தமிழக பள்ளிக் கல்வித்துறை இவற்றையெல்லாம் செய்யுமா?
தமிழகத்தில் பள்ளி வளாகங்களில் ஆசிரியர்கள், மாணவர்கள் மீது வன்முறை தாக்குதல் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம். தேர்ச்சி சதவீதம் மற்றும் மதிப்பெண் அதிகரிக்க மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை நிர்பந்தங்களை ஏற்படுத்தி வருகிறது.
பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பாடங்களை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டியதும், முக்கிய கடமை என கல்வித் துறை அதிகாரிகள் உணர வேண்டும்.
மாற்றங்கள் தேவை: தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு வழங்க மாநில அரசு சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்.
பள்ளி வளாகத்தில் வன்முறையால் பாதிக்கும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, இரவு காவலர் உள்ளிட்ட அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.
அனைத்து பள்ளிகளிலும், சிசிடிவி (குளோஸ் சர்க்கியூட் கண்காணிப்பு கேமிரா) பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதம் மற்றும் மதிப்பெண் அதிகரிக்க மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை நிர்பந்தப்படுத்தும் கெடுபிடி நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை கைவிட வேண்டும்.
இலவச கல்வி உபகரணங்களை வழங்குவது மட்டுமின்றி, நீதி போதனை மற்றும் நல்லொழுக்கத்தை மாணவர்களுக்கு கற்பிக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment