ஆசிரியர் பயிற்சிக்கு குறைகிறது மவுசு: நாளை தரவரிசைப் பட்டியல்-29-06-2012
ஆசிரியர் பயிற்சிக்கான தரவரிசை பட்டியல், நாளை வெளியிடப்படுகிறது. மிகக் குறைந்த அளவில் விண்ணப்பங்கள் வந்திருப்பதன் காரணமாக, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, மூன்று இடங்களுக்குப் பதிலாக, ஒரே ஒரு இடத்தில் நடக்கிறது.
சென்னை: ஆசிரியர் பயிற்சிக்கான தரவரிசை பட்டியல், நாளை வெளியிடப்படுகிறது. மிகக் குறைந்த அளவில் விண்ணப்பங்கள் வந்திருப்பதன் காரணமாக, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, மூன்று இடங்களுக்குப் பதிலாக, ஒரே ஒரு இடத்தில் நடக்கிறது.இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சிக்கு, 4,100 விண்ணப்பங்கள் விற்பனையானது. 3,864 பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பினர்.
அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில், 2,970 இடங்களும்; அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1,758 இடங்களும் உள்ளன. இதனால், விண்ணப்பித்த அனைவருக்கும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலேயே இடம் கிடைக்கும். விண்ணப்பித்த மாணவர்களின், தரவரிசை பட்டியலை, நாளை இணையதளத்தில் (www.tnscert.org) வெளியிட, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
வழக்கமாக, திருச்சி நகரில், மூன்று இடங்களில் கலந்தாய்வு நடக்கும். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு, குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே விண்ணப்பித்து இருப்பதால், திருச்சி பிராட்டியூர் மேற்கில் உள்ள ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரியில் மட்டும், கலந்தாய்வு நடக்கிறது.
ஜூலை 5ம் தேதி துவங்கும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, 10ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான அழைப்புக் கடிதங்களை, 2, 3 ஆகிய தேதிகளில், விண்ணப்பங்களை ஒப்படைத்த மையங்களுக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம்; அதற்கு முன்னதாகவே இணையதளத்திலும், "ஹால் டிக்கெட்&' வெளியிடப்படும்.
விண்ணப்பித்த மாணவர்களில், 5 சதவீதம் பேர் வரை, வராமல் போகலாம் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment