நாகபட்டினம் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட அலுவலகம் ஈஸ்வரன் மாளிகையில் கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள மக்கள் கல்விப்பறைசாற்றம் கல்வி அறிக்கை விளக்கக் கூட்டம் நேற்றுவட்டாரச் செயலாளர் கி.பாலசண்முகம் தலைமையில்நடைபெற்றது.
2016 சட்டமன்றத் தேர்தல் களத்தில்தமிழக
அரசியல் கட்சிகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள கல்வியாளர்கள், பள்ளி-கல்லூரி ஆசிரியர் இயக்கத்தினர், சமூக நல அமைப்பினர் சார்பாகமுன்வைக்கப்படும் கல்விக்கோரிக்கைகள் பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
நாகபட்டினம் மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் கல்வியாளருமான எம்.ஜி.கே. நிஜாமுதீன் அவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது: கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு சார்பாக மக்கள் கல்விப் பறைசாற்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கல்விக் கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்வதோடு, இக்கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியளிக்கவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நடைபெறும் கல்வி வணிகத்தின் மூலமாக ஆயிரம் கோடிக்கு மேல் கருப்புப்பணம் புழங்குகிறது. கல்வி தனியார்மயமாக்கப்பட்டதால் அரசுப்பள்ளிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டு வருகிறது. அரசுப்பள்ளிகள் இல்லாத போது அரசுப்பள்ளி ஆசிரியர்களே இல்லாத நிலை விரைவில் ஏற்பட்டுவிடும். ஏழைக் குழந்தைகளுக்கு தரமான கல்வியும் கிடைக்காமல் போய்விடும். எனவே அரசுப்பள்ளி ஆசிரியர் இயக்கங்கள் ஒன்றுபட்டு மிகத் தீவிரமாக தனியார்மயக் கல்விக்கு எதிராகப் போராடவேண்டும்.
கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின்ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்திதனது விளக்கவுரையில் குறிப்பிட்டதாவது:
மக்கள் கல்விப் பறைசாற்றஅறிக்கையில் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அரசியல் கட்சிகளும் ஆட்சியாளர்களும் செய்யவேண்டியது என்ன என்பதுஎழுதப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின்மூத்த கல்வியாளர்கள் முனைவர் வே.வசந்திதேவி, ச,சீ,இராசகோபாலன் மற்றும் பலகல்வியாளர்களால் உருவாக்கப்பட்டஇக்கல்வி அறிக்கை தமிழ்நாட்டின்அனைத்து அரசியல் கட்சிகளுக்கும்நேரில் கொடுக்கப்பட்டுள்ளது.கல்வியை அனைவருக்கும் தரமானநிலையில், பாகுபாடில்லாமல்கட்டணம் இல்லாமல்வழங்கவேண்டியது ஒரு மக்களாட்சிஅரசாங்கத்தின் கடமை. கல்வியைவிற்பனைப் பண்டமாக மாற்றியது குழந்தைகளுக்கு செய்த துரோகம், கல்வி வணிகம் மூலம் பணம் சம்பாதிப்பது ஒரு சமூகக் குற்றம். கல்வி வணிகம் இன்று கருப்புப் பணஉற்பத்திக்கு வழிவகுக்கும்அளவிற்கு நடைபெறுகிறது. கல்வி வணிகத்தை ஒழிக்காமல் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியாது. கல்வியில் தனியார் முதலாளிகளின் வணிக நோக்கத்தினால் விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று யோகாமருத்துவ மாணவிகள் உயிரிழக்கும்நிலை ஏற்பட்டது. தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் பல பெற்றோர்கள் தற்கொலை செய்து கொள்வதும் நடந்துவருகிறது. மக்களிடம் கல்விக்கென்று வரி வசூலித்துவிட்டு கட்டணம் கட்டிப் படித்தால் தான் தரமான கல்வி கிடைக்கும் நிலைமைகள் உருவாகவழிவகுத்தது மக்களாட்சி நெறிகளுக்கு எதிரானது. இந்தநிலைமைகளை மாற்றுவதற்க்கானகோரிக்கைகள் இந்த மக்கள்கல்விப் பறைசாற்றத்தில்இடம்பெற்றுள்ளன. அனைத்துஅரசியல் கட்சிகளும் இக்கோரிக்கைகளை நிறைவேற்ற தேர்தல் அறிக்கை மூலமாகமும் தேர்தல் பரப்புரை மூலமாகவும் தமிழக மக்களிடம்உறுதியளிக்கவேண்டும். கல்விக் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியளிக்கும் கட்சிகளுக்கு மட்டும் மக்கள் வாக்களிக்கவேண்டும்.
இக் கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப் பல்ளி ஆசிரியர் கூட்டணியின் மேனாள் மாநிலத் துணைத்தலைவர் இரா.முத்துக்கிருஷ்ணன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் வட்டாரத் தலைவர் வெ.சிவகுருநாதன், கல்வி மேம்பாட்டுக் கூடமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ந.குணசேகரன், செ.மணிமாறன், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ச.இளமாறன் உட்பட 50 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
2016 சட்டமன்றத் தேர்தல் களத்தில்தமிழக அரசியல் கட்சிகளுக்குமக்கள் கல்விப் பறைசாற்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட கல்விக்கோரிக்கைகள்:முதன்மையாக வலியுறுத்துவது என்று இக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
1. கல்வியில் வணிகமயத்தைஒழித்தல்,
2. ஏற்றத்தாழ்வு இல்லாத. கல்விவழங்க பொதுப்பள்ளி முறையைஉருவாக்குதல்,
3. தனியார் பள்ளிகளைப்பொதுப்பள்ளிகளாக அறிவித்துகட்டணமில்லாமல் கல்விவழங்குதல்,
4. அருகமைப் பள்ளி முறையைநடைமுறைப்படுத்தி குழந்தைநேயமிக்க, சமத்துவக் கல்விவழங்குதல்,
5. குருட்டு மனப்பாடம் – மதிப்பெண்போட்டியை ஒழிக்க +1, +2வகுப்புகளுக்கு பிற மாநிலங்களில்உள்ளது போல் பருவத்தேர்வுமுறையை நடைமுறைப்படுத்துதல்,
6. முழுமையாக தாய்மொழி வழிக்கல்வியை நடைமுறைப்ப்டுத்த சட்டம்இயற்றுதல்,
7. கல்வியை மாநிலப் பட்டியலுக்குமீட்டெடுத்தல்,
8. அரசுப்பள்ளிகளை மேம்படுத்தகல்விக்கான நிதி ஒதுக்கீடுகளைஅதிகரித்தல்
9. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்,ஆட்சியாளர்களின் குழந்தைகளைஅரசுப்பள்ளியில் சேர்க்க சட்டம் இயற்றுதல்,
10. கல்வி உரிமைச் சட்டம்வலியுறுத்தியுள்ள வசதிகளைநிறைவேற்றாத தனியார்பள்ளிகளை அரசே ஏற்று நடத்துதல்
---------- Forwarded message ----------
From: "சு. மூர்த்தி" <moorthy.teach@gmail.com>
Date: 20-Apr-2016 7:53 am
Subject: மக்கள் கல்விப் பறைசாற்றம் - கல்வி அறிக்கை விளக்கக் கூட்டம்
To: "thodakapalli asiriyar kootani Nagapattinam" <koottaninagapattinam@gmail.com>
Cc:நாகபட்டினம் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட அலுவலகம் ஈஸ்வரன் மாளிகையில் கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள மக்கள் கல்விப் பறைசாற்றம் கல்வி அறிக்கை விளக்கக் கூட்டம் நேற்று வட்டாரச் செயலாளர் கி.பாலசண்முகம் தலைமையில் நடைபெற்றது.
2016 சட்டமன்றத் தேர்தல் களத்தில் தமிழக
அரசியல் கட்சிகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள கல்வியாளர்கள், பள்ளி-கல்லூரி ஆசிரியர் இயக்கத்தினர், சமூக நல அமைப்பினர் சார்பாக முன்வைக்கப்படும் கல்விக் கோரிக்கைகள் பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
நாகபட்டினம் மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் கல்வியாளருமான எம்.ஜி.கே. நிஜாமுதீன் அவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது: கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு சார்பாக மக்கள் கல்விப் பறைசாற்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கல்விக் கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்வதோடு, இக்கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியளிக்கவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நடைபெறும் கல்வி வணிகத்தின் மூலமாக ஆயிரம் கோடிக்கு மேல் கருப்புப்பணம் புழங்குகிறது. கல்வி தனியார்மயமாக்கப்பட்டதால் அரசுப்பள்ளிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டு வருகிறது. அரசுப்பள்ளிகள் இல்லாத போது அரசுப்பள்ளி ஆசிரியர்களே இல்லாத நிலை விரைவில் ஏற்பட்டுவிடும். ஏழைக் குழந்தைகளுக்கு தரமான கல்வியும் கிடைக்காமல் போய்விடும். எனவே அரசுப்பள்ளி ஆசிரியர் இயக்கங்கள் ஒன்றுபட்டு மிகத் தீவிரமாக தனியார்மயக் கல்விக்கு எதிராகப் போராடவேண்டும்.
கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி தனது விளக்கவுரையில் குறிப்பிட்டதாவது:
மக்கள் கல்விப் பறைசாற்ற அறிக்கையில் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அரசியல் கட்சிகளும் ஆட்சியாளர்களும் செய்யவேண்டியது என்ன என்பது எழுதப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மூத்த கல்வியாளர்கள் முனைவர் வே.வசந்திதேவி, ச,சீ,இராசகோபாலன் மற்றும் பல கல்வியாளர்களால் உருவாக்கப்பட்ட இக்கல்வி அறிக்கை தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நேரில் கொடுக்கப்பட்டுள்ளது. கல்வியை அனைவருக்கும் தரமான நிலையில், பாகுபாடில்லாமல் கட்டணம் இல்லாமல் வழங்கவேண்டியது ஒரு மக்களாட்சி அரசாங்கத்தின் கடமை. கல்வியை விற்பனைப் பண்டமாக மாற்றியது குழந்தைகளுக்கு செய்த துரோகம், கல்வி வணிகம் மூலம் பணம் சம்பாதிப்பது ஒரு சமூகக் குற்றம். கல்வி வணிகம் இன்று கருப்புப் பண உற்பத்திக்கு வழிவகுக்கும் அளவிற்கு நடைபெறுகிறது. கல்வி வணிகத்தை ஒழிக்காமல் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியாது. கல்வியில் தனியார் முதலாளிகளின் வணிக நோக்கத்தினால் விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று யோகா மருத்துவ மாணவிகள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் பல பெற்றோர்கள் தற்கொலை செய்து கொள்வதும் நடந்துவருகிறது. மக்களிடம் கல்விக்கென்று வரி வசூலித்துவிட்டு கட்டணம் கட்டிப் படித்தால் தான் தரமான கல்வி கிடைக்கும் நிலைமைகள் உருவாக வழிவகுத்தது மக்களாட்சி நெறிகளுக்கு எதிரானது. இந்த நிலைமைகளை மாற்றுவதற்க்கான கோரிக்கைகள் இந்த மக்கள் கல்விப் பறைசாற்றத்தில் இடம்பெற்றுள்ளன. அனைத்து அரசியல் கட்சிகளும் இக் கோரிக்கைகளை நிறைவேற்ற தேர்தல் அறிக்கை மூலமாகமும் தேர்தல் பரப்புரை மூலமாகவும் தமிழக மக்களிடம் உறுதியளிக்கவேண்டும். கல்விக் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியளிக்கும் கட்சிகளுக்கு மட்டும் மக்கள் வாக்களிக்கவேண்டும்.
இக் கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப் பல்ளி ஆசிரியர் கூட்டணியின் மேனாள் மாநிலத் துணைத்தலைவர் இரா.முத்துக்கிருஷ்ணன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் வட்டாரத் தலைவர் வெ.சிவகுருநாதன், கல்வி மேம்பாட்டுக் கூடமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ந.குணசேகரன், செ.மணிமாறன், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ச.இளமாறன் உட்பட 50 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
2016 சட்டமன்றத் தேர்தல் களத்தில் தமிழக அரசியல் கட்சிகளுக்கு மக்கள் கல்விப் பறைசாற்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட கல்விக் கோரிக்கைகள்:முதன்மையாக வலியுறுத்துவது என்று இக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
1. கல்வியில் வணிகமயத்தை ஒழித்தல்,
2. ஏற்றத்தாழ்வு இல்லாத. கல்வி வழங்க பொதுப்பள்ளி முறையை உருவாக்குதல்,
3. தனியார் பள்ளிகளைப் பொதுப்பள்ளிகளாக அறிவித்து கட்டணமில்லாமல் கல்வி வழங்குதல்,
4. அருகமைப் பள்ளி முறையை நடைமுறைப்படுத்தி குழந்தை நேயமிக்க, சமத்துவக் கல்வி வழங்குதல்,
5. குருட்டு மனப்பாடம் – மதிப்பெண் போட்டியை ஒழிக்க +1, +2 வகுப்புகளுக்கு பிற மாநிலங்களில் உள்ளது போல் பருவத்தேர்வு முறையை நடைமுறைப்படுத்துதல்,
6. முழுமையாக தாய்மொழி வழிக் கல்வியை நடைமுறைப்ப்டுத்த சட்டம் இயற்றுதல்,
7. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீட்டெடுத்தல்,8. அரசுப்பள்ளிகளை மேம்படுத்த கல்விக்கான நிதி ஒதுக்கீடுகளை அதிகரித்தல்
9. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஆட்சியாளர்களின் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க சட்டம் இயற்றுதல்,
10. கல்வி உரிமைச் சட்டம் வலியுறுத்தியுள்ள வசதிகளை நிறைவேற்றாத தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்துதல்
No comments:
Post a Comment