திட்டமிட்டபடி ஜூன் 3-ல் ஆசிரியர் தகுதித் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பேட்டி
சென்னை, மே 18: ஆசிரியர் தகுதித் தேர்வு திட்டமிட்டபடி ஜூன் 3-ம் தேதி நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் கே. சௌத்ரி கூறினார்.
ஆசிரியர் தகுதித் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாள்களாக ஆலோசனை நடத்தி வந்தனர். அதேபோன்று, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடைபெறுவுள்ள மே 27-ம் தேதி, ரயில்வே தேர்வு ஒன்று நடைபெறுவதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுகள் நடைபெறும் தேதியில் எந்தவித மாற்றமும் இல்லை என்று ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் கே. சௌத்ரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக, சென்னையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை மே 27-ம் தேதி நடத்துவது தொடர்பாக மூன்று மாதங்களுக்கு முன்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது, டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட பிற தேர்வாணையங்களின் தேர்வுகள் நடைபெறுகிறதா என்பதை சரிபார்த்த பிறகே தேதி அறிவிக்கப்பட்டது.
பெங்களூர் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் இளநிலைப் பொறியாளர் உள்ளிட்டப் பணியிடங்களுக்கான தேர்வு அன்றைய தினம் நடைபெறுகிறது. பொறியியல், பாலிடெக்னிக் படித்தவர்கள் மட்டுமே இந்தத் தேர்வில் பங்கேற்க முடியும். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கும் இந்தத் தேர்வுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.
இரண்டுத் தேர்வுகளுக்கும் வெவ்வேறான தகுதிகள் தேவை என்பதால் இந்தத் தேதியில் எந்தவித மாற்றமும் இருக்காது.
1.52 லட்சம் பேர்: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு தமிழகம் முழுவதும் மொத்தம் 1.52 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தத் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆசிரியர் தேர்வு வாரியம் செய்துமுடித்துள்ளது. தமிழகம் முழுவதும் 740 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெறும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 6.56 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தத் தேர்வு தொடர்பான பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ளன.
தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் தபால் மூலமாக அனுப்பப்படும். இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்படும்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் அடுத்த 6 மாதத்தில் மொத்தம் 42 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதனால், ஆசிரியர் தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு தேர்வை தள்ளிவைப்பதால் அடுத்தடுத்து பணிகள் பாதிக்கப்படும். எனவே, அறிவிக்கப்பட்டபடி, ஜூன் 3-ம் தேதி இந்தத் தேர்வு நடைபெறும். ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 18,343 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறும் இடைநிலை ஆசிரியர்களில் பதிவு மூப்பின் அடிப்படையில் 5,451 பேர் இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கபட உள்ளனர்.
ஜூன் இறுதிக்குள் தேர்வு முடிவுகள்: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வு முடிவுகளும் ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும். இந்தத் தேர்வுகளை வெளிப்படையாக நடத்தும் வகையில் விடைகள், தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றார் சுர்ஜித் கே. சௌத்

No comments:
Post a Comment