SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Sunday, August 26, 2012

ONLY 2448 PASSED IN TET:RE EXAM ON OCTOBER 3RD


2,448 பேர் மட்டுமே தேர்ச்சி! அக்டோபர் 3-ல் ஆசிரியர் தகுதி மறுதேர்வு

First Published : 26 Aug 2012 12:22:55 AM IST

சென்னை, ஆக. 25: ஆசிரியர் தகுதித் தேர்வில் வெறும் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதால், சுமார் 6.74 லட்சம் பேருக்கு அக்டோபர் 3-ம் தேதி (புதன்கிழமை)
 மறுதேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி சென்னையில் சனிக்கிழமை அறிவித்தார்.
 பெரும்பாலான தேர்வர்களின் வேண்டுகோளை ஏற்று ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வு நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.
 ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (ட்ற்ற்ல்://ற்ழ்க்ஷ.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/) வெள்ளிக்கிழமை இரவு வெளியிடப்பட்டன. இரண்டு தாள்களையும் சேர்த்து தேர்வு எழுதிய 6.76 லட்சம் பேரில் 2,448 பேர் மட்டுமே (0.40%) தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இவர்களில் 14 மாற்றுத் திறனாளிகளும், 2 பார்வைத் திறன் குறைந்தவர்களும் அடங்குவர்.
 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் 5,451 இடைநிலை ஆசிரியர்களும், தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 18,922 பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
 இப்போது மிகக் குறைந்த எண்ணிக்கையிலே ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதால், சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு இவர்கள் அனைவரும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. மீதமுள்ள 22 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கவும், தேர்வில் வெற்றிபெறாதவர்களுக்கு வாய்ப்பளிக்கவும் மறுதேர்வு நடத்தப்படுகிறது.
 ஒவ்வொரு தாளிலும் எவ்வளவு பேர் தேர்ச்சி? தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கடந்த ஜூலை 12-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. 6.76 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
 முதல் தாளை எழுதிய 2 லட்சத்து 83 ஆயிரத்து 806 பேரில் 1,735 பேர் மட்டுமே தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 0.61%. இரண்டாம் தாளை எழுதிய 3 லட்சத்து 83 ஆயிரத்து 616 பேரில் 713 மட்டுமே தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 0.19%. முதல் தாள், இரண்டாம் தாள் ஆகிய இரண்டு தாள்களையும் எழுதிய 57 ஆயிரம் பேரில் 83 பேர் மட்டுமே இரண்டு தாள்களிலும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சியடைந்தவர்களில் 1680 பேர் பெண்கள், 768 பேர் ஆண்கள்.
 முதலிடங்களைப் பிடித்த பெண்கள்: ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் பொள்ளாச்சியைச் சேர்ந்த எம்.திவ்யா 150-க்கு 122 மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் சமூக அறிவியல் பாடத்தைத் தேர்ந்தெடுத்தவர்களில் உத்தமபாளையத்தைச் சேர்ந்த ஆர்.அருள்வாணி 150-க்கு 125 மதிப்பெண்ணும், கணிதப் பாடத்தில் தேர்வு எழுதியவர்களில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பி.சித்ரா என்பவர் 150-க்கு 142 மதிப்பெண்ணும் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
 மறுதேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை: ""வரும் அக்டோபர் 3-ம் தேதி நடைபெறும் மறுதேர்வுக்கு மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்காக மட்டுமே மறுதேர்வு நடத்தப்படுகிறது.
 எனவே, ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்தத் தேர்வில் பங்கேற்க முடியும்'' என்று சுர்ஜித் கே.சௌத்ரி தெரிவித்தார். இது தொடர்பாக, அவர் மேலும் கூறியது: ஆசிரியர் தகுதித் தேர்வில் குறைந்த எண்ணிக்கையிலான தேர்வர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றது அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
 பள்ளிகளில் ஆசிரியர் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பதால், இந்தத் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்ணை எடுக்காதவர்களுக்கு (150-க்கு 90 மதிப்பெண்) மறுதேர்வு நடத்த அரசு உத்தரவிட்டது. அதேபோல், தேர்வு நேரத்தை ஒன்றரை மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளதால், தேர்வு நேரமும் அதிகரிக்கப்படுகிறது.
 இதைத் தொடர்ந்து, வரும் அக்டோபர் 3-ம் தேதி (புதன்கிழமை) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்காக மறு தேர்வு நடத்தப்படும். அன்றைய தினம் ஆசிரியர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்கும் வகையில் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படும்.
 இந்தத் தேர்வு முடிவுகள் அக்டோபர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும். தேர்வுக்கான அழைப்புக் கடிதம் விரைவில் தேர்வர்களுக்கு அனுப்பப்படும்.
 13 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு: இப்போதுவரை 13 ஆயிரம் ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான பணிகள் முடிவடைந்துள்ளன. வரும் அக்டோபர் மாதத்துக்குள் 26 ஆயிரம் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகளும் முடிவடையும் என்றார் அவர்.

முதல் தாள் தேர்வு எழுதியோர் :2,83,806 தேர்ச்சி: 1,735
 இரண்டாம் தாள் தேர்வு எழுதியோர் :3,83,616 தேர்ச்சி: 713
 இரண்டு தாள்களையும் எழுதியோர் : 57,000 தேர்ச்சி: 83
 தேர்வு எழுதியவர்களின் மொத்த எண்ணிக்கை 6,76,763
 தேர்ச்சி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 2,448
 விடைத்தாளில் தவறுகளால் மதிப்பெண்ணை இழந்தவர்கள் 2,182

ஆண்டுக்கு இருமுறை தேர்வு
 சிரியர் தகுதித் தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. ஜூன் மாதம் ஒரு தேர்வும், டிசம்பரில் மற்றொரு தேர்வும் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
 இப்போதுள்ள அரசாணையின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் உள்ளதுபோல் விரைவில் இந்த அரசாணை ஆண்டுக்கு இருமுறை நடத்தும் வகையில் திருத்தப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதேபோல், ஒரு குறிப்பிட்ட தேதியில் இந்தத் தேர்வை நடத்தும் யோசனையும் தேர்வு வாரியத்தின் பரிசீலனையில் உள்ளது.

2,182 பேருக்கு மதிப்பெண் குறைப்பு
 சென்னை, ஆக. 25: ஆசிரியர் தகுதித் தேர்வில் சுமார் 1.50 லட்சம் பேர் தங்களது விண்ணப்பங்களில் பல்வேறு தவறுகளைச் செய்திருந்தனர். அவர்களுக்கு தவறுகளைத் திருத்த பல்வேறு வாய்ப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கியது.
 இந்த நிலையில், தேர்வு நாளன்றும் தவறுகளைச் செய்தவர்களுக்கு மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது.
 இதனடிப்படையில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு இரண்டு தாள்களிலும் மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. விடைத்தாளில் வினாத்தாள் புத்தக எண்ணைக் குறிப்பிடாதவர்களுக்கு 5 மதிப்பெண்ணும், தேர்வு எழுதும் பாடத்தைத் தவறாகக் குறிப்பிட்டுள்ளவர்களுக்கு 3 மதிப்பெண்ணும், சரியான மொழிப்பாடத்தைக் குறிப்பிடாதவர்களுக்கு 2 மதிப்பெண் வரையிலும் குறைக்கப்பட்டுள்ளது. இந்தத் தவறுகளால் முதல் தாளில் 685 பேருக்கும், இரண்டாம் தாளில் 1,497 பேருக்கும் மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. விடைத்தாளை எடுத்துச் சென்ற தேர்வர்கள் தகுதியிழந்தவர்களாகக் கருதப்பட்டனர்.
 அதேபோல், வேறு தேர்வு எண்ணை எழுதியவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படவில்லை. சில தேர்வர்களின் கையொப்பங்கள் விண்ணப்பம், விடைத்தாளில் வெவ்வேறாக இருந்தன. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதிலிருந்து 5 ஆண்டுகளுக்கு அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

6.76 லட்சம் பேரில் 2448 பேர் மட்டுமே பாஸ்

ஆசிரியர்களுக்கு மீண்டும் தேர்வு


சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் எழுதிய தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெறாத 6.74 லட்சம் பேருக்கு அக்டோபர் 3ம் தேதி மீண்டும்  தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று, 2009ம் ஆண்டு மத்திய அரசு சட்டம் இயற்றியது. இதன் அடிப்படையில், தமிழகத்தில் கடந்த ஜூலை 12ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.  மாநிலம் முழுவதும் 1,027 தேர்வு மையங்களில் 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் தேர்வு எழுதினர். தேர்வில் பங்கேற்றவர்கள் 150 மதிப்பெண்களில் 60 சதவீதம் அதாவது 90 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே ‘பாஸ்’ என கூறப்பட்டிருந்தது

.தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளை எதிர்த்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆகஸ்ட் 10ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரியை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது.  ஆனால், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதற்கு கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. இதனால், தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே, திருவண்ணாமலை மாவட்டம் மேல்மலையூரை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை ஐகோர்ட் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இதையறிந்த ஆசிரியர் தேர்வு வாரியம், அவசர அவசரமாக நேற்று அதிகாலை 2 மணியளவில் தகுதி தேர்வு முடிவுகளை இணையதளத்தில்   (ஷ்ஷ்ஷ்.tக்ஷீதீ.tஸீ.ஸீவீநீ.வீஸீ)   அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. 

மொத்தம் தேர்வு எழுதிய 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேரில் வெறும் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 6 லட்சத்து 74 ஆயிரத்து 315 பேர் ‘பெயில்‘ ஆகி உள்ளனர். இது தேர்வு எழுதிய ஆசிரியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், தேர்ச்சி பெறாத 6 லட்சத்து 74 ஆயிரத்து 315 ஆசிரியர்களுக்கும் அக்டோபர் 3ம் தேதி கட்டணம் எதுவும் இல்லாமல் மீண்டும் தேர்வு எழுத ஒரு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி அறிவித்தார். ஆசிரியர் தகுதி தேர்வின்அடிப்படையில் 18,000 பட்டதாரி ஆசிரியர்களும், 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்பட முடிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.2,448 பேருக்கு உடனே வேலை: ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி, சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:தேர்வில் 60 சதவீதம் அதாவது 90 மதிப்பெண் மற்றும் அதற்கு மேல் பெற்றவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.விடைத்தாளில் வினாத்தாளின் வரிசை எண்ணை குறிப்பிடாதவர்களுக்கு 5 மார்க், விடைத்தாளில் பாடப்பிரிவை குறிப்பிடாதவர்களுக்கு 3 மார்க், விருப்ப மொழியை எழுதாதவர்களுக்கு 2 மார்க் குறைக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதி விட்டு ஒரிஜினல் விடைத்தாளை (ஓஎம்ஆர் சீட்) கொடுக்காதவர்களின் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

விடைத்தாளில் தேர்வு எண்ணை எழுதாமல் போலி எண் எழுதியவர்கள் பேப்பரும் திருத்தப்படவில்லை. பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 2 பேரின் விடைத்தாளில் உள்ள கையெழுத்தும், விண்ணப்பத்தில் உள்ள கையெழுத்தும் மாறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் 5 ஆண்டு பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இடைநிலை ஆசிரியருக்காக நடத்தப்பட்ட தகுதி தேர்வை (தாள்,1) மொத்தம் 2 லட்சத்து 88 ஆயிரத்து 588 பேர் எழுதினர். இதில், 1,735 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 0.61 சதவீத தேர்ச்சி ஆகும். பட்டதாரி ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட தேர்வை (தாள்,2) மொத்தம் 3 லட்சத்து 88 ஆயிரத்து 175 பேர் எழுதினர். இதில் 713 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 0.19 தேர்ச்சி ஆகும். இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் என இரண்டு தேர்வையும் (தாள்,1, தாள்,2) எழுதிய 83 பேர் தேர்வாகி உள்ளனர்.

 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் இரண்டையும் சேர்த்து மொத்தம் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 1,680 பேர் பெண்கள், 768 பேர் ஆண்கள். ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேரில் 6 லட்சத்து 74 ஆயிரத்து 315 பேர் ‘பெயில்‘ ஆகியுள்ளனர். 17 உடல் ஊனமுற்றோர்களும், 2 கண் பார்வை இல்லாதவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாக ஆசிரியர் வேலை வழங்கப்படும். தேர்ச்சி பெறாத 6 லட்சத்து 74 ஆயிரத்து 315 பேருக்கும் அக்டோபர் 3ம் தேதி தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். இந்த தேர்வுக்கு அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம். இவர்களுக்கு விரைவில் ஹால் டிக்கெட் அனுப்பி வைக்கப்படும். அக்டோபர் மாதம் இறுதிக்குள் முடிவுகள் வெளியிடப்படும். மறுதேர்வுக்கு கூடுதலாக ஒன்றரை மணி நேரம் வழங்கப்படும். இவ்வாறு சுர்ஜித் கே.சவுத்ரி கூறினார்.



35 சதவீதம் பெற்றால் பாஸ்
ஆசிரியர்கள் கேட்கின்றனர்

ஆசிரியர் தகுதி தேர்வில் அதிகம் பேர் 60 மதிப்பெண்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ‘பள்ளி மாணவர்களுக்கு உள்ளது போன்று எங்களுக்கும் 35 சதவீதம் எடுத்தால் ‘பாஸ்‘ என்று அறிவிக்க வேண்டும்’ என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.

முதல் 3 இடங்களை பெண்களே பிடித்தனர்

இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வில் பொள்ளாச்சியை சேர்ந்த திவ்யா 150க்கு 122 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், திண்டுக்கல் சவீதா, திருச்சி ஷோபனா ஆகியோர் தலா 116 மதிப்பெண் பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் உத்தமபாளையத்தை சேர்ந்த அருள்வாணி 125 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், ஏ.பிருந்தா, சித்ரா இருவரும் 124 மதிப்பெண் பெற்று 2வது, 3வது இடத்தை பெற்றுள்ளனர். பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில்கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் நாகப்பட்டினத்தை சேர்ந்த சித்ரா 150க்கு 142 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த ஷர்மிளா 131 மதிப்பெண் பெற்று 2வது இடத்தையும், உத்தமபாளையத்தை சேர்ந்த ஆர்.பிருந்தாதேவி 117 மதிப்பெண் பெற்று 3ம் இடத்தையும் பிடித்துள்ளனர். இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் முதல் 3 இடங்களையும் 9 பெண்களே பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


அக்டோபர் 3ம் தேதி
பள்ளிக்கு விடுமுறை

ஆசிரியர் தகுதி தேர்வில் பெயிலான 6 லட்சத்து 74 ஆயிரத்து 315 பேருக்கும் அக்டோபர் 3ம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அக்டோபர் 3ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2ம் தேதி (செவ்வாய்) காந்தி ஜெயந்தி அன்றும் அரசு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: