கல்வி உரிமைச் சட்டம் குறித்த நீதிபதியின் கேள்விகளுக்கு மத்திய அரசு பதில்தர வேண்டும்: கருணாநிதி
சென்னை, ஜூலை 7: மத்திய அரசு நிறைவேற்றியுள்ள இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மீது சென்னை உயர்நீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பியுள்ளது.. இதற்கு மத்திய அரசு பதிலளிக்க முன்வரவேண்டும் என்று கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட கேள்வி-பதில் பாணியிலான அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
"மத்திய அரசு நிறைவேற்றியுள்ள இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தைப் பற்றி சென்னை உயர் நீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பியிருக்கிறதே?” என்ற கேள்விக்கு கருணாநிதியின் பதில்...
"இந்தச் சட்டத்தின்படி ஆறு முதல் பதினான்கு வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கல்வி இலவசமாக வழங்கு வதற்கு உரிய வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. கல்விக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிக்கூடங்களிலும், 25 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்ய வேண்டும். எல்லா வகுப்புகளுக்கும் தனியார்பள்ளிக்கூடங்களில் 25 சதவிகித இட ஒதுக்கீடு உண்டு என்றுதான் நினைத்தார்கள். ஆனால் இந்த ஆண்டு முதல் வகுப்புக்கு மட்டும், இந்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இது பலருக்குத் தெரியாது. இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டன. எல்லாகுழப்பங்களுக்கும் விடை தெரியும் வகையில், வினாக்களை எழுப்பும் நமது சென்னை உயர் நீதி மன்றம், இந்தப் பிரச்சினையிலும் வழக்கு தொடர்ந்துள்ள ஐந்து பெற்றோர்களின் மனுக்களை விசாரிக்கும்போது நீதியரசர் கே.சந்துரு பல தெளிவற்ற விவகாரங்கள் இதிலே இருப்பதைச் சுட்டிக்காட்டி யிருக்கிறார். நீதிபதி அவர்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கெல்லாம் இந்தச் சட்டத்தில் சரியான விளக்கம் இல்லை. உதாரணமாக

பக்கத்தில் உள்ள பள்ளிக் கூடங்களில் 25 சதவீத இட ஒதுக்கீடு என்றால், எந்தப்பகுதியைப் பக்கத்தில் உள்ள பகுதி என்று நிர்ணயிப்பது? பெற்றோர் தங்கள் பிள்ளைகளை சேர்க்க முற்படும்போது தங்களுக்கு விருப்பப்பட்டபள்ளிக் கூடத்தையும் தேர்ந்தெடுக்க முடியுமா?
இது பற்றிய புகாரை பெற்றோர் கொடுக்க வேண்டுமென்றால் யாரிடம் கொடுப்பது?
இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப் படுவதை யார் கண்காணிப்பது?
பள்ளிக்கூடங்களே மாணவர்களைத் தேர்ந்தெடுக்க முடியுமா, அப்படியென்றால், அதற்கு எந்த முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்?
ஒருவேளை அந்தப் பள்ளிக் கூடத்தில் எல்.கே.ஜி. வகுப்பு இருந்தால், அதில் இந்த மாணவர்களைச் சேர்க்க முடியாதா?
ஒரு பகுதியில் இரண்டு, மூன்று பள்ளிக் கூடங்கள் இருந்தால், அதில் எந்தப் பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் இலவச கல்வி பெற முடியும்?
இலவசக் கல்வி மட்டும் என்றால், அவர்களுக்கு சீருடை, கல்விச் சுற்றுலா உள்ளிட்ட மற்ற செலவுகள் வழங்கப்படுமா? என்று அடுக்கடுக்காக உயர் நீதிமன்ற நீதியரசர் நல்ல பல சந்தேகங்களையெல்லாம் எழுப்பி யிருக்கிறார். மத்திய அரசு இந்தக் கேள்வி களுக்கெல்லாம் நல்ல, முறையான விளக்கங்களை அளிக்க முன் வர வேண்டும். அப்போது தான் மத்திய அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததின் நோக்கத்தின் பலன்களை அனைவரும் அடைய முடியும்.”
No comments:
Post a Comment