SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Friday, July 06, 2012

life threat to nursery school teacher

ஆசிரியைக்கு கொலை மிரட்டல்: பள்ளி தாளாளருக்கு வலை


பல்லடம்: ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த, பள்ளி தாளாளரை போலீசார் தேடி வருகின்றனர். கோவையில், ப.வடுகபாளையத்தில், நர்சரி பள்ளி நடத்தி வருபவர் பாலசுப்ரமணியம், 50. இவரது பள்ளியில், அதே பகுதியை சேர்ந்த பாலசரஸ்வதி, 34, ஆசிரியையாக பணிபுரிகிறார். இவரது மகள்கள் மதுஸ்ரீ, ஐந்தாம் வகுப்பும், அபிநயஸ்ரீ முதல் வகுப்பும், இதே பள்ளியில் படித்து வருகின்றனர். மகள்களை, வேறு பள்ளியில் சேர்க்க, பால சரஸ்வதி முயன்றார். பள்ளி நிர்வாகத்திடம் மாற்றுச் சான்றிதழ் (டி.சி.,) கேட்ட நிலையில், கோபமடைந்த தாளாளர் பாலசுப்ரமணியம், தன்னிடம் கடனாக வாங்கிய, 20 ஆயிரம் ரூபாயை, உடனடியாக திருப்பிக் கொடுத்தால், மாற்றுச் சான்றிதழ் தருவதாகக் கூறினார். இதற்கு பாலசரஸ்வதி, சில மாதம் அவகாசம் கேட்டார். மறுப்பு தெரிவித்த பாலசுப்ரமணியம், ஆசிரியை வீட்டுக்குச் சென்று, "டிவி' மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்களை எடுத்துச் செல்ல முயன்றதாகவும், அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கவலையடைந்த ஆசிரியை, விஷம் குடித்து, பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆசிரியை பால சரஸ்வதி கொடுத்த புகார் அடிப்படையில், பல்லடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள தாளாளர் பாலசுப்ரமணியத்தை தேடி வருகின்றனர்.

No comments: