்கு வணக்கம் செலுத்தி, கொடி பாடலை உரக்கப் பாடுவர். அதன்பின், தினம் ஒரு மாணவர் அன்று பத்திரிகைகளில் வந்த முக்கிய செய்திகளை வாசிப்பார். ஒரு மாணவர் திருக்குறள் கூறி அதற்குரிய பொருளை எடுத்துரைப்பார். அதைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் அல்லது ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஏதேனும் நீதிக்கதைகளைக் கூறி அறிவுரை வழங்குவர். அதன்பின் தேசிய கீதம் பாடி, இறைவணக்கத்தை நிறைவு செய்வர்.
இதில் பங்கேற்பதற்காக மாணவ, மாணவியர், பள்ளி துவங்குவதற்கு, 10 நிமிடங்களுக்கு முன்பாகவே, பள்ளிக்கு வர வேண்டும். தாமதமாக வரும் மாணவ, மாணவியரை, உடற்கல்வி ஆசிரியர் முட்டிப்போட வைத்து, எச்சரித்து வகுப்புகளுக்கு அனுப்புவார். இதுதொன்று தொட்ட வழக்கமாக இருந்து வந்தது.
இது மாணவர்களுக்கு உரிய நேரத்தில் பள்ளிக்கு வர தூண்டுகோலாக இருந்தது. தினம் ஆசிரியர்கள் கூறும் அறிவுரைகள், திருக்குறள், செய்தி வாசிப்பு, போன்றவை மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. இதற்கு தற்போது அதிகாரிகள் வேட்டு வைத்துள்ளனர்.
சமீபத்தில் பள்ளி கல்வித் துறையிலிருந்து, அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், இறைவணக்கம் திங்கட்கிழமை மட்டும், பொதுவாக நடத்தினால் போதும். மற்ற நாட்களில் வகுப்பறைகளிலே நடத்திக் கொள்ளுங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெற்றோர் கூறும்போது, இறை வணக்கத்திற்கு அதிகபட்சம் 15 நிமிடங்கள் செலவாகும். இதனால் யாருக்கும் பாதிப்பில்லை. இதனால் நன்மையே அதிகம். இந்த நடைமுறையை ஏன் மாற்றினார்கள் என்று தெரியவில்லை. மாணவர்கள் நலன் கருதி, முன்புபோல் தினமும் இறைவணக்கம் நடத்த, முதல்வர் உத்தரவிட வேண்டும் என்றனர்.

EDUCATIONAL CERTIFICATES MAY BE CANCELLED FOR SEXUALLY HARRASING TEACHER


2012
25
Aug
மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் டிஸ்மிஸ் ஆசிரியரின் கல்விதகுதியும் பறிபோகிறது


நாமக்கல்: மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக டிஸ்மிஸ் செய்யப்பட்ட நாமக்கல் ஆசிரியரின் கல்வித்தகுதியும் பறிபோகிறது. நாமக்கல் அருகே உள்ள வடுகப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சத்யபிரபு (32).  இவர், பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியைகளை செக்ஸ் டார்ச்சர் செய்து வந்தார். ஆசிரியரின் மோசமான செயல்பாட்டை கண்டித்து பெற்றோர்கள் கடந்த ஜூன் 25ம் தேதி பள்ளி முன், போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சத்யபிரபு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் இவரை ஆசிரியர் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் அருள்மொழிதேவி உத்தரவிட்டார். பள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்வதுடன், அவர்களின் கல்வி தகுதியையும் ரத்து செய்ய வேண்டும் என கடந்த ஜூன் மாத இறுதியில் தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சத்யபிரபு டிஸ்மிஸ் செய்யப்பட்டார். சத்யபிரபுவின் கல்வித்தகுதி ரத்து குறித்து அருள்மொழிதேவி கூறுகையில், ‘’தற்போது டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்த பிறகு அந்த நடவடிக்கையும் எடுக்கப்படும்’’ என்றார்.

சேந்தமங்கலம் உதவி தொடக்கல்வி அலுவலகத்தில் தான் சத்யபிரபுவின் சர்வீஸ் ரெஜிஸ்டர் மெயின்டைன் செய்யப்படுகிறது. பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படும் போது மீண்டும் அவர் அரசு வேலைக்கு சேர முடியாதபடி பட்டபடிப்பு சான்றிதழில் குறிப்பு எழுதிய பிறகே சம்பந்தப்பட்டவரிடம் உயர் அதிகாரிகள் ஒப்படைப்பார்கள். தற்போது கல்விதகுதியே ரத்து செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதால் இதற்கான வழிகாட்டும் நெறிமுறைக்காக மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் காத்திருக்கிறது.

NORTHERN DISTRICTS FRONT RUNNERS IN TET RESULT


பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2012,23:43 IST
கல்வித் தரத்தில், தொடர்ந்து பல ஆண்டுகளாக, பின்னடைவில் உள்ள வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட வட மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர், டி.இ.டி., தேர்வில், அதிக இடங்களைப் பிடித்து, சாதனை படைத்துள்ளனர்.

கடந்த 25ம் தேதி, ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) முடிவு வெளியிடப்பட்டது. 6.72 லட்சம் பேர் பங்கேற்ற இந்த தேர்வில், வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்வு முடிவு குறித்த புள்ளி விவரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம், மாவட்ட வாரியாகவும், ஆண், பெண் வாரியாகவும் அலசி ஆராய்ந்து, நேற்று வெளியிட்டது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், எப்போதுமே கடைசி இடங்களில் அணி வகுக்கும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட வட மாவட்டங்கள், டி.இ.டி., தேர்வில் அபார சாதனை படைத்துள்ளன. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வரே, அதிக இடங்களைப் பிடித்து, சாதனை படைத்துள்ளனர்.

கல்வியில் சிறந்து விளங்கும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்களுக்கு, மிகக் குறைந்த இடங்களே கிடைத்துள்ளன.

சேலம், "டாப்':


இடைநிலை ஆசிரியருக்கான, டி.இ.டி., முதல் தாள் தேர்வில், 1,735 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் அதிகபட்சமாக, சேலம் மாவட்டத்தில் இருந்து, 121 பேர் தேர்வு பெற்றுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், 116 பேர்; வேலூரில், 99; திருவண்ணாமலையில், 65; விழுப்புரம் மாவட்டத்தில், 77 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதுவே, கன்னியாகுமரி மாவட்டத்தில், 26 பேர், நெல்லையில், 62 பேர், தூத்துக்குடியில், 32 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மிகக் குறைவாக, நீலகிரி மாவட்டத்தில், நான்கு பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்த நான்கு பேருமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மற்ற மாவட்டங்களில், சராசரியாக, 25 பேர் வீதம் தேர்ச்சி 
பெற்றனர். தலைநகர் 
சென்னையில், 69 பேர் தேர்ச்சி
பெற்றுள்ளனர்.
கணிதத்தில் கடலூர்:


பட்டதாரி ஆசிரியருக்கான, டி.இ.டி., இரண்டாம் தாள், கணிதம் - அறிவியல் பாடங்களில், கடலூர் மாவட்டத்தில் இருந்து, 70 பேர் தேர்ச்சி பெற்று, அபார சாதனை படைத்தனர். இதற்கு அடுத்த இடங்களில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, 23 பேர்; தர்மபுரியில், 22 பேர் தேர்ச்சி பெற்றனர். பிளஸ் 2 தேர்வில், முதலிடத்தை பிடிக்கும் விருதுநகர் மாவட்டத்தில், கணிதம் - அறிவியல் பாடத்தில், ஒரே ஒரு பெண் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளார். ராமநாதபுரத்தில்இரண்டு பேர், தூத்துக்குடி, திருவாரூர், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து, தலா மூன்று பேர் தேர்ச்சி பெற்றனர்.
சமூக அறிவியலில்...:


டி.இ.டி., இரண்டாம் தாளில், சமூக அறிவியல் பாடத்தில், சேலம் மாவட்டமே முதலிடம் பிடித்தது. இந்த மாவட்டத்தில், 39 பேர் தேர்ச்சி பெற்றனர். 29 இடங்களைப் பிடித்து, கடலூர், தர்மபுரி மாவட்டங்கள், இரண்டாவது இடத்திலும்; 24 இடங்களைப் பிடித்து, விழுப்புரம் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்தப் பாடத்திலும், தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், அதிக இடங்களைப் பிடிக்கவில்லை. கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில், தலா, 11 பேர், தூத்துக்குடி மாவட்டத்தில், ஏழு பேர், விருது நகரில், 12 பேர், கோவையில் ஐந்து பேர் தேர்ச்சி பெற்றனர்.கடினமாக அமைந்த, டி.இ.டி., தேர்வில், வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், அதிக இடங்களைப் பிடித்து சாதனை படைத்திருப்பதைக் கண்டு, கல்வித்துறை அதிகாரிகள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
"முட்டை' வாங்கிய சிவகங்கை :


டி.இ.டி., இரண்டாம் தாள், கணிதம் - அறிவியல் பாடத்தில், மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் சொந்த மாவட்டமான சிவகங்கையில் இருந்து, ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. இதேபோல், நீலகிரி மாவட்டத்தில் இருந்தும், ஒருவர் கூட 
தேர்வு பெறவில்லை. இந்தப் பாடத்தில், புதுக்கோட்டை, விருதுநகர், ஆகிய மாவட்டங்களில் இருந்து, தலா ஒருவர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இரண்டாம் தாள் தேர்வில், சமூக அறிவியல் பாடத்திலும்,நீலகிரி மாவட்டத்தில், ஒருவர் கூட தேர்வு பெறவில்லை. சிவகங்கை மாவட்டத்தில், இருவர் தேர்ச்சி பெற்றனர்.

இளைஞர்கள் அபார சாதனை:


டி.இ.டி., தேர்வில், 25 வயது முதல், 30 வரையிலான இளைஞர்கள், 77.81 சதவீத இடங்களை கைப்பற்றி, சாதனை படைத்தனர். தேர்ச்சி பெற்ற, 2,448 பேரில், 30 வயதிற்கு உட்பட்டோரின் எண்ணிக்கை, 1,905.இதில், 25 வயது முதல், 30 வயது வரையிலான இளைஞர்கள், படித்து முடித்து வெளியே வந்த வேகத்தில், தேர்வை சிறப்பாக எதிர்கொண்டு, சாதித்திருப்பது தெரிய வந்துள்ளது. தேர்வு எழுதிய, 40 முதல், 45 வரையிலான, 5,653 பேரில், 20 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.முந்தைய ஆட்சியில், அனைத்து வகை ஆசிரியருமே, மாநில பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். இதனால், 50 வயதிற்கு மேற்பட்டவர் அதிகளவில் தேர்வு பெற்றனர். வயதான நிலையில் தேர்வு பெறும் ஆசிரியருக்கு, பணியில் ஈடுபாடோ, கல்வித்துறை அளிக்கும் பயிற்சிகளில், பிடிப்புடன் ஈடுபடவோ மாட்டார்கள் என்பது, பலரது கருத்து.

Tuesday, August 28, 2012

10000 TEACHERS DEPLOYED- SAYS ELEMENTARY DIRECTOR


பணி நிரவல் மூலம் 10,000 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்-28-08-2012


துவக்கப் பள்ளியாக இருந்தால், 30 மாணவருக்கு, ஓர் ஆசிரியர்; ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளில், 35 மாணவருக்கு, ஓர் ஆசிரியர்; ஒன்பது, 10ம் வகுப்புகளில், 40 மாணவருக்கு, ஓர் ஆசிரியர் என்ற வீதத்தில், பாட வாரியாக, ஆசிரியர் இருக்க வேண்டும்.
இதற்கு மாறாக, குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள பள்ளிகளில், அதிகமான ஆசிரியரும்; மாணவர்கள் அதிகமாக உள்ள பள்ளிகளில், ஆசிரியர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலைமை, பள்ளிக் கல்வித் துறையில் பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களில் பெரும்பாலானோர், தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள், தென் மாவட்டங்களில் காலி இடங்கள் ஏற்படுவதை கண்காணித்து, அதற்கேற்ப நடைமுறைகளை மேற்கொண்டு, அங்கே பறந்து விடுகின்றனர்.
இதனால், வடமாவட்டங்களில், காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மாநகரங்கள் மற்றும் அதையொட்டிய புறநகர்ப் பகுதிகளில், தேவையை விட, அதிகமான ஆசிரியர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்த வகையில், மாணவ, மாணவியர் குறைவாக உள்ள பள்ளிகளில், 10 ஆயிரம் பேர் இருந்தது கண்டறியப்பட்டது.
இதுகுறித்த ஆய்வுக்குப் பின், ஆசிரியர் இல்லாததால், மாணவர் படிப்பு பாதிக்கக் கூடாது. தேவையுள்ள பள்ளிகளில், போதிய ஆசிரியரை நியமிக்கவும், கூடுதலாக உள்ள ஆசிரியரை, மாறுதல் செய்யவும் தயங்க வேண்டாம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு முதல்வர் பச்சைக்கொடி காட்டினார்.
கடந்த மாதம் நடந்த கலந்தாய்வில், தொடக்க கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறைகளில், 10 ஆயிரம் ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு தூக்கி அடிக்கப்பட்டனர். அனைவருமே, வட மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாவட்டத்தில் இருந்து மட்டும், 150 ஆசிரியர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர். தொடக்கக் கல்வித்துறையில், 3,200 ஆசிரியர்கள், பணி நிரவல் மூலம் மாற்றப்பட்டனர். பள்ளிக்கல்வித் துறையில், 6,500 ஆசிரியர்கள் வரை, பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.
அரசின் அதிரடியால், ஆசிரியர்கள் புலம்பினாலும், அனைத்து மாணவ, மாணவியரும் கல்வி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடக்கக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் கூறும் போது, தொடக்கக் கல்வித் துறையில், 3,000 இடைநிலை ஆசிரியர்களும்; பள்ளிக் கல்வித் துறையில், 6,000 ஆசிரியர்களும், விரைவில் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். மாணவ, மாணவியர் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதல் பணியிடங்களில், இந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதனால், மாணவர்கள் மேலும் பலன் பெறுவர் என்றார்.

SHOW CAUSE NOTICE ISSUED TO SCHOOLS NOT FOLLOWING EQUITY EDUCATION


சமச்சீர் கல்வி திட்டத்தை செயல்படுத்தாத பள்ளிக்கு நோட்டீஸ்-28-08-2012


தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற, பிரபல தனியார் பள்ளிகள், சமச்சீர் கல்வி திட்டத்தையே பின்பற்ற வேண்டும். ஆனால், பிரபல தனியார் பள்ளிகள், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டங்களையே அமல்படுத்துகின்றன.சென்னை: தமிழக அரசின் அங்கீகாரத்துடன் இயங்கும் பிரபல தனியார் பள்ளிகள், சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்தாமல், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டங்களை நடத்தி வருகின்றன. சமீபத்தில், பிரபல தனியார் பள்ளி ஒன்றில், இத்தகைய முறைகேட்டை கண்டுபிடித்த, மெட்ரிக் குலேஷன் பள்ளிகள் இயக்குனரகம், அதன் அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மெட்ரிக் பாடத் திட்டத்திற்கு நிகராக, சமச்சீர் கல்வி திட்டம் இல்லை என, குறைபடும் இத்தகைய பள்ளிகள், சமச்சீர் பாடத் திட்டத்தை புறக்கணித்துள்ளன. இது, அரசின் விதிமுறைகளுக்கு எதிரானது. ஆனால், உள்ளூரில் உள்ள கல்வி அதிகாரிகளை, சரிக்கட்டி தொடர்ந்து சி.பி.எஸ்.இ. பாடத் திட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில், சென்னை, முகப்பேரில் உள்ள பிரபலமான மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி திட்டத்திற்குப் பதிலாக, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டம் செயல்படுத்தப்படுவது, அரசின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து, ஐந்து பேர் கொண்ட சிறப்பு அதிகாரிகள் குழுவை அமைத்து, திடீரென பள்ளியில் ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க, மெட்ரிக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது.
அதன்படி, பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்ட, குழுவைச் சேர்ந்த, திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், பள்ளியில் விதிமீறல் நடந்துள்ளதாக, கடந்த 1ம் தேதி, இயக்குனரகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தார்.
அறிக்கையில் அவர் கூறிஇருப்பதாவது: ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி திட்டம் நடைமுறைப் படுத்தவில்லை. ஆறு, ஏழாம் வகுப்புகளுக்கு, சமச்சீர் கல்வி திட்ட பாடப் புத்தகங்களுடன், கூடுதலாக, சி.பி.எஸ்.இ., கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
8ம் வகுப்பு மாணவர்களுக்கும், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்கள் நடத்தப்படுகின்றன. தமிழக அரசின் அங்கீகாரத்தை பெற்று, பொதுக்கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி திட்டத்தை பின்பற்றாமல், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தை நடத்தி வருவது, மெட்ரிக் பள்ளிகளின் விதிமுறைகளுக்கு முரணானது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், விதிமுறையை கடைபிடிக்காத பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் எனவும், இயக்குனருக்கு அவர் பரிந்துரைத்தார். இதன் அடிப்படையில், கடந்த 14ம் தேதியிட்ட இயக்குனரின், "நோட்டீஸ்&' பள்ளிக்கு அனுப்பப்பட்டது.
நேற்று மாலை, பள்ளி நிர்வாகம் இதற்கு பதிலளித்து உள்ளதாகவும்; அதில், செய்த தவறுக்கு உரிய பதிலை அளிக்காமல், பள்ளியின் சாதனைகளை அளந்துள்ளதாகவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விவகாரத்தில், அரசின் ஆலோசனையைப் பெற்று, விரைவில் முடிவு எடுக்கப்படும் எனவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல், மாநிலம் முழுவதும் உள்ள பிரபலமான தனியார் பள்ளிகளை பட்டியல் எடுத்து, சிறப்பு குழுக்கள் அமைத்து ஆய்வு செய்து, முறைகேடு செய்துள்ள பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

SALARY DEDUCTED FOR 6 LATE COMING TEACHERS


2012
28
Aug
பள்ளிக்கு தாமதமாக வந்த 6 ஆசிரியர்களுக்கு சம்பளம் ‘கட்’
திருவண்ணாமலை :திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் நேற்று மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் திடீர் ஆய்வு நடத்தினார். காலை 9.30 மணிக்கு எடப்பிறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சென்றார். இறைவணக்கம் கூட்டம் நடத்தப்படவில்லை. ஆசிரியர்களும் மிகவும் தாமதமாக வந்தனர். எனவே, இறை வணக்க கூட்டம் நடத்தாத பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகன், தாமதமாக வந்த இடைநிலை ஆசிரியர் குணசேகரன், பட்டதாரி ஆசிரியர் திருமுருகன் ஆகியோரின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, கணேசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு நடத்தினார். அங்கு கையெழுத்திடாமல் வருகைப்பதிவேடு வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பட்டதாரி ஆசிரியர் சுதா, இடைநிலை ஆசிரியர்கள் செல்வராணி, வேலவன் ஆகியோரின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்யவும் உத்தரவிட்டார்.

TWO AEEOS SUSPENDED FROM DUTY IN VELLORE DISTRICT

வேலூரில் இரண்டு உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் சஸ்பெண்ட்
வேலூர்: வேலூரில் இரண்டு உதவி தொடக்க கல்வி அலுவலர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டம் கணியம்பாடி உதவி தொடக்க கல்வி அலுவலராக இருப்பவர் வெங்கடேசன். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டது. இதனையடுத்து அவரது சொந்த ஊரான ஓசூரில் உள்ள அவரது வீட்டிலும், மாமனார் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். இதில் 50 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இவரை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜமாணிக்கம் இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதேபோல் ராணிப்பேட்டை உதவி தொடக்க கல்வி அலுவராக இருப்பவர் பூங்கோதை. இவர் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையை அதிகம் காட்டுவதற்கு மோசடி செய்வதற்கு உதவி செய்ததாக புகார் கூறப்பட்டது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று தனியார் பள்ளிகளில் விசாரணை நடத்தினர். அவரையும் மாவட்ட தொடக்க கல்வி அலுவர் இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். 

EVALUATION BY SSA ON AUGUST 30&31- FIVE SCHOOLS FOR EACH BLOCK


STUDENT SUICIDE: HEADMASTER & TEACHER ARE ARRESTED


மாணவர் தற்கொலை செய்த விவகாரம்


தலைமை ஆசிரியை, ஆசிரியை கைது

மாற்றம் செய்த நேரம்:8/28/2012 2:21:35 AM

சேரன்மகாதேவி : நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் நயினார்குளத்தை சேர்ந்த தொழிலாளி வெள்ளப்பாண்டி மகன் சுஜீத்குமார்(14). இவர் வீரவநல்லூர் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளியில் பூந்தொட்டி உடைந்தது தொடர்பாக மாணவர் சுஜீத்குமாருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பூந்தொட்டியை தான் உடைக்கவில்லை என்று கூறி அபராதம் செலுத்த மறுத்த மாணவரை ஆசிரியை அடித்துள்ளார். இதனால் மனமுடைந்த சுஜீத்குமார் நேற்று காலை 11 மணிக்கு பள்ளியில் இருந்து வீடு திரும்பினார். அங்கு சுஜீத்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

 இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அவரது சடலத்துடன் பாபநாசம் , நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சேரன்மகாதேவி சப்,கலெக்டர் ரோகினி ராம்தாஸ் மற்றும் போலீசார் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். மாணவரின் உடல் பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாணவரின் சித்தப்பா அம்பேத்கர் கொடுத்த புகாரின்பேரில் பள்ளி நிர்வாகிகள் மங்கையர்க்கரசி, ஷியாம், தலைமை ஆசிரியை ஜாய்ஸ்ராணி, வகுப்பு ஆசிரியை விமலாபாய், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் முகமது இலியாஸ் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியது மற்றும் தீண்டாமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஜாய்ஸ் ராணி, விமலாபாய்  இருவரையும் கைது செய்து சேரன்மகாதேவி கோர்ட்டில் மாஜிஸ்திரேட் சுதாகர் முன் ஆஜர்படுத்தி பாளை. சிறையில் அடைத்தனர். மற்ற மூவரையும் தேடி வருகின்றனர். 

RAPE CASE FILED AGAINST HEADMASTER

திண்டுக்கல் : ஆசிரியை கொடுத்த கற்பழிப்புப் புகாரின் பேரில், தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.திண்டுக்கல் அசோக் நகரை சேர்ந்தவர் கோகிலப்பிரியா,33. பூலத்தூர் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி ஆசிரியை. இவருக்கும், இவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையை தமிழக ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த நிர்வாகியும், பழம்புத்தூர் ஊராட்சி துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியருமான லாரன்சிடம், கோகிலப்பிரியா தெரிவித்துள்ளார். கடந்த, மே 4ம் தேதி, பிரச்னையைத் தீர்ப்பதாகக் கூறிய அவர், தன்னை கற்பழித்ததாக, திண்டுக்கல் ஜே.எம்.,2 கோர்ட்டில், கோகிலப்பிரியா மனுத்தாக்கல் செய்தார். புகார் மீது, அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்த மாஜிஸ்திரேட் லதா உத்தரவிட்டார். லாரன்ஸ் மீது இன்ஸ்பெக்டர் அனார்கலி வழக்குப் பதிவு செய்துள்ளார்.


2012
27
Aug
ஆசிரியை பலாத்காரம் : ஆசிரியர் மீது வழக்கு


திண்டுக்கல்: திண்டுக்கல் அசோக் நகரைச் சேர்ந்தவர் திருமலை கண்ணன். இவரது மனைவி கோகில பிரியா(33). தாண்டிக்குடி அருகேயுள்ள பூலத்தூர் அரசுப் பள்ளியில் ஆசிரியை. விவாகரத்து கேட்டு கணவன், மனைவி இருவரும் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். குடும்பப் பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரத் தலைவரான திண்டுக்கல் அருகேயுள்ள முள்ளிப்பாடியைச் சேர்ந்த ஆசிரியர் லாரன்ஸ்(34) என்பவரை சந்தித்து உதவி கேட்க கோகிலவாணி சென்றாராம். கடந்த மே மாதம் 4ம் தேதி சென்றபோது ஆசிரியை கோகிலவாணியை லாரன்ஸ் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று கோகிலவாணியை, லாரன்ஸ் மிரட்டினாராம். லாரன்ஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோகிலப்பிரியா திண்டுக்கல் ஜே.எம்.2 கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் லதா வழக்குப் பதிவு செய்ய திண்டுக்கல் மகளிர் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் இன்று ஆசிரியர் லாரன்ஸ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sunday, August 26, 2012

SMC HEAD CAN BE FROM MANAGEMENT FOR AIDED SCHOOLS

RTE REFERENCE BOOKS TO BE ISSUED TO ALL SCHOOLS AFTER SEPTEMBER 3RD TRAINING


ONLY 2448 PASSED IN TET:RE EXAM ON OCTOBER 3RD


2,448 பேர் மட்டுமே தேர்ச்சி! அக்டோபர் 3-ல் ஆசிரியர் தகுதி மறுதேர்வு

First Published : 26 Aug 2012 12:22:55 AM IST

சென்னை, ஆக. 25: ஆசிரியர் தகுதித் தேர்வில் வெறும் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதால், சுமார் 6.74 லட்சம் பேருக்கு அக்டோபர் 3-ம் தேதி (புதன்கிழமை)
 மறுதேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி சென்னையில் சனிக்கிழமை அறிவித்தார்.
 பெரும்பாலான தேர்வர்களின் வேண்டுகோளை ஏற்று ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வு நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.
 ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (ட்ற்ற்ல்://ற்ழ்க்ஷ.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/) வெள்ளிக்கிழமை இரவு வெளியிடப்பட்டன. இரண்டு தாள்களையும் சேர்த்து தேர்வு எழுதிய 6.76 லட்சம் பேரில் 2,448 பேர் மட்டுமே (0.40%) தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இவர்களில் 14 மாற்றுத் திறனாளிகளும், 2 பார்வைத் திறன் குறைந்தவர்களும் அடங்குவர்.
 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் 5,451 இடைநிலை ஆசிரியர்களும், தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 18,922 பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
 இப்போது மிகக் குறைந்த எண்ணிக்கையிலே ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதால், சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு இவர்கள் அனைவரும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. மீதமுள்ள 22 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கவும், தேர்வில் வெற்றிபெறாதவர்களுக்கு வாய்ப்பளிக்கவும் மறுதேர்வு நடத்தப்படுகிறது.
 ஒவ்வொரு தாளிலும் எவ்வளவு பேர் தேர்ச்சி? தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கடந்த ஜூலை 12-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. 6.76 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
 முதல் தாளை எழுதிய 2 லட்சத்து 83 ஆயிரத்து 806 பேரில் 1,735 பேர் மட்டுமே தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 0.61%. இரண்டாம் தாளை எழுதிய 3 லட்சத்து 83 ஆயிரத்து 616 பேரில் 713 மட்டுமே தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 0.19%. முதல் தாள், இரண்டாம் தாள் ஆகிய இரண்டு தாள்களையும் எழுதிய 57 ஆயிரம் பேரில் 83 பேர் மட்டுமே இரண்டு தாள்களிலும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சியடைந்தவர்களில் 1680 பேர் பெண்கள், 768 பேர் ஆண்கள்.
 முதலிடங்களைப் பிடித்த பெண்கள்: ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் பொள்ளாச்சியைச் சேர்ந்த எம்.திவ்யா 150-க்கு 122 மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் சமூக அறிவியல் பாடத்தைத் தேர்ந்தெடுத்தவர்களில் உத்தமபாளையத்தைச் சேர்ந்த ஆர்.அருள்வாணி 150-க்கு 125 மதிப்பெண்ணும், கணிதப் பாடத்தில் தேர்வு எழுதியவர்களில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பி.சித்ரா என்பவர் 150-க்கு 142 மதிப்பெண்ணும் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
 மறுதேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை: ""வரும் அக்டோபர் 3-ம் தேதி நடைபெறும் மறுதேர்வுக்கு மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்காக மட்டுமே மறுதேர்வு நடத்தப்படுகிறது.
 எனவே, ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்தத் தேர்வில் பங்கேற்க முடியும்'' என்று சுர்ஜித் கே.சௌத்ரி தெரிவித்தார். இது தொடர்பாக, அவர் மேலும் கூறியது: ஆசிரியர் தகுதித் தேர்வில் குறைந்த எண்ணிக்கையிலான தேர்வர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றது அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
 பள்ளிகளில் ஆசிரியர் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பதால், இந்தத் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்ணை எடுக்காதவர்களுக்கு (150-க்கு 90 மதிப்பெண்) மறுதேர்வு நடத்த அரசு உத்தரவிட்டது. அதேபோல், தேர்வு நேரத்தை ஒன்றரை மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளதால், தேர்வு நேரமும் அதிகரிக்கப்படுகிறது.
 இதைத் தொடர்ந்து, வரும் அக்டோபர் 3-ம் தேதி (புதன்கிழமை) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்காக மறு தேர்வு நடத்தப்படும். அன்றைய தினம் ஆசிரியர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்கும் வகையில் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படும்.
 இந்தத் தேர்வு முடிவுகள் அக்டோபர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும். தேர்வுக்கான அழைப்புக் கடிதம் விரைவில் தேர்வர்களுக்கு அனுப்பப்படும்.
 13 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு: இப்போதுவரை 13 ஆயிரம் ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான பணிகள் முடிவடைந்துள்ளன. வரும் அக்டோபர் மாதத்துக்குள் 26 ஆயிரம் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகளும் முடிவடையும் என்றார் அவர்.

முதல் தாள் தேர்வு எழுதியோர் :2,83,806 தேர்ச்சி: 1,735
 இரண்டாம் தாள் தேர்வு எழுதியோர் :3,83,616 தேர்ச்சி: 713
 இரண்டு தாள்களையும் எழுதியோர் : 57,000 தேர்ச்சி: 83
 தேர்வு எழுதியவர்களின் மொத்த எண்ணிக்கை 6,76,763
 தேர்ச்சி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 2,448
 விடைத்தாளில் தவறுகளால் மதிப்பெண்ணை இழந்தவர்கள் 2,182

ஆண்டுக்கு இருமுறை தேர்வு
 சிரியர் தகுதித் தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. ஜூன் மாதம் ஒரு தேர்வும், டிசம்பரில் மற்றொரு தேர்வும் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
 இப்போதுள்ள அரசாணையின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் உள்ளதுபோல் விரைவில் இந்த அரசாணை ஆண்டுக்கு இருமுறை நடத்தும் வகையில் திருத்தப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதேபோல், ஒரு குறிப்பிட்ட தேதியில் இந்தத் தேர்வை நடத்தும் யோசனையும் தேர்வு வாரியத்தின் பரிசீலனையில் உள்ளது.

2,182 பேருக்கு மதிப்பெண் குறைப்பு
 சென்னை, ஆக. 25: ஆசிரியர் தகுதித் தேர்வில் சுமார் 1.50 லட்சம் பேர் தங்களது விண்ணப்பங்களில் பல்வேறு தவறுகளைச் செய்திருந்தனர். அவர்களுக்கு தவறுகளைத் திருத்த பல்வேறு வாய்ப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கியது.
 இந்த நிலையில், தேர்வு நாளன்றும் தவறுகளைச் செய்தவர்களுக்கு மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது.
 இதனடிப்படையில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு இரண்டு தாள்களிலும் மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. விடைத்தாளில் வினாத்தாள் புத்தக எண்ணைக் குறிப்பிடாதவர்களுக்கு 5 மதிப்பெண்ணும், தேர்வு எழுதும் பாடத்தைத் தவறாகக் குறிப்பிட்டுள்ளவர்களுக்கு 3 மதிப்பெண்ணும், சரியான மொழிப்பாடத்தைக் குறிப்பிடாதவர்களுக்கு 2 மதிப்பெண் வரையிலும் குறைக்கப்பட்டுள்ளது. இந்தத் தவறுகளால் முதல் தாளில் 685 பேருக்கும், இரண்டாம் தாளில் 1,497 பேருக்கும் மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. விடைத்தாளை எடுத்துச் சென்ற தேர்வர்கள் தகுதியிழந்தவர்களாகக் கருதப்பட்டனர்.
 அதேபோல், வேறு தேர்வு எண்ணை எழுதியவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படவில்லை. சில தேர்வர்களின் கையொப்பங்கள் விண்ணப்பம், விடைத்தாளில் வெவ்வேறாக இருந்தன. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதிலிருந்து 5 ஆண்டுகளுக்கு அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

6.76 லட்சம் பேரில் 2448 பேர் மட்டுமே பாஸ்

ஆசிரியர்களுக்கு மீண்டும் தேர்வு


சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் எழுதிய தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெறாத 6.74 லட்சம் பேருக்கு அக்டோபர் 3ம் தேதி மீண்டும்  தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று, 2009ம் ஆண்டு மத்திய அரசு சட்டம் இயற்றியது. இதன் அடிப்படையில், தமிழகத்தில் கடந்த ஜூலை 12ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.  மாநிலம் முழுவதும் 1,027 தேர்வு மையங்களில் 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் தேர்வு எழுதினர். தேர்வில் பங்கேற்றவர்கள் 150 மதிப்பெண்களில் 60 சதவீதம் அதாவது 90 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே ‘பாஸ்’ என கூறப்பட்டிருந்தது

.தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளை எதிர்த்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆகஸ்ட் 10ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரியை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது.  ஆனால், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதற்கு கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. இதனால், தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே, திருவண்ணாமலை மாவட்டம் மேல்மலையூரை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை ஐகோர்ட் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இதையறிந்த ஆசிரியர் தேர்வு வாரியம், அவசர அவசரமாக நேற்று அதிகாலை 2 மணியளவில் தகுதி தேர்வு முடிவுகளை இணையதளத்தில்   (ஷ்ஷ்ஷ்.tக்ஷீதீ.tஸீ.ஸீவீநீ.வீஸீ)   அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. 

மொத்தம் தேர்வு எழுதிய 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேரில் வெறும் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 6 லட்சத்து 74 ஆயிரத்து 315 பேர் ‘பெயில்‘ ஆகி உள்ளனர். இது தேர்வு எழுதிய ஆசிரியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், தேர்ச்சி பெறாத 6 லட்சத்து 74 ஆயிரத்து 315 ஆசிரியர்களுக்கும் அக்டோபர் 3ம் தேதி கட்டணம் எதுவும் இல்லாமல் மீண்டும் தேர்வு எழுத ஒரு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி அறிவித்தார். ஆசிரியர் தகுதி தேர்வின்அடிப்படையில் 18,000 பட்டதாரி ஆசிரியர்களும், 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்பட முடிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.2,448 பேருக்கு உடனே வேலை: ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி, சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:தேர்வில் 60 சதவீதம் அதாவது 90 மதிப்பெண் மற்றும் அதற்கு மேல் பெற்றவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.விடைத்தாளில் வினாத்தாளின் வரிசை எண்ணை குறிப்பிடாதவர்களுக்கு 5 மார்க், விடைத்தாளில் பாடப்பிரிவை குறிப்பிடாதவர்களுக்கு 3 மார்க், விருப்ப மொழியை எழுதாதவர்களுக்கு 2 மார்க் குறைக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதி விட்டு ஒரிஜினல் விடைத்தாளை (ஓஎம்ஆர் சீட்) கொடுக்காதவர்களின் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

விடைத்தாளில் தேர்வு எண்ணை எழுதாமல் போலி எண் எழுதியவர்கள் பேப்பரும் திருத்தப்படவில்லை. பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 2 பேரின் விடைத்தாளில் உள்ள கையெழுத்தும், விண்ணப்பத்தில் உள்ள கையெழுத்தும் மாறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் 5 ஆண்டு பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இடைநிலை ஆசிரியருக்காக நடத்தப்பட்ட தகுதி தேர்வை (தாள்,1) மொத்தம் 2 லட்சத்து 88 ஆயிரத்து 588 பேர் எழுதினர். இதில், 1,735 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 0.61 சதவீத தேர்ச்சி ஆகும். பட்டதாரி ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட தேர்வை (தாள்,2) மொத்தம் 3 லட்சத்து 88 ஆயிரத்து 175 பேர் எழுதினர். இதில் 713 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 0.19 தேர்ச்சி ஆகும். இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் என இரண்டு தேர்வையும் (தாள்,1, தாள்,2) எழுதிய 83 பேர் தேர்வாகி உள்ளனர்.

 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் இரண்டையும் சேர்த்து மொத்தம் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 1,680 பேர் பெண்கள், 768 பேர் ஆண்கள். ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேரில் 6 லட்சத்து 74 ஆயிரத்து 315 பேர் ‘பெயில்‘ ஆகியுள்ளனர். 17 உடல் ஊனமுற்றோர்களும், 2 கண் பார்வை இல்லாதவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாக ஆசிரியர் வேலை வழங்கப்படும். தேர்ச்சி பெறாத 6 லட்சத்து 74 ஆயிரத்து 315 பேருக்கும் அக்டோபர் 3ம் தேதி தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். இந்த தேர்வுக்கு அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம். இவர்களுக்கு விரைவில் ஹால் டிக்கெட் அனுப்பி வைக்கப்படும். அக்டோபர் மாதம் இறுதிக்குள் முடிவுகள் வெளியிடப்படும். மறுதேர்வுக்கு கூடுதலாக ஒன்றரை மணி நேரம் வழங்கப்படும். இவ்வாறு சுர்ஜித் கே.சவுத்ரி கூறினார்.



35 சதவீதம் பெற்றால் பாஸ்
ஆசிரியர்கள் கேட்கின்றனர்

ஆசிரியர் தகுதி தேர்வில் அதிகம் பேர் 60 மதிப்பெண்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ‘பள்ளி மாணவர்களுக்கு உள்ளது போன்று எங்களுக்கும் 35 சதவீதம் எடுத்தால் ‘பாஸ்‘ என்று அறிவிக்க வேண்டும்’ என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.

முதல் 3 இடங்களை பெண்களே பிடித்தனர்

இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வில் பொள்ளாச்சியை சேர்ந்த திவ்யா 150க்கு 122 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், திண்டுக்கல் சவீதா, திருச்சி ஷோபனா ஆகியோர் தலா 116 மதிப்பெண் பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் உத்தமபாளையத்தை சேர்ந்த அருள்வாணி 125 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், ஏ.பிருந்தா, சித்ரா இருவரும் 124 மதிப்பெண் பெற்று 2வது, 3வது இடத்தை பெற்றுள்ளனர். பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில்கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் நாகப்பட்டினத்தை சேர்ந்த சித்ரா 150க்கு 142 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த ஷர்மிளா 131 மதிப்பெண் பெற்று 2வது இடத்தையும், உத்தமபாளையத்தை சேர்ந்த ஆர்.பிருந்தாதேவி 117 மதிப்பெண் பெற்று 3ம் இடத்தையும் பிடித்துள்ளனர். இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் முதல் 3 இடங்களையும் 9 பெண்களே பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


அக்டோபர் 3ம் தேதி
பள்ளிக்கு விடுமுறை

ஆசிரியர் தகுதி தேர்வில் பெயிலான 6 லட்சத்து 74 ஆயிரத்து 315 பேருக்கும் அக்டோபர் 3ம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அக்டோபர் 3ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2ம் தேதி (செவ்வாய்) காந்தி ஜெயந்தி அன்றும் அரசு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

SHOCKING RESULT IN TET EXAM


சென்னை:ஜூலை 12ம் தேதி நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) முடிவு, நேற்று வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய, 6.72 லட்சம் பேரில், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 25 ஆயிரம் பேரை தேர்வு செய்ய நடத்திய தேர்வில், வெறும், 0.36 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பதால், அக்., 3ம் தேதி, மீண்டும் ஒரு தேர்வை நடத்த, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.ஏற்கனவே நடத்திய தேர்வுக்கு, போதிய நேரம் வழங்கவில்லை என, எழுந்த புகாரைத் தொடர்ந்து, அக்டோபரில் நடக்கும் தேர்வுக்கு, 3 மணி நேரம் வழங்கப்படும் எனவும் டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

ஜூலை 12ம் தேதி, டி.ஆர்.பி., நடத்திய முதல் தகுதித் தேர்வில், 6 லட்சத்து, 72 ஆயிரத்து, 204 பேர் பங்கேற்றனர். முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் ஆகிய இரண்டுமே கடினமாக இருந்ததாகவும்; போதிய அளவிற்கு நேரம் வழங்கவில்லை எனவும், தேர்வர்கள் குற்றம் சாட்டினர்.அதற்கு தகுந்தாற்போல், நேற்று வெளியான தேர்வு முடிவும் அமைந்தது. தேர்வு எழுதிய 6.72 லட்சம் பேரில், வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 0.36.

தலைவர் பேட்டி:

தேர்வு முடிவுகள், டி.ஆர்.பி., இணையதளத்தில், நேற்று அதிகாலை வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, தேர்வு முடிவு குறித்த புள்ளி விவரங்களை, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி வெளியிட்டார்.அப்போது, நிருபர்களிடம் அவர்
 
கூறியதாவது:முதல் தாள் தேர்வில், 1,735 பேரும், இரண்டாம் தாள் தேர்வில், 713 பேரும் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். விண்ணப்பத்திலும், விடைத்தாளிலும் கேட்கப்பட்ட அடிப்படை விவரங்களை சரிவரச் செய்யாத தேர்வர்களுக்கு, அவர்கள் செய்த தவறுகளுக்கு ஏற்ப, மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது.கையெழுத்தில் வித்தியாசம் இருந்ததால், இரு தேர்வர்களுக்கு, டி.ஆர்.பி., தேர்வில் பங்கேற்க, ஐந்தாண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல் தாள் தேர்வில், 685 பேருக்கும்; இரண்டாம் தாள் தேர்வில், 1,547 பேருக்கும், அவர்கள் செய்த தவறுகளுக்கு ஏற்ப, உரிய தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.இரு தேர்வர், தங்கள் அசல் விடைத்தாள் நகலை ஒப்படைக்காததால், அவர்களுடைய தேர்வு ரத்து செய்யப்பட்டது.

தரமானதேர்வு:


தேர்வில், குறைந்த தேர்ச்சி சதவீதம் ஏற்பட்டிருப்பது குறித்து, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மாணவ, மாணவியரின் எதிர்காலத்தையும், தரமான கல்வித் தரத்தை ஏற்படுத்துவதையும் கருத்தில் கொண்டும், 60 சதவீத மதிப்பெண் பெறுபவர் மட்டுமே தேர்ச்சி என்ற நிலையை தொடர்ந்து கடைபிடிக்குமாறு, அரசு அறிவுறுத்தியது.தரமான ஆசிரியரை பணியில் அமர்த்தினால் தான், தரமான கல்வியை வழங்க முடியும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அக்., 3ல் மீண்டும்...:

அத்துடன், 60 சதவீத மதிப்பெண் பெறாத தேர்வருக்காக, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில், மற்றொரு டி.இ.டி., தேர்வை உடனடியாக நடத்தவும், அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அக்., 3ம் தேதி, அடுத்த டி.இ.டி., தேர்வு நடக்கும்.இதன் முடிவு, அக்., இறுதிக்குள் வெளியிடப்படும். ஏற்கனவே நடந்த தேர்வில் பங்கேற்று, தேர்ச்சி பெறாத தேர்வர் மட்டுமே, இந்தத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.இந்தத் தேர்வுக்காக, தனியாக விண்ணப்பிக்கவோ, தேர்வுக் கட்டணம் செலுத்தவோ தேவையில்லை. புதிய, "ஹால் டிக்கெட்' அனுப்பப்படும்; அதில் குறிப்பிடும் மையங்களுக்குச் சென்று தேர்வு எழுதினால் போதும்.ஏற்கனவே நடத்திய தேர்வுக்கு, போதிய நேர அவகாசம் வழங்கவில்லை என, கடும் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அக்., 3ல் நடக்கும்,முதல் மற்றும் இரண்டாம் தாள் ஆகிய இரண்டு தேர்வுக்கும், தலா 3 மணி நேரம் வழங்கப்படும்.

மாற்றம் இல்லை:

கேள்வித்தாள் கடினமாக இருந்தது என, அனைவரும் கூறினர். ஆனால், இந்தத் தேர்விலும், இத்தனை ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக, பெண்கள் அதிகளவு மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்களால் மட்டும் எப்படி முடிந்தது?கேள்வித்தாள் அமைப்பை புரிந்து, தேர்வுக்கு முழுவதுமாக தயாரானால், கண்டிப்பாக தேர்ச்சி பெற முடியும். அடுத்து நடக்கும் டி.இ.டி., தேர்வு கேள்வித்தாளின் தரத்தில், எவ்வித மாற்றமும் இருக்காது. ஏற்கனவே இருந்த அதே தரம், தொடர்ந்து கடைபிடிக்கப்படும். கேள்வித்தாள் தரத்தில், சமரசம் கிடையாது.இதுவரை, 13 ஆயிரம் ஆசிரியரை தேர்வு செய்யும் பணி, இறுதி செய்யப்பட்டுள்ளது. அக்., இறுதிக்குள், மேலும், 26 ஆயிரம் ஆசிரியரை தேர்வு செய்யும் பணி முடிவடையும்.இவ்வாறு சுர்ஜித் சவுத்ரி கூறினார்

FEMALE CANDIDATES DOMINATE IN TET RESULT

ஆசிரியர் தகுதி தேர்வு:தேர்ச்சி பெற்றவர்களில் 68 சதவீதம் பேர் பெண்கள்
டி.இ.டி., தேர்வு மிகக் கடினமாக இருந்ததாக, தேர்வர் பலர் புலம்பிய நிலையிலும், தேர்ச்சி பெற்ற 2,448 பேரில், 1,680 பெண்கள் தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளனர். இதில், முதல் மற்றும் இரண்டாம் தேர்வில், முதல் மூன்று இடங்களை, ஒன்பது பேர் பிடித்தனர். இவர்களில், எட்டு பேர் பெண்கள்.

டி.இ.டி., தேர்வில், கேள்வித்தாள் வரிசை எண்ணை, விடைத்தாளில் குறிப்பிடாதவருக்கு, ஐந்து மதிப்பெண்; முக்கிய பாடத்தை குறிப்பிடாதவருக்கு, மூன்று; மொழிப் பாடத்தை குறிப்பிடாதவருக்கு இரண்டு மதிப்பெண் என, தவறு செய்தவர்களை ஆறு வகையாகப் பிரித்து, அவர்களுக்கு, "மைனஸ்' மதிப்பெண்களை, டி.ஆர்.பி., வழங்கியுள்ளது.இதில் அதிகபட்சமாக, முதல் தாள் தேர்வில், 621 பேர்; இரண்டாம் தாளில், 731 பேர், கேள்வித்தாள் வரிசை எண்ணை எழுதவில்லை. இவர்கள் அனைவருக்கும், மதிப்பெண் குறைக்கப்பட்டது. கூடுதல் தவறு செய்தவருக்கு, அதற்கேற்ப மதிப்பெண் குறைக்கப்பட்டது என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன."மைனஸ்' மதிப்பெண் குறித்து கேட்டபோது, ""தேர்வர் செய்யும் தவறுகளுக்கு ஏற்ப, மதிப்பெண்களை குறைத்து வழங்க, டி.ஆர்.பி.,க்கு அதிகாரம் உள்ளது. அதன்படி தான், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்படிச் செய்தால் தான், வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடப்பதை தடுக்க முடியும்,'' என்றனர்.சாதாரண தகவல்களைக் கூட சரிவர பூர்த்தி செய்யாததால், பலர் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்ச்சி பெற்றவரில், எத்தனை பேர் அரசுப் பணிகளில் உள்ளவர்கள், பணியில் இல்லாதவர்கள் எத்தனை பேர் என்ற விவரம், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்னரே தெரிய வரும் எனவும், டி.ஆர்.பி., அதிகாரிகள் தெரிவித்தனர்.

83 பேர் தேர்ச்சி!

டி.இ.டி., முதல் மற்றும் இரண்டாம் தாள் ஆகிய இரண்டையும் எழுதியவரில், 83 பேர், இரு தேர்விலும் தேர்ச்சி பெற்றனர். சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், இடைநிலை ஆசிரியர் அல்லது பட்டதாரி ஆசிரியர் பணி ஆகிய இரண்டில், இவர்கள் எதை விரும்புகின்றனரோ, அதை தேர்வு செய்து கொள்ளலாம்.இடைநிலை ஆசிரியரை விட, பட்டதாரி ஆசிரியருக்கு சம்பளமும்; பதவி உயர்வுக்கான வழி வகைகளும் அதிகம் உள்ளன. எனவே, பட்டதாரி ஆசிரியர் பணியையே பெரும்பாலானோர் தேர்வு செய்வர்.

விடுமுறை:

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத, 6.69 லட்சம் பேருக்கு, அக்., 3ம் தேதி, மறு தேர்வு நடத்த முடிவு செய்துள்ளதால், அனைத்துப் பள்ளிகளுக்கும் அன்று விடுமுறை அளிக்க, அரசு திட்டமிட்டுள்ளதாக, டி.ஆர்.பி., தெரிவித்தது. இது தொடர்பான அரசாணை, தேர்வுக்கு முன்னதாக வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

உடுமலையை சேர்ந்த திவ்யா முதலிடம்:

உடுமலை:ஆசிரியர் தகுதித் தேர்வில் 122 மதிப்பெண் பெற்று, உடுமலையைச் சேர்ந்த திவ்யா, மாநில அளவில் முதலிடம் பிடித்தார். "பொழுது போக்கு அம்சங்களை தவிர்த்து, தீவிர முயற்சி மேற்கொண்டதே வெற்றிக்கு காரணம்' என, திவ்யா தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், கடந்த மாதம் 12ம் தேதி, ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தியது. தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், முதல் தாளில் 122 மதிப்பெண் பெற்று உடுமலை, கரட்டூரைச் சேர்ந்த திவ்யா, மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவரது தந்தை மூர்த்தி, உடுமலை தினசரி சந்தை காய்கறி மண்டியில், கணக்காளராக உள்ளார். தாய் ஜெயலட்சுமி, சத்துணவு அமைப்பாளர். தங்கை சரண்யா பி.இ., படித்துள்ளார்.

புங்கமுத்தூர் காந்தி கலா நிலையம் பள்ளியில் பிளஸ் 2 முடித்து, கோவையில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்லூரியில், டி.எட்., படிப்பை கடந்த 2005ல் முடித்துள்ளார். பின்னர், தொலைதூர கல்வியில் எம்.எஸ்சி., கணிதம் மற்றும் திருப்பூர் தனியார் கல்லூரியில் பி.எட்., முடித்துள்ளார். உடுமலை அருகே உள்ள தனியார் பள்ளியில், ஆசிரியராக திவ்யா பணியாற்றி வருகிறார்.

திவ்யா கூறியதாவது:

என் பெற்றோர் கனவை நனவாக்க வேண்டும் என்பதற்காக, ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியானதில் இருந்து, தீவிரமாக தேர்வுக்கு தயாரானேன். மே மாத விடுமுறையில் சுற்றுலா, "டிவி' என பொழுதுபோக்கு அம்சங்களை தவிர்த்து, தேர்வில் மட்டுமே கவனம் செலுத்தினேன். பொதுவாக, "டிவி' பார்ப்பது பிடிக்காது; பயிற்சி வகுப்புகள் எதற்கும் செல்லவில்லை.போட்டித் தேர்வில் இரண்டு தாள்களிலும் தேர்ச்சி பெறுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. முதல் தாளில் மாநில அளவில் முதலிடம் கிடைக்கும் என, எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கம்பம் பெண் மாநில முதல் இடம்:


சமூக அறிவியலில் 150க்கு 125 மதிப்பெண்கள் பெற்று, தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த அருள்வாணி, மாநில முதல் இடம் பிடித்துள்ளார்.அருள்வாணி எம்.ஏ., பொருளாதாரம் படித்துள்ளார். அவர் கூறியதாவது: என் கணவர் ஹரிபாஸ்கர், இடைநிலை ஆசிரியராக பணியாற்றுகிறார். ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள தமிழக அரசின் பாடப் புத்தகங்களை, படித்து தேர்விற்கு தயாரானேன்.தேர்வில் பாடம் சம்பந்தமில்லாத சில கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன.அதை தவிர்த்தால், என்னைப் போல பலரும் அதிக மதிப்பெண்களை பெறுவர். மாநில அளவில் முதல் இடம் எனக்கு எதிர்பாராத ஒன்று. மிகவும் சந்தோஷமாக உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியமானது. அப்போது தான், சிறந்த, தகுதியான ஆசிரியர்களை உருவாக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

சித்ரா:


142 / 150 இரண்டாம் தாள் கணிதம் / அறிவியல் முதலிடம் : 

ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியானதில் இருந்து, தீவிரமாக தேர்வுக்கு தயாரானேன். மாநில அளவில் முதல் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. தேர்வு முடிவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது

சிறு தவறு... பேரிழப்பு!டி.

இ.டி., தேர்வில், கேள்வித்தாள் வரிசை எண்ணை, விடைத்தாளில் குறிப்பிடாதவருக்கு, ஐந்து மதிப்பெண்; முக்கிய பாடத்தை குறிப்பிடாதவருக்கு, மூன்று; மொழிப் பாடத்தை குறிப்பிடாதவருக்கு இரண்டு மதிப்பெண் என, தவறு செய்தவர்களை ஆறு வகையாகப் பிரித்து, அவர்களுக்கு, "மைனஸ்' மதிப்பெண்களை, டி.ஆர்.பி., வழங்கியுள்ளது.இதில் அதிகபட்சமாக, முதல் தாள் தேர்வில், 621 பேர்; இரண்டாம் தாளில், 731 பேர், கேள்வித்தாள் வரிசை எண்ணை எழுதவில்லை. இவர்கள் அனைவருக்கும், மதிப்பெண் குறைக்கப்பட்டது. கூடுதல் தவறு செய்தவருக்கு, அதற்கேற்ப மதிப்பெண் குறைக்கப்பட்டது என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன."மைனஸ்' மதிப்பெண் குறித்து கேட்டபோது, ""தேர்வர் செய்யும் தவறுகளுக்கு ஏற்ப, மதிப்பெண்களை குறைத்து வழங்க, டி.ஆர்.பி.,க்கு அதிகாரம் உள்ளது. அதன்படி தான், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்படிச் செய்தால் தான், வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடப்பதை தடுக்க முடியும்,'' என்றனர்.

சாதாரண தகவல்களைக் கூட சரிவர பூர்த்தி செய்யாததால், பலர் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்ச்சி பெற்றவரில், எத்தனை பேர் அரசுப் பணிகளில் உள்ளவர்கள், பணியில் இல்லாதவர்கள் எத்தனை பேர் என்ற விவரம், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்னரே தெரிய வரும் எனவும், டி.ஆர்.பி., அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரு தேர்விலும் 83 பேர் தேர்ச்சி!

டி.இ.டி., முதல் மற்றும் இரண்டாம் தாள் ஆகிய இரண்டையும் எழுதியவரில், 83 பேர், இரு தேர்விலும் தேர்ச்சி பெற்றனர். சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், இடைநிலை ஆசிரியர் அல்லது பட்டதாரி ஆசிரியர் பணி ஆகிய இரண்டில், இவர்கள் எதை விரும்புகின்றனரோ, அதை தேர்வு செய்து கொள்ளலாம்.இடைநிலை ஆசிரியரை விட, பட்டதாரி ஆசிரியருக்கு சம்பளமும்; பதவி உயர்வுக்கான வழி வகைகளும் அதிகம் உள்ளன. எனவே, பட்டதாரி ஆசிரியர் பணியையே பெரும்பாலானோர் தேர்வு செய்வர்.